உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 5, 2010

உன்னால் முடியும் தம்பி

நல்ல கைகால் இருந்தும், நல்ல படிப்பு இருந்தும் பிறறைக் குறை கூறிக் கொண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையை வினடித்துகொண்டிருக்கும் நம் தமிழ்கத்து சகோதர சகோதிரிகள்.இந்த சகோதரி ஜெஸிகா காக்ஸைப் பற்றி தெரிந்து கொண்டால் எதற்கும் கவலைப்பாடாமல், யாரையும் குறைச்சொல்லாமல், முயற்சி செய்தால் வாழ்க்கையில் வசந்தத்தை தேடிச்செல்லாம்.


ஜெஸிகா பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தார். ஆனால் அவரின் தாயாரோ எந்தவித அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் குழந்தையை வளர்த்தார்.

அந்த குழந்தை ஜெஸிகாவோ இப்போது மனோத்துவ பட்டாதாரி, அவளுக்கோ அவளின் கால்தான் கை மாதிரி. காலை வைத்து நன்றாக எழுதவும், டைப்பு அடிக்கவும், தலை வாரவும் முடியும்.டைப்போ நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை அடிக்கமுடியும்.அவளாள் காலைவைத்து நன்றாக கார் மற்றும் விமானம் ஒட்டமுடியும். அதற்கான முறையான லைசன்ஷ்ம் முறைப்படி எடுத்துள்ளார்.( நம் தமிழகத்து மக்களைப் போல லஞ்சம் கொடுத்து வாங்கியதுல்ல) .இதுமட்டுமல்லாமல் நன்றாக நடனமும் ஆடக்கூடியவர்.அமெரிகாவிலே முதன் முதலில் டைக்குவாண்டோ என்னும் தற்காப்பு பயிற்சியில் முதன் முதலில் இரண்டு ப்ளாக் பெல்ட் வாங்கிய கையில்லாத பெண்மணி இவர்தான்.அவருக்கும் அவரது விடாமுயற்சிக்கும், திறைமைக்கும் நாம் இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்தி அவரை நமது மானசீக குருவாக ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.கிழே அவரது புகைப் படங்களும் , அவரைப் பற்றிய விடியோ க்ளிப்புகளும் உள்ளன........அவர் பிறந்தது அமெரிக்காவிலுள்ள அரிஸோனா மாநிலத்திலுள்ள டஸ்கான் என்னும் ஊர் ஆகும்.
3 comments :

 1. மிக அருமையான பதிவு, படித்தவர்களால் இந்த நம்பிக்கை நட்சத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும் அதனால் தான் ஒருவர் கூட பதிவிற்கு பதில் போடவில்லை போலும்....

  தொடரட்டும் உங்களின் நல்ல பணி

  ReplyDelete
 2. மிக அருமையான பதிவு

  ReplyDelete
 3. Useful informative to all the world to all of us.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog