புன்னகை பூக்கும் எங்கள் வயிறு. உங்கள் மனதை பாதிக்கும் பதிவு
பணம் இருக்கும் திமிரில் அளவுக்கு அதிகமாக உணவை ஆர்டர் செய்து எச்சிலாக்கி மிச்ச மீதியை எரிச்சல் அடைந்து தூக்கி எரியும் மனிதர்கள் ஒரு புறம் அதை மச்சம் என நினைத்து புன்னகை பூக்கும் சில நபர்களின் வயிறு மறுபுறம்.
உணவை கொட்டும் முன்னே சற்றும் சுற்றி பாருங்கள் .உங்களுக்கு ஏராளம் என்று நீங்கள் தூக்கி ஏறிவதை நாங்கள் தாராளம் என்று ஏற்றுக் கொள்வோம்.
நீங்கள் கிடைக்கின்ற உணவிற்கு நன்றி சொல்வீர்களோ இல்லையோ ஆனால் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற உணவுக்கு மனம் குளிர்ந்து நன்றி சொல்வோம் இறைவனுக்கு என்றென்றும். கிழே உள்ள விடியோ க்ளிப்பை பாருங்கள்.
ஏன், உணவை உணவாக மதிக்காத நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இது விளங்குவதில்லை ?
பாரதி சொன்னது போல் "தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எவ்வளவு உண்மை
உணவு தானம் செய்ய வேண்டாம், வீணாக்காமல் இருக்கலாமே ?
எனது மனதை இந்த விடியோ க்ளிப் பாதித்தது. உங்கள் இதயங்களையும் பாதித்ததுதானே? பதில் எழுதுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்
முதல் படத்தை பார்க்கவே முடியவில்லை .
ReplyDeleteஉண்மையாகவே மனதை பதற செய்த பதிவு .
மூட்டை மூட்டையாய் fungus வரும் அளவுக்கு நாசம் பண்ணவங்களுக்கு
அந்த photovai kaattanum.
கடைசி பஞ்ச் ,nice
புகைப்படமும் குறும்படமும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல
ReplyDeleteமனதை மிகவும் பாதித்தது
பதிவைத் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி
ஒரு உறுதி எடுக்கச் செய்ததைப்போல
நிச்சயம் இது பார்ப்பவர்கள் அனைவரிடத்தும்
ஒரு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அந்த சின்ன குழைந்தைகள் ஓடி வந்து உணவை எடுப்பதும், Noodles -ஐ பார்த்தவுடன் அந்த சின்ன பையனின் முகத்தில் தெரிந்த சந்தோசத்திற்கும், அந்த தகப்பனின் prayer -உம்...கரையாத, மனசாட்சியுள்ள எந்த ஒரு மனதையும் கரைக்கும்...
ReplyDelete