Monday, March 14, 2011

இவரை நம்பியா தமிழகத்தை கொடுக்க போகிறிர்களா?




கடந்த ஐந்து வருடங்களாக அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வந்த வை.கோவுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த பரிசை எல்லோரும் பார்த்திருப்பிர்கள். இதை பார்க்கும் போது ஜெயலலிதா அவர்கள் இன்னும் தன் கேரக்டரை இன்னும் மாற்றி கொள்ளவில்லை என்பதுதான் தெரிகிறது. தன்னை நம்புவோரை கடைசி நேரம் வரை காக்க வைத்து கழுத்து அறுக்கும் பழக்கம் மாறவில்லை. இவரை நம்பி ஆட்சியை கொடுத்தால் பழைய செயல்கள் தொடரும் என்பதில் எந்த அளவும் மாற்றம் இல்லை.



இவர் ஆட்சி வந்தால் என்ன நடக்கும்?



விஜய காந்தை பதவி ஏறும் முன்னால் காலில் விழுந்து வணங்க வைப்பதும், கலைஞர் குடும்பத்தை பழிவாங்கும் வைபவமும், சசிகலா துணை முதல்வாராகவும், சசிகலா குடும்பத்தின் அதிகார ஆட்டம் ஆட்சியிலும் சினிமாத் துறையிலும். நடக்கும். ஜெயலலிதா செல்லும் வழியெல்லாம் குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் டிராபிக் நிறுத்தப்படும் அந்த டிராபிக்கில் பிரசவத்திற்க்காக செல்லும் பெண்கள் ரோட்டிலிலே பிள்ளை பெறும் காட்சி நடை பெறும். இதைப்பார்த்து பொங்கி எழுவதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி பொங்கி எழும் கறுப்பு எம்ஜியார் ஜெயலலிதாவின் காலில்தான் கிடப்பார் அந்த நேரத்தில் இது படம் அல்ல நிஜம் என்பது அப்போதுதான் புரியும் நம் கறுப்பு எம்ஜியாருக்கு..



அம்மாவின் ஆட்சி காய்ந்தமாடு கம்பம் கொல்லையில் புகுந்தமாதிரிதான் இருக்கும் என்பது என் எண்ணம். அதற்காக நான் தி.மு.காவிற்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்லவில்லை.



ஒட்டு போடுவதற்கு முன்பு நன்றாக சிந்தியுங்கள் அதன் பின் வாக்களியுங்கள். உங்கள் எதிகால வாழ்க்கை உங்கள் கையில்தான். நீங்கள் போடுவது ஒட்டுஅல்ல ...அது விதை. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுதான் பன் மடங்காக விளையும். தமிழக மக்கள் எதை அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதை வேடிக்க்கை மட்டும் பார்க்க முடிந்த கையாலாகாத வெளி நாட்டில் வசிக்கும் தமிழன்.



ஆனால் இந்த முறை நமது தமிழக சகோதர சகோதரிகள் புத்திசாலியாக செயல்பட்டு இந்தியாவிற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக செயலில் காட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.



ஏதோ என் மனதிற்குள் தோன்றியதை நான் எழுதிவிட்டேன். நான் நினைத்த்து சரியா தவறா என்பதை நீங்கள்தான் எனக்கு சுட்டிகாட்டவேண்டும்.

4 comments:

  1. Poda lusu!! Thatha than vettukku illa jailuku pohaporar (2G).

    ReplyDelete
  2. whatever u wrote 100% correct. jj is a dry cow.

    ReplyDelete
  3. எப்படியும் தனக்குக் கிட்டிய கனியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்....என்று நம்புவோம்

    நம்பிக்கைதானே வாழ்க்கை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.