Thursday, February 2, 2012

 
விஜயகாந்தின் திடீர் ஆவேஷத்திற்கு காரணம்  ஜெயலலிதாவின் தோழி குடும்பத்தினரா?(ஸ்பெஷல் ரிப்போர்ட்)




விஜயகாந்துக்கு படத்தில் நடிக்கும் போதோ அல்லது அதிக அளவு போதையில் இருக்கும் போதோ மட்டும்தான் வீரம் வரும்.ஆனால் சட்டசபையில் முதன் முதலாக அதுவும் ஜெயலலிதா மக்களின் அதிக அளவு செல்வாக்கோடு ஆட்சி செய்யும் போது இந்த அளவிற்கு அவருக்கு துணிச்சல் வந்து இருக்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு சக்தி வந்து துணை புரிந்து இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர் இந்த அளவுக்கு தைரியமாக பேசி இருக்கமாட்டார் என்பதை தமிழகத்தில் பம்பரம் விடும் சிறுவர்களிடம் கேட்டால் கூட சொல்லி இருப்பார்கள்.

இதற்கு சூத்திரதாரி   சசியின் கணவரைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஜெயலலிதாவை முதலைமச்சராக்குவதற்கு மறைமுகமாக செயல்பட்டவர் இவர். இப்போது இவரும் இவர் குடும்பத்தினர் அனைவரும் ஜெயலலிதா அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இப்போது அடிபட்ட புலியாக மறைந்து இருக்கும் இவர்கள் மீண்டும் பாய்ந்து தாக்க சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

நடராஜன் அவருக்கு வேண்டியது முதலைமச்சர் பதிவி அல்ல ஆனால் முதலைமச்சர் பதவியில் இவருக்கு வேண்டியவர்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இவர் மாட்டிக்காமல் தவறுகள் செய்யலாம்.

இவரது எண்ணம் ஜெயலலிதாவின் சொத்துவழக்கு மிக சீக்கிரம் முடிவிற்கு வந்துவிடும் அப்போது ஜெயலலிதாவிற்கு எப்படியும் 2 வருடங்களாவது சிறைத்தண்டனை கிடைக்கும் என்பதுதான் இந்த முடிவிற்கு காரணம் பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதுமட்டுமல்ல இதில் ஈடுபட்டவர்கள் இவரின் குடும்பத்தினர்களும்தான். இவருக்கு தெரியும் இவரது குடும்பத்தினரும் உள்ளே போவார்கள் என்று அதனால் இவர்களே ஜெயலலிதாவிற்கு எதிராக சாட்சி அளித்து இவர்கள் தண்டனைகாலத்தை குறைக்க முயற்சிக்கலாம். இவர் இதற்கு தனக்கு டில்லியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி கொள்வார்.

ஜெயலலிதா உள்ளே போனால் கட்சியை உடைக்க முயற்சி செய்வார்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் வாங்கியவர்களில், 70 சதவிகிதம் பேர் இவர்களுடைய ஆட்கள்தான். அவர்கள் எப்போதும் இவருடைய பேச்சைத்தான் கேட்பார்கள். ஏதாவது ஓர் அசாதாரணச் சூழ்நிலை வந்தால், அவர்களை மொத்தமாக ஓட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையுடந்தான் இவர் மறைமுக யுத்தத்தை தொடங்கியுள்ளார். ' அதற்கான  தேவைக்கு அவசியமான பணத்தை  சேர்த்துவையுங்கள். பணம் இருந்தால் நம்மால் எதையும் செய்யமுடியும் '' என்ற வகையில் ஆலோசனைகள் செய்யப்பட்டு, பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டவை ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதாம்.

மத்திய உளவுத் துறை அனுப்பிய தகவல் அறிக்கையின்படி, அந்தத் தொகை 600 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். ''பெங்களூரு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு பாருங்கள்'' என்று இந்தக் குடும்பத்தினர் பேச ஆரம்பித்துள்ளதையும், இந்தச் சேமிப்பையும் சேர்த்துப் பார்த்தால், ஆட்சிக் கவிழ்ப்புக்கோ அல்லது பதவியை அபகரிக்கவோ ஆன பெரும் திட்டத் தின் மையப் புள்ளி அது என்கிறார்கள்.அதற்காக முதலில் இவரிடம் வந்து மாட்டி கொண்டவர்தான் முதலமைச்சர் ஆசையில் இருக்கும் விஜயகாந்த் அவர்கள்.

அதுமட்டுமல்ல காங்கிரஸ்கார்களுக்கு இனி கலைஞரை நம்பி இனி தமிழகத்தில் காரியம் ஏதும் நடக்க போவதில்லை என்று முடிவிற்கு வந்துவிட்டனர். அதே நேரத்தில் ஜெயலலிதாவும் பிஜேபி பக்கமாக சாய ஆரம்பித்துவிட்டார் அதனால் அவரை நம்பியும் இருக்க முடியாது. அதானால் அவரது ஆட்சியை கவிழ்த்து விஜயகாந்தை நடராஜன் அவர்களின் துணையோடு முதலைமச்சர் பதவியில் உட்கார வைத்துவிட்டால் வரும் நாடாளு மன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக இருக்குமென்று நினைப்பதால் அவர்களும் இதில் உடைந்தையாக இருக்காலாம் என்று கருதப்படுகிறது.

எப்போதும் ஆணவத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிகுந்தவர்கள் இப்போது யாரும் கட்சியில் இல்லை அவருக்கு இப்போது தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கையான ஆள் அவர் நண்பர் சோவைத்தவிர யாரும் இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டாமான ஒன்று.

இந்த நாடகத்தில் பலிகடாவாக வந்து மாட்டிகொண்டவர் கறுப்பு எம்ஜியார் விஜயகாந்த்.


இந்த செய்திகள் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்தின் உளவுத்துறையால் திரட்டப்பட்டது. என்ன அப்படி ஒரு துறை உண்டா என்று கேட்பவர்களுக்கு பிரபல பத்திரிக்கைகள் கற்பனை செய்திகளை உண்மைஎன்று சொல்லி அவர்களின் உளவுத்துறையால் திரட்டப்பட்டு செய்திகள் போடும் போது அவர்களுக்கு இணையாக இப்போது பதிவாளர்களாகிய நாம் பதிவு போடும் போது நாமும் அப்படிபட்ட துறைகள் இருப்பது என்று சொல்லி கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்பது என்  கருத்து.

என்ன சரிதானுங்க????

இந்த செய்தி எனது முழு கற்பனைதான். உண்மையல்ல ஆனால் வரும் காலத்தில் உண்மையாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது என்பது மட்டும் உண்மை..



02 Feb 2012

12 comments:

  1. இப்படி புதுசு புதுசா கிளப்பி விடுங்க

    ReplyDelete
  2. கற்பனையாக இருந்தாலும் அருமை. நிஜமா இருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு பாஸ்

    ReplyDelete
  3. தலைவரே அரசியலில் சேர்ந்து காய்நகர்த்த உத்தேசம் ஏதாவது உண்டா!
    ஏறக்குறைய தங்களது கருத்து உண்மையாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  4. அரசியல் அவ்வளவா பிடிக்காமல் ஓட்டு மட்டுமே தவறாமல் போடும் சாதாரண இந்திய பிரஜைகளில் நானும் ஒருத்தி. இந்த பதிவு மட்டுமே என்னவோ ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்த போகிறதுன்னு நம்பி படிச்சுக்கிட்டு வந்தால் இதெல்லாம் கற்பனைன்னு பொசுக்குன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டீங்களே. ஆனாலும் மிக சுவாரசியமா இருந்துச்சு சகோ

    ReplyDelete
  5. @ரஹீம்காஸி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எதையும் நூறுசதவிகிதம் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது என்பதால்தான் இதை கற்பனை என்று சொல்லி முடித்து இருக்கிறேன். ஆனால் நான் கூறியவற்றில் பல வித உண்மைகள் மறைந்து இருப்பதை அதில் சம்பந்தபட்டவர்களுக்கு நன்றாக தெரியும். அது காலப்போக்கில் மக்கள் சபையில் ஒரு நாள் வெளிவரும் சகோதரா

    ReplyDelete
  6. @உண்மை விரும்பி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நான் ஒரு அரசியல் பார்வையாளனாகத்தான் இருக்க விரும்புகிறேன் அதுமட்டுமல்ல நான் இருப்பதோ தொலைதூர நாட்டில் அதனால் அரசியலில் ஈடுபடுவதில்லை நான், ஆனால் ஒரு கட்சி சார்பாக இல்லாமல் எல்லா கட்சியையும் சரி சமமாக விமர்சிக்கிறேன். எனது விருப்பம் தமிழ்நாடு எப்போதும் பேர் சொல்லும் அளவுக்கு ஒரு நல்ல நாடாக இருக்க வேண்டும் என்பதுதான்.

    ReplyDelete
  7. @ராஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //அரசியல் அவ்வளவா பிடிக்காமல் ஓட்டு மட்டுமே தவறாமல் போடும் சாதாரண இந்திய பிரஜைகளில் நானும் ஒருத்தி//

    எனக்கு அரசியல் பிடிக்கும் ஆனால் ஒட்டு போடுவது மட்டும் பிடிக்காது ஒரு தடவை மட்டும் ஓட்டு போட்டு இருக்கிறேன்.

    //இந்த பதிவு மட்டுமே என்னவோ ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்த போகிறதுன்னு நம்பி படிச்சுக்கிட்டு வந்தால் இதெல்லாம் கற்பனைன்னு பொசுக்குன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டீங்களே.//

    சில சமயங்களில் சில பேரை நான்கு பேர் மத்தியில் நன்றாக கிண்டல் அடித்து "உண்மையை சொல்லி" அவரை நாற அடித்துவிட்டு அதன் பிறகு டேய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் இதை போய் சிரியஸாக எடுத்து கொள்ளாதே என்று சொல்லிவிட்டு விலகுவது மாதிரிதான் நான் இங்கு கற்பனை என்று சொல்லி முடித்து விட்டேன்.


    //ஆனாலும் மிக சுவாரசியமா இருந்துச்சு சகோ //
    காசு கொடுத்து ஜீனியர் விகடன்,ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற இதழ்களை வாங்கி அவர்களில் ஒரு தலை பட்சமான செய்தியை படிப்பதற்கு பதிலாக பாரபட்சமில்லாதா நம் பதிவர்களின் பதிவுகலில் சுவராசியம் அதிகமே...

    ReplyDelete
  8. உங்களுக்கு அரசியல் பதிவுகள் எப்போதும் மிக அருமையாக வருகிறது. அதுமட்டுமல்ல அப்படி நீங்கள் எழுதும் பதிவுகள் திரட்டிகளில் முதல் இடங்களை பெறுகின்றன என்பதை நான் கவனித்து வருகிறேன். அது போல நகைச்சுவையாக நீங்கள் சொல்லும் பல விசயங்கள் மிக அருமையாக உள்ளது.

    இந்த பதிவு மிக சுவராஸ்யமாக மறைந்திருக்கும் உண்மையை சொல்லி இருக்கிறது. பாராட்டுகள் சகோ...

    ReplyDelete
  9. நீங்கள் ஒரு பத்திரிக்கையாளானா? நிச்சயம் நீங்கள் ஒரு நிருபராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் வேலை பார்க்கும் பத்திரிக்கைகளில் உங்களுக்கு தெரிந்த உண்மைகளை வெளியிடமுடியாமல் உங்கல் கைகள் கட்டப்பட்டதால் நீங்கள் இந்த வலைதளத்தில் இந்த பதிவை வெளியிட்டதாகவே நான் கருதுகிறேன். உண்மைதானே??????????

    ReplyDelete
  10. makkal appaaviyaai irukkumvarai ethai pottaalum nambuvanga!

    ReplyDelete
  11. இந்த கற்பனை கதை உண்மையாக வாய்ப்புகள் அதிகம்

    ReplyDelete
  12. மதுரை கருப்பு M .G .R கேட்டால் மிகவும் சந்தோசபடுவார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.