காலம் மாறி போச்சு ஆனால்
நீங்க மாறிவீட்டீர்களா?
காலம் மாறிக் கொண்டே இருக்கிறது
ஆனால் இன்றைய தினத்தில் 35 வயதிற்குள்ளவர்களிலிருந்து
அதற்கு மேற்பட்ட வயதினரை கவனித்து பார்த்தால் அவர்கள் மாறி இருக்கிறார்கள் என்றால்
ஆமாம் என்று இல்லை என்றும்தான் சொல்ல முடியும் ஆனால் அதில் இல்லை என்ற சதவிகிதத்தினர்தான்
மிக மிக அதிகமாக இருக்கிறார்கள்.
இந்த இல்லையை உதாரணம் சொல்லி
விளக்க வேண்டுமென்றால் இந்த காலத்தில் இருக்கும் 20 வயது அதிலும் 10 வயதிற்கும் கிழானவர்களை
பார்த்தால் அவர்கள் கையில் ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ் ஒன்றை வைத்து கொண்டு தங்கள்
காலத்தை பொழுது போக்கி கொண்டு இருப்பார்கள்
இதை பார்த்ததும் 35 வயதிற்கும் மேற்பட்ட குடும்பஸ்தர்கள் சொல்லுவது நாங்கலெல்லாம் அந்த
காலத்தில் பள்ளிவிட்டு வந்ததும் புத்தக பையை தூக்கி எறிந்துவிட்டு இருட்டு வரை வீட்டிற்கு
வெளியே விளையாடுவோம் என்று பழைய புராணத்தை சொல்லி இந்த கால குழந்தைகள் அப்படியெல்லாம்
இல்லாமல் எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ் ஒன்றை வைத்து கொண்டு நேரத்தை வேஸ்ட் செய்கிறார்கள்
என்று குறை கூறி கொண்டு இருக்கிறார்கள். இது 35 வயதிற்கும் மேற்பட்ட குடும்பஸ்தர்களின்
பார்வை...
ஆனால் இந்த கால குழந்தைகளின்
பார்வை மற்றும் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. நமது கால அதாவது 35
வயதிற்கும் மேற்பட்டவர்களின் பொழுது போக்கு என்பது உடலுக்கு பயிற்சியை தருவது போலவும்
இந்த கால குழந்தைகளின் பொழுது போக்கு மூளைக்கு பயிற்சியை தருவது போலவும் இருக்கிறது.
நாம் அந்த காலத்தில் இப்படி
(கபடி,கல்லா மண்ணா , பம்பரம் தொட்டு பிடிச்சு, ஏறி பந்து, கண்ணா மூச்சி )விளையாடினோம்
என்று சொல்லும் போது இந்த கால குழந்தைகளின் பார்வையில் மூளை வளர்ச்சியடையாதவர்கள் விளையாடும்
விளையாட்டை போல அவர்களுக்கு தோன்றுகிறது. இதற்கு காரணம் இரண்டு பேர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கிறது.
இந்த இருவர்களின் பார்வைகள்
எப்படி இருக்கிறது என்று பார்த்தால் இரு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் மதக்
கடவுளும் அவரை வழிபாடு செய்யும் முறையும்தான் மிக சரி என்று விவாதம் செய்வதுபோலவே இருக்கிறது
என்னைப் பொருத்தவரை இந்த
கால குழந்தைகள் மிக ஸ்மார்ட்டாகவே இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் அந்த காலத்தில் குழந்தைகள்
விளையாடி மகிழ்ந்தது போல இன்று விளையாடமல் இருப்பதால் பெரியவர்கள் நினைப்பது போல அவர்கள்
மக்ழ்ச்சியான அனுபவங்களை ஒன்றும் இழக்கவில்லை மேலும் இந்த கால குழந்தைகள் எலக்ட் ரானிக்ஸ்
டிவைஸை வைத்து தொடரந்து விளையாடினாலும் அவர்கள் கபடி,கல்லா மண்ணா , பம்பரம் தொட்டு
பிடிச்சு, ஏறி பந்து, கண்ணா மூச்சி போன்ற விளையாட்டை தவிர்த்துவிட்டு பள்ளி நேரம் முடிந்ததும்
ஹாக்கி, பேஸ்கட் பால் வாலிபால் கிரிக்கெட்
ஸ்விமீங்க் காரத்தே போன்ற பல விளையாட்டை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து விளையாடி
விட்டுதான் வருகிறாகள் அப்படி விளையாடி வருபவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஹோம் வொர்ர்க்கை
எல்லாம் நாம் சொல்லாமல் அவர்களாகவே செய்து கொண்டு அதன் பிந்தான் இந்த எலக்ட் ரானிக்ஸ்
டிவைஸ்களை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்
அதனால் இந்த கால குழந்தைகள்
நம்மைவிட ஒரு படி மேலாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் மிக ஆரோக்கியமான் சூழ்நிலையில்
வாழ்ந்ததாக பெருமை பட்டுக் கொண்டிருக்கும் நாம்தான் தவறான பாதையில் சென்று கொண்டு இப்படிபட்ட
குழந்தைகளை குறை சொல்லிவருகிறோம்.
குழந்தைகள் எலக்ட்ரானிக்ஸ்
டிவைஸை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் அதை வாங்கி கொடுத்து கெடுத்தவர்கள்
நாம்தானே அதை போல சரியான உணவு பழக்கவழக்கங்களை அறிமுகப்படுத்தாமல் கெடுத்து வைத்ததும்
நாம்தானே.
காலம் மாறி போச்சி இந்த கால
குழந்தைகளும் மாறிப் போனார்கள் ஆனால் நாம்தான் இன்னும் மாறாமல் குறைகளை கூறிக் கொண்டிருக்கிறோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மைதான்! குழந்தைகள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் பழக்கப் படுத்துவதும் நாம்தான் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
ReplyDeleteஇந்த கால சந்ததிகள் அந்தக் காலத்தவர் போல் இல்லை என்னும் குறை சாக்கரடீஸ் காலம் முதலே இருந்து வருவதாகத் தெரிகிறது
ReplyDeleteமிகச் சரியே தமிழன். நாமும் அந்தக் காலத்தில் அந்தச் சூழலுக்கேற்ற வகையில் குறும்புகள், சிறுபிள்ளைத்தனங்கள் எல்லாமே செய்ததுதானே. அப்போது வேறு இப்போது கொஞ்சம் ஹை டெக் அவ்வளவுதான். ஆனால் இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளே. அவர்களின் நிலையில் இறங்கித் தோழமையுடன் அந்த புத்திசாலித்தனத்தைச் சரியான வழியில் சானலைஸ் செய்து கொண்டு செல்வது பெற்றோர்களின் கையில்தான். அல்லாமல், நாங்கள் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் எங்கள் பெரியவர்கள் சொன்னதை எல்லாம் அப்படியே (????!!!!) கண்மூடித்தனமாகக் கேட்டுக் கொண்டோம் என்று அவர்களுக்கு நம்மைக் கம்பேர் செய்து அறிவுரை வழங்குவதை விட நம் காலத்தைப் பற்றி ஒரு கதை சொல்வது போல் ஜஸ்ட் லைக்தட் அப்படி ஒரு காலம் இருந்தது, வாழ்வியல் முறை இருந்தது என்று அவர்களுக்குச் சொல்லலாம். அவ்வளவே.
ReplyDeleteஇக்காலத்துக் குழந்தைகள், இளைஞர்கள் பெரும்பான்மையோர் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். பெற்றோர்கள் தான் தெளிவாக இல்லாமல் அவர்களைக் கெடுப்பது....
உங்கள் பதிவு உண்மை. பெற்றோர்கள் பற்றிய கருத்தும் மிகச் சரி
ReplyDeleteநிறைய பேர்கள் நீங்கள் சொல்வது போல இங்கு குழந்தைகள் விண்வெளி விளையாட்டுகள் கிரிக்கெட், வாலிபால் விளையாடுபவர்கள் மிகக் குறைவே. உடல் ஆரோக்கியமும் முக்கியமல்லவா..
ReplyDeleteஇன்று கிடைக்கும் வசதிகள் அன்று இருந்திருந்தால் நாமும் அப்படித்தான் இருந்திருப்போம் :)
ReplyDeleteமாறவில்லைதான். ஒத்துக்கொள்கிறோம்.
ReplyDelete