உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 10, 2014

உருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வைஸ்

உருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வைஸ் நீங்கள் வசதியான பிஸினஸ்மேனாக இருக்கலாம் அல்லாது தொழில் அதிபராக இருக்கலாம் அல்லது உங்கள் மகன் நல்ல கல்விபெற்றவனாக இருக்காலாம். இப்படி இருந்தும் உங்கள் பிள்ளை எதிலும் அதிகம் கவனம் செலுத்தாமல் நண்பர்களோடு சேர்ந்து ஊரைச் சுற்றி உருப்படாமல் வந்து கொண்டிருக்கலாம்.


இப்படி வந்து கொண்டிருப்பவனை மிகவும் பொறுப்பு உள்ள ஆண்மகனாக ஆக்குவது மிக எளிதுங்க


அதுக்கு நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒரு நல்லப் பொண்ணாக பார்த்து அவன் தலையில் கட்டி வையுங்கள்.


என்ன அப்படி செய்தால் அவன் உருப்படவா போறான் என்று கேள்வி கேட்காமல் சற்று ஒதுங்கி இருந்து வேடிக்கை பாருங்கள்


கல்யாணம் ஆன புதிதில் அழகான புதுப் பொண்டாட்டி வந்துவிட்ட சந்தோஷத்தில் அவள் முந்தானையை பிடித்தே சுற்றிக் கொண்டிருப்பான். அவனது அந்த செயலைக் கண்டு அவன் கூட சுற்றி வந்த நண்பர்கள் எல்லோரும் அவனை விட்டு விலகி போய் கொண்டிருப்பார்கள்.


அந்த சமயத்தில் அன்பான அழகான புதுப் பொண்டாடியின் சாயம் வெளுத்து அவள் சுய ரூபத்தை காண்பித்து அடி உதை அட்வைஸ் என்று நம் தமிழ் டிவியில் வரும் சிரியல் போல 24/7 ஆக தொடர ஆரம்பிக்கும்.


அப்பதான் அந்த ஆணுக்கு, புத்தனுக்கு போதி மரத்தடியில் புத்தி வந்தது போல அவனுக்கும் பெட் ரூமில் இருக்கும் போது புத்தி வரும்.


அதனால் அவன் உடனே தன் அப்பாவிடம் சொல்லி அப்பா நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நான் உங்கள் பிஸினைசை பார்த்து கொள்கிறேன் என்பான் அல்லது வேலை பார்த்து கொண்டிருப்பவனாக இருந்தால் தன் மேனேஜரிடம் சொல்லி புது ப்ராஜெக்ட் வாங்கி அதை பண்ண ஆரம்பிப்பான். அந்த சமயத்தில் அவன் மனைவியின் போட்டோவை தன் பர்ஸில் வைத்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் டேபிளில் வைத்து இருப்பான். அதை பார்க்கும் போதெல்லாம் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் வேலையில் அதிகம் கவனம் செலுத்தி அதிக நேரம் வேலை பார்த்து அதை மிக வெற்றிகரமாக நடத்தி செல்வான்..


வேலைக்கு சென்றாலும் போனில் மனைவி அடிக்கடி கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுவதால் அந்த மாதிரி தொந்தரவுகளை நிரந்தரமாக தவிர்க்க வேண்டி பிஸினசை மேலும் விஸ்தரிக்க அல்லது ஆன் சைட்டில் வேலை செய்ய மேனேஜர்களிடம் சொல்லி வெளிநாடு வந்து விடுவார்கள் அதன் பின் என்ன நல்லா ஜாலியாகவும் இருப்பார்கள் வெற்றிகரமான ஆண்களாகவும் உலா வருவார்கள்..


இதைத்தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று அந்த காலத்தில் உள்ள பெரிசுங்க சொன்னாங்களோ என்னவோ ?


என்ன ஐடியா நல்லா இருந்துச்சா? பயனுள்ளவையா இருந்துச்சா?உங்கள் வீட்டு ஆண்மகன் முன்னேற்றத்திற்காக இந்த மதுரைத்தமிழன் எப்படியெல்லாம் யோசிக்கிறான் பாருங்க...அதுக்காகவாது நீங்கள் மறக்காமல் கமெண்ட் போட்டுப் போங்கப்பா..


டிஸ்கி : பெண் பிள்ளை வைத்திருப்பவர்களுக்கு உதவுவதற்காக மிக விரைவில் ஒரு பதிவு வரும்.கண்டிப்பாக படிக்க தவற வேண்டாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

38 comments :

 1. ஆஹா...
  ஒவ்வொரு வரியையும் அண்டகிரவுண்டல ரூம் போட்டு யோசிச்சீங்களோ...
  ரொம்பப் பிரமாதம் :)

  ReplyDelete
  Replies
  1. ரூம் எல்லாம் இல்லீங்க சரக்கு போட்டு யோச்சிச்சா இப்படி எல்லாம் வருதுங்க

   Delete
 2. டேபிளில் வைத்துக் கொள்ளும் ஐடியா சூப்பரு...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. மனசுக்குள்ள வச்சிகிடு இருப்பவங்க சன்யாசம் வாங்கிட்டுப் போயிருப்பாங்க

   Delete
 3. நல்ல ஐடியாக்கள்தான்....ஹாஹா ஆனா இப்படி குட்டையைக் குழப்பணுமா தமிழா.....!!!!!! அம்மா அப்பாக்கள் கதி கலங்கிடப்போறாங்க...!!! பூரிக்கட்டை சேல்ஸ் அமோகமா இருக்கும்னு சொல்லுங்க!

  ReplyDelete
  Replies

  1. நல்ல ஐடியான்னு நீங்க சொன்னதும் எனக்கு நினைவுக்கு வந்ததது இதுதான். அட்வைஸ்ங்கிறது விளக்கெணி மாதிரி கொடுக்கிறவன் ஈஸியா கொடுத்துடுவான் ஆனா அதைக் குடிக்கிறவன் நிலமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஹீ.ஹீ

   Delete
 4. இந்த மாதிரி தான் நண்பர் ஒருவனை கேட்டேன். என்னப்பா இவ்வளவு கட்சிதமா சிக்கனமா எப்படி வாழுற என்று. அவன் சொன்னான் மணி பர்சில் மனைவி போட்டோ ஒன்னு வச்சிக்கோ, அதை திறந்தாலே அவள பாக்குனும் இல்லையா? அதனால் பர்சேயே எடுக்கமாட்ட. பேஷா சொன்னேள் போங்கோ.

  ReplyDelete
  Replies
  1. சிரிக்க வைத்த நகைச்சுவை....ஆமாம் தப்பி தவறி அந்த நண்பன் கூட ஹோட்டலுக்கு போய்விடக் கூடாதுங்க

   Delete
 5. Replies
  1. இமயத்தலைவரின் பாராட்டுக்கு நன்றி

   Delete
 6. உங்க மருமகன் உருப்பட டிப்ஸ் கொடுத்தாச்சு! மருமகள்கள் உருப்பட சீக்கிரம் டிப்ஸ் கொடுக்குறதும் ஓக்கே இப்பதான் உங்க மருமகனுக்கு 13 வயசாகுது. என்ன பண்ணலாம்!?

  ReplyDelete
  Replies
  1. இந்த உபதேசம் எல்லாம் ஊருக்குதான் குடும்பத்தீற்கு இல்லை. அப்புறம் நெட்டுல படிக்கிற உபதேசத்தை பின்பற்றுகிறவன் முட்டாள். என் மருமக்கள் அதை பின்பற்ற மாட்டாங்க என்னா அவங்க சகோ மாதிரி இல்ல அவங்க மாமன் மாதிரி ரொம்பவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஸ்மார்ட்

   Delete
 7. ஆமாம் யாரு பொண்ணு கொடுப்பா??? அப்பா பணக்காரரா இருந்தா மட்டுமே இது சாத்தியம்!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த காலத்துல பொண்ணு யாரு கொடுப்பான்னு ஆண்கள் யோசிப்பத்தில்ல நாங்களே எடுத்துகுவோம் அதாவது தேர்ந்தெடுத்துக்குவோம்...(ஏமாற்றி) நானெல்லாம் அப்படிதானுங்க ஹீ.ஹீ

   Delete
 8. சூப்பர் ஐடியாவா அள்ளிவிடறீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. கிண்டல் இல்லை, உண்மையிலேயே நல்ல வழிதான் இது. அது சரி, அங்க அண்ணாத்தைக்கு எத்தனை பசங்க ?

  ReplyDelete
  Replies
  1. ஹும்ம்ம் நோ பசங்க ஒரே ஒரு பொண்ணுதான் ......அது அப்பாவுக்கு தப்பாம பிறந்திருக்கு அதனால கவலையில்லை

   Delete
 10. ரொம்ப நாளா சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணலாம்ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். பெரியவங்க அடிக்கற கைதான் அணைக்கும்ன்னு சொல்லியே இத்த நாளு ஒத்தி வெச்சுட்டாங்க. இப்ப ஒங்க பேச்சக் கேட்டு இன்னம் கொஞ்ச மாசம் ஒத்தி வைக்கலாம்னு இருக்கேன்.

