உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 21, 2011

அமெரிக்கர்களை வெறுப்பேத்துவது எப்படி?

அமெரிக்கர்களை வெறுப்பேத்துவது எப்படி?நான் வேலைப் பார்க்கும் இடம் எல்லாவித இனமக்களையும் தினசரி சந்திக்கும் வாய்ப்பு உள்ள இடம். இங்கு நிறைய இந்தியர்கள் வேலைப் பார்க்கிறார்கள். இந்தியர்களாகிய எங்களுக்கு அமெரிக்கர்களிடம் சோசியலாக பேசும் போது சில சமயங்களில் அமெரிக்கர்கள் இந்திய பழக்க வழக்கங்களை( அரேஞ்சுடு மேரேஜ்) கேலி செய்து வெறுப்பு ஏற்றுவார்கள்.நாங்களும் அவர்களின் பழக்க வழக்கங்களை பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுவோம்.


அமெரிக்கர்கள் கல்யாணம் செய்து கொண்டாலும் தனித் தனி பேங்க் அக்கவுண்ட் வைத்திருபார்கள். அது போல பெண்கள் அவர்களின் கல்யாண வாழ்க்கையில் அதிகப் படியாக இரண்டு நகைகள் வைத்திருப்பார்கள் ஓன்று என்கேஜ்மெண்ட் மோதிரம் மற்றொன்று கல்யாண மோதிரம். அதைப் பற்றியே அநேக தடவை பேசி மகிழ்வார்கள். அதே போல ஆண்கள் அந்த மாதிரி அதிக விலையுடைய பரிசை வாங்கி கொடுத்தாக பெருமை பேசுவார்கள்.அவர்களிடம் நாங்கள் ( இந்தியர்கள் ) அதுவும் அமெரிக்க பெண்களிடம் இந்தியாவில் பெண்களுக்கு திருமணம் ஆகும் போது பெற்றோர்கள் தான் திருமண செலவை ஏற்று கொள்வார்கள் மேலும் அதிக அளவு நகைகளை பெண்களுக்கு பரிசாக கொடுப்பார்கள் என்று சொல்வோம் அதை கேட்ட அமெரிக்க பெண்கள் விடும் பெரும்மூச்சு இருக்கே அதை எப்படி இங்கே சொல்வதுஎன்று தெரியவில்லை. மேலும் அவர்களை வெறுப்பு ஏற்ற கிழ் கண்ட புகைப் படங்களை அவர்களிடம் காண்ப்பிபோம் இது போதாதா? அவர்களை வெறுப்பு ஏற்ற?


(இது வரை யாரும் என்னிடம் என் கல்யாணப் போட்டோ கேட்டது இல்லை. அதைப் பார்த்தால் அவர்கள் மயக்கமே போட்டுவிடுவார்கள் ஏனென்றால் உலகத்திலயே மிகவும் குறைந்த செலவில் மிக குறைந்த(எங்களையும் சேர்த்து 7) ஆட்கள் வந்து நடந்த கல்யாணம் எனது கல்யாணம் தான் அதைப் பற்றி பிறகு ஒரு கதையே எழுதலாம் என்று இருக்கிறேன்)


அது போல ஆண்களிடம் பேசும் போது நீங்கள் கல்யாணத்தின் போது அதிக செலவு செய்ய வேண்டும் எங்களுக்கு அது போல இல்லை பெற்றோர்களே அதை ஏற்றுக் கொள்வார்கள் கல்யாணத்திற்கு பின் மனைவி தான் சம்பாதிப்பதை எல்லாம் கணவனிடமே கொடுத்துவிடுவார்கள். உங்களைப் போல இரண்டு அக்கவுண்ட் எல்லாம் கிடையாது என்று சொல்லி வெறுப்பு ஏற்றுவோம்.இந்த பதிவை பார்த்த நம் தமிழ் பெண்கள் வெறுப்படைந்தாலோ அல்லது உங்களின் குடும்பத்தில் குழப்பம் வந்தோலோ பதிவாளராகிய நான் பொறுப்பு அல்ல.....ஆண்களே மாமனார் என்னை ஏமாற்றிவிட்டார் என்று தேட கிளம்பிவிட்டீர்களா?

10 comments :

 1. அமெரிக்கனை ‘வெறுப்பேற்றும்’ போது நம்ம ஜாதிச்சிக்கல், மணப்பெண்ணுக்கு தங்கம் டிமாண்ட் பண்ணூவதால் அந்த வீட்டின் பெண்கள் படும் பாடு எல்லாவற்ரையும் பெருமூச்சு விடும் அமெரிக்கப் பெண்களுக்கு சொல்வீர்களா?

  ReplyDelete
 2. பதிவும் படங்களுடன் மிக அருமை
  குறிப்பாக கடைசியில் சொல்லப்பட்டுள்ள வாசகம் சூப்பர்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நான் கேட்கிறேன்..உங்க கல்யாண போட்டோ எனக்கு மெயில் பண்ணுங்க...மயக்கம் அடிச்சு விழுகிறேனான்னு பார்ப்போம்..:))

  குத்துற மாதிரி குத்திருக்கிங்க நம்ம ஊரை...அமெரிக்க தமிழர் ஒழிக..:)

  ReplyDelete
 4. பதிவு எழுத மேட்டர் கிடைக்கலேன்னா சும்மா இருக்கலாம். இப்படி மகா மொக்கையா ஒரு பதிவு, அதுல இப்படி ஒரு தலைப்பு வேற.
  Nothing is better than nonsense.
  Note: நீங்க பதிவுக்கு நடுவில போட்டிருக்க மொக்கை ஜோக்ஸ் ஓசில குடுத்தா கூட ஒறுபய காபி அடிக்க மாட்டான், அதனால அதில உங்க முகவரிய வேற காபி ரைட்ஸ்
  மாதிரி போட வேணாம்.

  ReplyDelete
 5. ஐயா நான் தமிழன் தான் ஆனால் என்னோட மனைவி ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்த அமெரிக்கர். என்னுடைய 6 வருட அனுபவத்தில் நான் கண்டவரை என் மனைவிக்கோ அல்லது அவர்களுடைய குடும்பத்தாருக்கோ நகைகளின் மீது பற்று கிடையாது. இந்திய பெண்கள் வைத்திருக்கும் நகைகளை பார்த்து பெருமூச்சு விடும் அமெரிக்கர்களையும் நான் கண்டது கிடையாது. என் மனைவியை இந்தியா அழைத்து சென்ற போது என் குடும்பத்தார் அவள் தங்கம் அணியாதது குறித்து அதிருப்தி அடைந்தனர். she felt weird and I had to explain the cultural difference.

  ReplyDelete
 6. //அது போல ஆண்களிடம் பேசும் போது நீங்கள் கல்யாணத்தின் போது அதிக செலவு செய்ய வேண்டும் எங்களுக்கு அது போல இல்லை பெற்றோர்களே அதை ஏற்றுக் கொள்வார்கள் //

  எப்பொழதும் அடுத்தவரை சார்ந்து வாழம் குணம். சொந்த சிந்தனை, சுய சம்பாத்தியத்தில் தனக்கான நிகழவை நடத்தாமை. சிறுமை வேண்டுமானால் பட்டுக்கொள்ளலாம்.

  //கல்யாணத்திற்கு பின் மனைவி தான் சம்பாதிப்பதை எல்லாம் கணவனிடமே கொடுத்துவிடுவார்கள். //

  திருமணம் ஆனதும் பெண்ணை எல்லா வகையிலும் அடிமையாக வைத்திருக்கு உதவும். சிறுமை வேண்டுமானால் பட்டுக்கொள்ளலாம்

  ReplyDelete
 7. இந்திய திருமண முறைகள் மற்றும் திருமணத்திற்கு பிறகு பெண்ணை நடத்தும் விதம் எல்லாமே ஒரு கவுரமான அடிமைத்தனத்தின் முறைகளே.

  ReplyDelete
 8. தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
  http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

  ReplyDelete
 9. ஹாஹாஹா பயங்கரமான ஆளுங்க நீங்க, சேம் செடு கோல் சூப்பரா போட்டு இந்திய மானத்தை காப்பாத்துரீங்க போல.

  ReplyDelete
 10. முகுந்தம்மா நகைச்சுவையை நகைச்சுவையாக படித்து கமெண்ட் அளித்த உங்களுக்கு நன்றி. பல பேர் இதை சிரியஸாக எடுத்து அசிங்கமாக அனானியாக வந்து பதில் அளித்துள்ளார்கள் அதை பப்ளிஷ் பண்ணாமல் நீக்கியுள்ளேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog