Friday, August 6, 2010

முதலில் நாம் சகோதரி ஜெஸிகாவைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த வலைப்பக்கத்தில் சகோதரர் ( Nick Vujicic )


நிக்கைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நாமோ நல்ல கை கால்களுடன் பிறந்த நாமோ கடவுளை பெற்றோர்களை, உறவினர்களை, நண்பர்களை, அல்லது தலைவர்களையோ குறைக் கூறிக்கொண்டு அவர்கள் இப்படி பண்ணவில்லை அல்லது அப்படிப் பண்ணவில்லை அல்லது இப்படிப் பண்ணியிருந்தால் அல்லது இப்படி உதவியிருந்தால் நான் வாழ்க்கையில் நலமாகயிருந்திருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருப்போம்.

  

பிறக்கும் போதே இரண்டு கைகள் மட்டுமில்லாமல் இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்தார் நிக் வஜுக் ,வாழ்க்கையில் அவருக்குத் தேவையான அன்றாட வேலைகளை நம்மைப்போலவே அவரே செய்துகொண்டார். அது மட்டுமில்லாமல் வணிகத் துறையில் பட்டமும் பெற்று வணிகத்துறையில் நல்ல வேளையிலும் உள்ளார். உலகின் நம்பர் ஒன் மோட்டிவேஷன் பேச்சாளர்களில் இவரும் ஒருவர். நன்றாக நீச்சல் அடிக்கவும். கோல்ப் விளையாடவும் தெரியும்.



நிக்கின் விடாமுயற்சிக்கும், திறமைக்கும் நாம் இவரையும் ஜெஸிக்காவை வணங்கியது போல இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்தி

இவரையும் நமது மானசீக குருவாக ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.























ஜெஸிக்காவையும், நிக்கையும் விட கடவுள் நமக்கு எல்லாவற்றையும் அள்ளித் தந்துயிருக்கிறார். எனவே நம் இனிய சகோதர சகோதரிகளே நடிகர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் போகுவதை நிப்பாட்டி விட்டு வாழ்க்கையில் முன்னேற வழி பாருங்கள்.. வெற்றி நமது பக்கம்தான்....

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.