  ந்ன்றிங்க,

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. டைவர்ஸ் பண்ணுறது எல்லாம் இந்த கால ஸ்டைல் நாம அந்த காலத்து முறையை பின்பற்றலாம். அதுதாங்க சன்யாசம்

   Delete
 11. :))))))))))) முடியல :))))))) சகோதரா அருமை அருமை !என்ன வேலை இருந்தாலும் அது கிடக்குது
  கழுத பெண் பிள்ளைகளும் உருப்படியாக வாழ வழி என்ன என்று எங்கள்
  மதுரைத் தமிழன் சொல்லப் போகும் சேதியை அவசியம் படித்தே தீர வேண்டும்
  என்று உள்ளத்தால் உறுதி பூண்டாச்சு :))))))) (என்னமா றூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா
  :))))))) )வாழ்த்துக்கள் விரைவாகத் தொடருங்கள் அடுத்த பகிர்வையும் :))

  ReplyDelete
  Replies
  1. நீங்க எல்லாம் என் பதிவை படிக்க வரீங்களா என்பதை பார்த்தது ஆச்சிரியாம இருக்கு அதிலும் அடுத்த பதிவை படிக்க உறுதி பூண்டதை நினைச்சா வர சந்தோஷத்தில் மாரடைப்பே வந்து விடும் போல

   Delete
 12. நீங்க ஒண்ணும் ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் யோசிக்கலை தலைவா, திருமணத்துக்கு பிறகு உங்கள் வாழ்கையில் நடந்ததை தான் ரொம்ப யோசிச்சு சொன்னமாதிரி பில்ட்அப் பண்ணிட்டீங்க. நான் சொல்றது சரி தானே?
  ஆமா இப்ப நீங்க எந்த டுர்ல இருக்கீங்க?

  ReplyDelete
  Replies
  1. நானெல்லாம் பிஸினஸ் டூர் போற அளவிற்கு பெரிய ஆள் அல்ல. நான் போற டூர் கிச்சன்ல இருந்து ஹால், ஹாலில் இருந்து 5 நிமிட தொலைவில் இருக்கும் இடத்தில் வேலை அதன் பிறகு ஷாப்பிங்க அவ்வளவுதாங்க. வெளியுலகம் தெரியாத அப்பாவிங்க்

   Delete
 13. மிகவும் சுவை தரும் பதிவு. கொஞ்ச நாளாக உங்கள் தலத்தின் பக்கம் வராமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. அட என்னங்க இதுகெல்லாம் மன்னிப்பு.... நான் போடுறது மொக்கை அதை படிச்சா என்ன படிக்கலைன்னா என்னங்க

   Delete
 14. தலைப்பை படிச்சிட்டு, நம்பி வந்தேன். :(
  அப்புறம் ஒரு டௌட் நீங்க எப்படி? உருப்படியானவரா? உருப்படாதவரா?
  பதிலை நோட் பண்ணுங்க மிஸ்ஸஸ் தமிழன். (அப்பாடா போட்டுகொடுத்தாச்சு)

  ReplyDelete
  Replies
  1. அட என் தலைப்பை பார்த்து நம்பி வந்தீங்க என்றால் என் தளத்திற்கு நீங்கள் புதியவர் என்று அர்த்தம் போகப் போக புரிந்து கொள்வீங்க? அது என்ன கேள்வி நான் உருப்பட்டவனா இல்லையா என்று? பூரிக்கட்டையில் நான் அடிவாங்குவதை இந்த அகில உலகமே ரசித்து எஞ்சாய் பண்ணது என்னைத் தவிர அப்பவே உங்களுக்கு நான் எப்படி பட்டவன் என்று.. நீங்க ரொம்ப சின்ன பிள்ளை அதுனால் உங்களுக்கு புரியல. இப்ப சொல்லுறேன் கேட்டுகோங்க உருப்படாத பிள்ளைதான் அடிவாங்கும்

   Delete
 15. ஆண்களுக்கான அட்வைஸ் ஸ்பெஷலிஸ்ட் மதுரை தமிழன் வாழ்க!

  ReplyDelete
 16. ஆஹா...நம்மளை மிரட்டில்லா கல்யாணம் கட்டினாங்க வீட்டம்மா !

  ReplyDelete
  Replies
  1. உங்களை மிரட்டி கல்யாணம் பண்ணியதல்லாமல் உலகத்தையே அருவாளை வைத்து மிரட்ட சொல்லிக் கொடுத்ததும் அவங்கதானா

   Delete
 17. சரியான ஐடியாதான்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மதுரைக்கார தலைவர் சரின்னு சொன்னதற்கு அப்புறம் மறுபேச்சு உண்டோ?

   Delete
 18. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

  வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

  ReplyDelete
  Replies
  1. வலைசரத்திற்கு என்னை அழைத்து செல்வது நீங்களாகத்தான் இருக்கும்...நன்றி நன்றி தகவலுக்கும் நன்றி

   Delete
 19. அருமையான ஐடியா......

  அப்பா... மத்தவங்களுக்கு நல்லது செய்ய எத்தனை கஷ்டப்படுறீங்க! :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog