உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 18, 2016

கபாலி படம் வருவதற்கு முன் ஐகோர்ட் தமிழக அரசிற்கு இப்படி உத்தரவு போட்டாலும் அதிசயப்படவேண்டாம்கபாலி படம் வருவதற்கு முன்  ஐகோர்ட் தமிழக அரசிற்கு இப்படி உத்தரவு போட்டாலும் அதிசயப்படவேண்டாம்

       கொஞ்சம் சிரிக்க ........                                 கொஞ்சம் சிந்திக்க ..........  
avargal unmaigal

kabali   
1. #கபாலி திரையிடும் திரை அரங்கம் அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

2. #கபாலி திரையிடும் திரை அரங்கத்திற்கு என சிறப்பு பஸ் சர்விஸ் செய்து கொடுக்க வேண்டும்.

3. #கபாலி திரையிடும் திரை அரங்கத்திற்கு செல்லும் ரசிகர்கள் செல்லுவதற்கென அந்த வழிகளில் மற்றைய வாகனங்கள் செல்ல      தடை வித்திக்கப்பட வேண்டும்.

4. #கபாலி திரைபடத்திற்கு செல்ல விரும்பும் குடும்பத்தினருக்கு முன் ஜாமின் இல்லாத லோன் கொடுக்க வேண்டும்.

5. #கபாலி திரைபடத்திற்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

6. #கபாலி திரைப்படம் அதிக தடவை பார்த்தவர்களுக்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் விருது கொடுக்க வேண்டும்.

7. #கபாலி திரைப்படத்திற்கு டிக்கெட் வாங்கினால் பஸ் ரயில் லோக்கல் விமானத்தில் செல்ல டிக்கெட் வாங்க வேண்டாம்.

8. #கபாலிபடம் திரையிட்ட இரண்டு வாரத்திற்கு எல்லா டாஸ்மாக் கடைகளும் அடைத்துவிட வேண்டும்.


9. #கபாலி பட கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்ய பால் மலிவு விலையில் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

10. #கபாலி திரைப்பட டிக்கெட் வாங்க ஆதார் அட்டையை காண்பிக்க வற்புறுத்தக் கூடாது

இப்படி எல்லாம் தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை என்றால் தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இப்படிக்கு
காமெடி ஜட்ஜ் மதுரைத்தமிழன்
#kabali

8 comments :

 1. உங்களது இந்த ஆதங்கம் / கவலையெல்லாம் சூப்பர்ஸ்டாரை பற்றியா..?? அல்லது திரைப்பட ரசிகர்களை பற்றியதா..???

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஆதங்கம் ஏதும் இல்லை அதுவும் ரஜினி மீது இல்லை. ரஜினி மீது ஒரு காலத்தில் இருந்தது அவர் தலைவராக வந்து தமிழகதை சிறிது மாற்று வழியில் அழைத்து செல்வார் என்று அப்போது ஆதங்கத்தில் அவரை திட்டி எழுதி இருக்கிறேன்... ஆனால் காலப்போக்கில் கொஞ்சம் மெச்சூர் ஆனதால் ரஜினி நடிகராக மட்டும் இருக்கவிரும்புகிறார் என்று புரிந்ததும் ஆதங்கம் எல்லாம் போய்விட்டது அதனால் இப்ப அவரை மிக சிறந்த நடிகராக மட்டுமே பார்க்கிறேன் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஒரு தமிழ் நடிகர் என்பதால் பெருமையும் அடைகிறேன்.


   எனது பதிவுகள் பெரும்பாலும் அந்தந்த காலத்திற்கேற்ப வரும் நடப்பு செய்திகளை வைத்து கலாய்து கிண்டல் செய்து பலரும் படிப்பதற்காக எழுதப்படுகின்றன. காலதிற்கேற்ப எழுதாமல் கதை கவிதைகளை மட்டும் எழுதினால் நான் எழுதுவதை படிக்க பணம் கொடுத்துதான் அழைத்து வர வேண்டும்

   Delete
 2. என்ன தல, உங்களுக்கு நியூ ஜேர்ஸில எஃப் டி எஃப் ஷோ க்கு டிக்கட் கெடைக்கலையா? அந்தக் கோபத்தில் ஒரே கபாலி பாட்டாப் பாடுறீங்க?! :))) எல்லாம் சோல்ட் அவ்ட்னு சொல்றாங்க! :)

  ஜோக்ஸ் அப்பார்ட்..

  அப்புறம் நீங்க சட்டத்தை விமர்சிக்கும்போது (கபாலியை, ரஜினியை தாணுவை என்னவேணா சொல்லலாம்) கொஞ்சம் கவனம்!!! என்னங்க? நான் அமெரிக்கக் குடிமகன் என்னை எதுவும் செய்ய முடியாதுனு சொல்றீங்களா? அது சரி. :)

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நாட்டை விட நீயூஜெர்ஸி தமிழர்கள் ரஜினி படத்திற்கு கிரேஸியாக இருக்கிறார்கள். இன்னும் கட அவுட் வைத்து பாலபிஷேகம் மட்டும் பண்ணவில்லை. இங்கு எனக்கு தெரிந்த நண்பர்கள் எல்லாம் மொத்தமாக் டிக்கெட் ரிசர்வ் செய்து போகிறார்கள் எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி அதுமட்டுமல்லாமல் எந்த படத்திற்கும் மற்றும் எந்த விஷயத்திற்கும் நான் அடித்து பிடித்து செல்லுவதில்லை கல்யாண வீட்டு சாப்பாட்டுக்கு என்றாலும் அல்லது எந்த ஒரு விஷயத்திற்கும் அடித்து பிடித்து செல்வதில்லை.


   இந்திய குடிமகனாக இருக்கும் போது இந்திய கோர்ட் வழங்கும் தீர்ப்பை விமசரித்தால் தப்பு ஆனால் அமெரிக்க குடிமகனாக ஆன பின் சட்டங்களை விமர்சிப்பது கருத்து சுதந்திரத்தின் படி தப்பு இல்லையே.

   Delete
 3. hahahahahah .....8 vathu super appadiyavathu tasmac moodapadume.....


  geetha: mele ulla karuththudan ungal pathivudan antha puppy padamum rombave azhagu...

  keyboard tamil fonts accept panna matenu adam pidikuthu athan thanglishla...

  ReplyDelete
  Replies
  1. மேலே நான் சொன்ன எல்லா விஷயம் நடந்தாலும் நடக்க வாய்ப்புண்டு ஆனால் 8 வது மட்டும் நடக்கவே வாய்ப்புக்கள் இல்லை

   Delete
 4. ஹாஹா.... செம! கபாலி வந்த பிறகு தான் இப்பதிவை படிக்க முடிந்தது எனக்கு!

  ReplyDelete
 5. ஆஹா...
  விட்டிருந்தா இப்படியும் சொல்லியிருப்பார்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog