உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 6, 2011

காங்கிரஸ் கட்சியின் புதிய அதிரடி வேலை வாய்ப்பு திட்டம் ( தமிழர்களூக்கு மட்டும்)

காங்கிரஸ் கட்சியின் புதிய அதிரடி வேலை வாய்ப்பு திட்டம் ( தமிழர்களூக்கு மட்டும்)தமிழக காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டதால் அதில் தலைவர்கள் மட்டுமே அதிகம் இருப்பதால் வருகின்ற தமிழக தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கவும், தேர்தல் வேலை செய்யவும், ஆட்கள் தேவை.
234 வேட்பாளர்கள் தேவை. அதற்கான தகுதிகள்.1.பெறும் பணக்காரராக இருக்க வேண்டும்.

2.கரை படாத வெள்ளை வேஷ்டிகள் கட்டிவரவேண்டும்.

3.வாழ்க்கையில் குனிந்து நிமிர்ந்து வேலைகள் ஏதும் செய்திருக்க கூடாது.

4.பக்கதில் வசிக்கும் தம் சொந்த சகோதரர்களை கொல்லும் போது வேடிக்கை பார்த்தவராக இருக்க வேண்டும்

5.தோல்விகள் கண்டு துவளாத மனம் படைத்தவராக இருக்க வேண்டும் (மிக முக்கிய தகுதி)இந்த வேலைக்காக சம்பளம் ஏதும் கொடுக்கபட மாட்டாது. ஆனால் உங்கள் கறுப்பு பணங்களை வெள்ளையாக்கி கொள்ள இது ஒரு அறிய சந்தர்ப்பம். வேண்டுமானால் தேர்தலுக்கு அப்புறம் நீங்களும் தமிழக காங்கிரஸ் தலைவராக உங்களை நீங்களே அறிவித்து கொண்டு உட்கட்சிக்குள் நடக்கும் காலை வாரி விளையாடும் விளையாட்டில் கலந்து கொண்டு மாதம் இரு முறை டில்லி சென்று அங்குள்ள தலைவர்களிடம் அழுது கொண்டுவரலாம்.


தேர்தல் வேலை செய்யும் ஆட்களுக்கான தகுதிகள் :1.நல்ல வெள்ளை கலர் வேஷ்டி வைத்திருக்க வேண்டும்.

2.தன் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக ஒட்டு சேகரிக்கும் அனுபவம் முக்கியம்.

3.மகா மகா சோம்பேறிகளுக்கு மிக முக்கிய வாய்ப்புகள் தரப்படும்.


சம்பளம் மிக குறைந்த அளவே தரப்படும். ஆனால் மாற்று கட்சிகளிடம் இருந்து அதிக அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம். உத்தரவாதம் உண்டு...சம்பாதிக்க வழி தெரியாதவர்கள் அண்ணன் அழகிரியை தொடர்பு கொள்ளவும்.வாக்காளர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார் துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்
-------------------------------------           ---------------------------------------
Madurai Tamil Guy -யின் அறிவிப்பு. நான் எல்லா கட்சிகளூடன் கூட்டணி வைத்துள்ளேன். எனக்கு ஓவ்வொரு கட்சியிலும் 5 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த தேர்தலில் நிற்க விருப்பபடும் பதிவாளரகள் எந்த கட்சி சார்பாக போட்டியிட விரும்புவதை பின்னூட்டம் மூலம் என்னை தொடர்பு கொள்ளவும்.1.உங்களுக்கான தகுதிகள் என் ஃபாலோவராக இருக்கவேண்டும்.

2.1700000000000000000000000000 இந்த பண மதிப்பை சொல்லவும், வார்தைகளால் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும்.

3.பதிவாளர் வெந்தகுமாரனுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ பேசி பதிவுகள் போட்டிருக்க வேண்டும்,


உங்களுக்கு போட்டியிட விருப்பம் இல்லையென்றால் உங்கள் நண்பருக்காக நீங்கள் விண்ணபித்து டெபாசிட் தொகையை நீங்கள் டாலராக எனக்கு அனுப்பவும்
 

5 comments :

 1. ஹ ஹ...செம நக்கலு பதிவு சார்...மதுரை பக்கம் சுயேட்சையா நிக்கலாமே நீங்க...??? எந்த கட்சி மேலேயும் மக்களுக்கு இப்ப சரியான அபிப்ராயம் இல்ல...நீங்க சுயேட்சையா நின்னால் வெற்றி உங்கள் வசம்..எதுக்கும் யோசிச்சுட்டு மதுரை வர லாரி பிடிக்க பாருங்க..:)))

  ReplyDelete
 2. கோஷ்டி சண்டையின் பது உடனே கோதாவில் குதிக்கனும்

  சோனியா கால நக்க தெரிஞ்சிருக்கணும்

  ராகுல் ... ( வேணா விடுங்க ,,அப்புறம் இந்த கமெண்ட்டையே டெலிட் பண்ணிடுவீங்க)

  ReplyDelete
 3. ஆனந்தி மேடம் நான் லாரி பிடித்து வருகிறேன்..நீங்கள் எனக்காக விண்ணபித்து டெபாஸிட் கட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுங்கள். நீங்கள் தான் எனது கொள்கை பரப்பு செயலாலர். தேர்தல் செலவுக்கு பணம் இல்லையெனில் அண்ணன் அழகிரி அவர்களிடம் என் பெயர் சொல்லி பணம் வாங்கி கொள்ளவும். இப்ப நான் லாரி பிடிச்சால் வெற்றீ விழாக்குள் வந்து விடுவேன்

  ReplyDelete
 4. யூர்கன் க்ருகியர் எனது ஃப்லோவராக சேர்ந்ததற்கு நன்றி எப்போதும் எங்கும் கருத்துகளை நல்லவிதமாகவே பகிர்ந்து கொள்ளூங்கள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog