Wednesday, March 16, 2011


பெண்மையை ஏன் மதிக்க வேண்டும் என்று இப்போதாவது கற்றுக்கொள்வோமா?



உங்களுக்கு தெரியுமா ? 45 Del (Unit) அளவுக்கு மட்டும்தான் வலியை தாங்க கூடிய சக்தி மனித உடலுக்கு உண்டு ஆனால் ஒரு பெண் பிரசவ சமயத்தில் உணரக்கூடிய வலியின் அளவு 57 Del ( UNIT ) ஆகும். அது 20 எலும்புகள் ஒன்று சேர உடைவதால் ஏற்படும் வலிக்கு சமம் ஆகும்.

ஆண்களுக்கு உடல் பலம் மட்டுமே இருக்கலாம் தவிர இது போன்ற சமயங்களில் பெண்களுக்கு உள்ள மன வலிமை ஆண்களுக்கு இல்லையென்று ஒத்துக் கொள்ளதான் வேண்டும்

அதனால் பெண்மையே போற்றி நம்மை வளர்த்த தாயை என்றும் வணங்குவோம்.

கடவுள் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்க முடியாத காரணத்தால் அம்மாவை படைத்து நம்மிடம் அனுப்பியுள்ளான்.

அம்மாவின் அன்புக்கு இந்த உலகில் ஈடு இணையெதும் இல்லை.

உலகத்திலேயே மிகவும் அழகானவள் நம் அம்மாவாகத்தான் இருக்க முடியும். இதை யாராலும் மறுக்க முடியுமா? நண்பர்களே!

Love Your Mom..


நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்து பார்த்து இருப்பிர்களா?

Note : ஏன் ஜெ.ஜெ வை தமிழக மக்கள் அம்மா என்று அழைக்கிறார்கள். அம்மாவிற்கு உள்ள தகுதிகள் ஏதும் இவரிடம் உண்டா? முடிந்தவர்கள் விளக்கம் தரவும். அவர் ஒரு பெண் என்ற மரியாதையை நான் என்றென்றும் தருவேன் ஆனால் அம்மா????????



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.