உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 30, 2012

சாமி உண்மையிலே கண்ணை குத்துமா?

சாமி உண்மையிலே கண்ணை குத்துமா?ஆஹா.....நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயம் நடக்கும் போது இந்த விஷயத்தையும் கற்று தெரிந்து உங்கள் அறிவை விசாலாமாக்கி கொள்ள வந்த மக்களே உங்களை நினைச்சா எனக்கு மிக பெருமையா இருக்கு. இன்று நாம் அறியப் போவது கடவுள் விரும்பிய படி நாம் நடக்காவிட்டால் கடவுள் நம் கண்ணை குத்திவிடுமா என்பதுதான்.


இந்த பதிவை நான் எழுத காரணம் நேற்று கடவுள் என் கனவில் வந்து என்னைப்பற்றி நீ உன் வலைத்தளத்தில் ஏழு நாட்களுக்குள் எழுதவில்லையென்றால் உன் கண்ணை குத்திபிடுவேன். அதுமட்டுமல்லாமல் உன் வாழ்வில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்று  சொல்லி சென்றது....பயந்து போன நான் உடனே இந்த பதிவை எழுத தொடங்கினேன்

சாமியை பற்றி என்ன எழுதலாம் என்று நினைத்த போது என் மனதில் தோன்றியது இதுதான். மக்களே இதை கவனமாக படித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சாமி உங்கள் கண்ணை குத்திவிடுவது மட்டுமல்லாமல் வாழ்வில்  கஷ்டங்களை கொடுத்து கொண்டே இருப்பார்.


என் பதிவிற்கு வந்த நீங்கள் முதலில் செய்ய  வேண்டியது இதுதான். நீங்கள் ஃப்ளோவராக இல்லாமல் இருந்தால் உடனடியாக சேர்ந்துவிடுங்கள் அப்படி சேரவில்லையென்றால் சாமி உடனடியாக உங்கள் கண்ணை குத்திவிடும் அதை தடுப்பது என் கையில் இல்லை அதுமட்டுமல்லாமல் எனது பதிவிற்கான லிங்கை உங்களுக்கு தெரிந்த 101 பேருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே ஃப்ளோவராக இருப்பவர்களானால் நீங்கள் 201 பேருக்கு எனது பதிவிற்கான லிங்கை அனுப்பி வைக்க வேண்டும்.


ஆமாம் இதையெல்லாம் செய்தால் என்ன நடக்கும் என கேட்கிறீர்களா?? வேற என்னங்க நடக்கும் எனக்கு அதிக ஃப்ளோவர்கள் கிடைப்பார்கள். மேலும் நான் போடும் மொக்கை பதிவுகள் நிறைய பேரை சென்று அடையும். அவ்வளவுதாங்க நடக்கும். ஆனால் இதையெல்லாம் செய்யாவிட்டால் சாமி உங்க கண்ணை குத்துவது நிச்சயம் மேலும் உங்கள் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்து சேரும்.

பெண்களுக்கு வரும் கஷ்டங்கள் : அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட
பார்க்கமாட்டார்கள்.

ஆண்களுக்கு வரும் கஷ்டங்கள் : உங்கள் மனைவி தினமும்  காலை உணவாக உங்களுக்கு உப்புமாதான் பண்ணி தருவார்கள். பார்க்கும் பெண்கள் எல்லாம் உங்களை அண்ணண் என்றுதான் கூப்பிடுவார்கள். நீங்கள் தலைக்கு குளித்தால் தலை துடைக்க கர்சீப் மட்டும் போதுமானதாக இருக்கும் நிலை வந்துவிடும்.

இன்னும்  நிறைய கஷ்டங்கள் வந்து சேரும் அந்த கஷ்டங்களை சொல்லி உங்களை பயமுறுத்தவில்லை. அதனால மக்களே ஒழுங்கா எனது வலைத்தளத்திற்கான பதிவை எல்லோருக்கும் அனுப்பி உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ளவும்.

டிஸ்கி : எனது சிறுவயதில் போஸ்ட் கார்டில் அல்லது நோட்டிஸ் அடித்து கடவளின் பெருமையை பற்றி சொல்லி அதை அப்படியே காப்பி பண்ணி குறைந்தது 100 பேருக்கு அனுப்பிவைக்க வேண்டும் இல்லையெனில் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்து நடுத்தெருவில் நிக்க வேண்டிய நிலமை வந்துவிடும் என்று சொல்லி அதை நமக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த பழக்கவழக்கம் இன்னும்மாறாமல் நோட்டிஸ்ற்கு பதிலாக இப்போது இமெயில் அனுப்பி வருகிறார்கள் அதை அப்படியே நம்பி அதை நமக்கும் அனுப்பி புண்ணியத்தை தேடிக் கொள்ளும் நண்பர்கள் இன்றும் உள்ளனர். அதை நினைத்ததுதான் இந்த பதிவை போட்டுள்ளேன்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் மொக்கைகள் உங்களின் பார்வைக்காக

13 comments :

 1. ஆஹா... கௌம்பிட்டாருய்யா... கௌம்பிட்டாரு... சொன்னதை நிறைவேத்தாட்டி என்னென்ன நடக்குமனு இப்படியா பயமுறுத்தறது? ஒண்ணு நிச்சயம்.. நான் இந்த போஸ்ட்டைப் படிக்கவே இல்லைப்பா...

  ReplyDelete
  Replies
  1. ////நான் இந்த போஸ்ட்டைப் படிக்கவே இல்லைப்பா.///

   நிங்க படிக்கலைன்னு சொன்னதை நான் நம்புறேன் ஆனா நிங்க இந்த போஸ்ட்டை பார்த்திங்கள்தானனே

   Delete
 2. பெண்களுக்கு வரும் கஷ்டங்கள் : அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட
  பார்க்கமாட்டார்கள்.
  >>
  உங்க மொக்கைக்கு இந்த கஷ்டங்கள் எவ்வளவோ மேல். அதையே நாங்க தாங்கிக்கிறோம்.

  ReplyDelete
 3. அதனால மக்களே ஒழுங்கா எனது வலைத்தளத்திற்கான பதிவை எல்லோருக்கும் அனுப்பி உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ளவும்.

  யாரும் அடிக்க வரமாட்டாங்க இல்ல அத தெளிவா சொல்லுங்க. எப்படியெல்லாம் பதிவ ரெடி பண்றாங்கப்பா. ரூம் போட்டு யோசிப்பிங்களோ?

  ReplyDelete
 4. //என் பதிவிற்கு வந்த நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் ஃப்ளோவராக இல்லாமல் இருந்தால் உடனடியாக சேர்ந்துவிடுங்கள் அப்படி சேரவில்லையென்றால் சாமி உடனடியாக உங்கள் கண்ணை குத்திவிடும் அதை தடுப்பது என் கையில் இல்லை அதுமட்டுமல்லாமல் எனது பதிவிற்கான லிங்கை உங்களுக்கு தெரிந்த 101 பேருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே ஃப்ளோவராக இருப்பவர்களானால் நீங்கள் 201 பேருக்கு எனது பதிவிற்கான லிங்கை அனுப்பி வைக்க வேண்டும்.//

  இப்படியும் விளம்பரம் செய்யலாமா!!! புது யுக்தி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அவ்வ்வ்வ்வ்வ்வ்... இது நல்ல technique -ஆ இருக்கே!... செம!

  ReplyDelete
 6. புது ட்ரெண்ட்.இதுவும் நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 7. வணக்கம் சகோ,

  இணைந்து விட்டோம்.சாமி கண்ணைக் குத்தி விடும் என்றல்ல,உங்க அப்ரோச் நமக்கு பிடிக்கிறது. பதிவு மனக்கண்ணை குத்தி விட்டது .அப்போ நீங்கதானே கடவுள்!!!ஹி ஹி

  கலக்குங்க சகோ!!!

  தொடர்கிறோம்

  நன்றி!!!!!

  ReplyDelete
 8. ஹாஹா... ரசித்து சிரித்தேன் நண்பரே...

  ஆனால் ஆழ்ந்து கவனிக்கும்போது இதில் ஒரு விஷயம் புலப்பட்டது... தெய்வம் எதையும் செய் அப்படின்னு சொல்லலை.... நம் மனசாட்சி தான் நமக்கு தெய்வம்... நாம் சின்னப்பிள்ளை இல்லை சரி எது தவறு எது என்று தெரியாமல் இருக்க.... தவறு என்று தெரிந்து அதை செய்தால் நாம் மனசாட்சியை தெய்வத்தை மீறுகிறோம் என்று அர்த்தம்... சின்னப்பிள்ளையா இருந்தா இப்படி சொல்லி பயமுறுத்தலாம்.. குழந்தே ஒழுங்கா சாப்ட்ரு.. பொய் சொல்லப்படாது... யாருடைய பொருளையும் திருடக்கூடாது. ஏமாத்தக்கூடாது. மீறி செய்தா சாமி கண்ணை குத்திரும்னு....

  ஆனால் ஜனங்க அதை தவறான வழிக்கும் தன் சுயநலத்துக்காகவும் தெய்வத்தை மிஸ் யூஸ் பண்ணுவது தான் தவறு.. ஒரு சாமி படம் அனுப்பிவிட்டு இதை உடனே பலபேருக்கு அனுப்பு இல்லன்னா கஷ்டம் வரும் நடுத்தெருவில் நிற்பே இதெல்லாம் சொல்லி அதன்படி பயந்து ஸ்கூல் படிக்கும்போது நானே 10 பேருக்கு கார்ட் வாங்கி அனுப்பி இருக்கேன்னா பாருங்க... எதுக்கும் ஆசைப்படலன்னாலும் இப்படி செய்யலன்னா எல்லோரும் துன்பத்தில் அவதிப்படுவீங்க எனும்போது பயம் வந்துவிடுகிறது...

  இப்ப தெளிந்தாச்சு... தெய்வம் இருப்பது உண்மை.. தெய்வ நம்பிக்கை இருப்பதும் உண்மை... மனசாட்சிக்கு விரோதமில்லாம நல்லதையே பேசி நல்லதையே செய்து நல்லதையே கேட்டாலே போறும்... சாமி கண்ணை குத்தாது...

  உங்களுக்கே உரிய இயல்பான நகைச்சுவையான நடையுடன் இந்த பகிர்வு தந்திருப்பது சிறப்புப்பா...

  ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி தான் :)

  மேக்கப் போடாமல் இருந்தால்?? :)

  வம்பு பேசாமல் இருந்தால்?? :)

  பெற்றோர் பார்த்த வரனையே திருமணம் செய்திருந்தால் :)

  மிக அருமையான கிரியேட்டிவிட்டிப்பா.. ரசித்தேன்...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

  ReplyDelete
 9. எந்த சாமி?
  நம்ம டாக்டர் கந்தசாமியை சொல்கிறீர்களா?

  ReplyDelete
 10. அச்சோ.... எனக்குக் கண்ணு போயிடுச்சே....

  இனி ”உண்மை“களுடையப் பதிவுகளைப் படிக்க முடியாதே....

  ReplyDelete
 11. \\அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்.\\ இதுதான் அதுங்க வீக்னசா........... ஆஹா, போற வர்றவன் இதுங்கள பார்க்கணும்னு நினைகுதுங்களா......... நல்லா இருக்கே!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog