Monday, July 11, 2016



தமிழர்களின் மனோ தைரியத்தை பார்த்து உலகமே  வியக்கிறதாமே?


தனது வீரத்தை காட்ட ஜல்லிகட்டு அவசியம் என போராடுகின்ற தமிழன்தான், பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்பவனை துரத்தி பிடிக்க தைரியமில்லாதவனாக இருக்கிறான். மாட்டிடம் வீரத்தை காட்டும் தமிழனுக்கு சகமனுஷனிடம்
தைரியத்தை காட்ட முடியவில்லை.



முன்பு சுவாதியை கொன்ற ராம்குமாரின் சகோதரிக்கு அரசு கவர்மெண்ட் வேலை தரப்பட வேண்டும் என்று கூறிய செய்தி தவறாக திரிக்கப்பட்டு  இருக்கிறது. இப்போது சுவாதியின் சகோதரிக்குத்தான் கவர்மெண்ட் வேலை வாய்ப்பு தரப்படவேண்டுமென  திருமாவளவன் கூறியிருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ! இப்படி ஒவ்வொரு கொலைக்கும் கொலையுண்ட குடும்பத்திற்க்கும் அரசாங்க வேலை கொடு என்பது சரியான ஒரு தீர்வாக இருக்காது. அரசு பொதுமக்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வழிமுறைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் தீர்வாகும்


ஒன்று மட்டும் புரிகிறது பொது மக்கள் மட்டுமல்ல தமிழக தலைவர்களும் சரியாக சிந்திப்பதில்லை என்று.

அன்புடன்
மதுரைத்தமிழன்
11 Jul 2016

5 comments:

  1. மனம் கணக்கும் செய்தி..
    எண்ணங்களை பின்னூட்டத்தில் இட முடியுமா என்ன ?
    தம +

    ReplyDelete
  2. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கும் மனோபாவம் அதிகரித்துவிட்டது!

    ReplyDelete
  3. நீங்கள் ஆதங்கப்படுவது வரிகளில் தெளிவாக தெரிகிறது

    ReplyDelete
  4. ஜல்லிக்கட்டு என்பது வேறு...
    சென்னையில் இருப்பவர்கள் மாடு பிடிப்பவர்கள் அல்ல...
    ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லும் தென் தமிழகத்தில் சிவகங்கையில் பெண்ணில் கழுத்தில் இருந்து நகையை அறுத்தவனை விரட்டிப் பிடித்து அடித்து போலீஸில் ஓப்படைத்திருக்கிறார்கள்...
    அரசு வேலை கொடுக்க வேண்டுமென்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.