Thursday, March 31, 2011

விஜயகாந்தை கொலை செய்ய சதித்திட்டம். சதி திட்டம் அம்பலம்



நடிகர் கறுப்பு எம்ஜியாரல் பாதிக்கபடாத நபர்கள் & கட்சிகளே இல்லை எனலாம். இந்த தேர்தல் அவரின் கட்சிக்கு இறுதி தேர்தல் இதில் வாழ்வா சாவா என்பது தெரிந்துவிடும். அது போல அவரால் பாதிக்க படாத நபர்களே இல்லை எனலாம். உதாரணத்திற்க்கு கலைஞர், அய்யா ராமதாஸ், வைகோ மற்றும் ஜெயலலிதா அவர்கள். இவரால் பாதிக்கப்பட்ட கட்சிகள் அநேகம் அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி றிவுகெட்ட திருட்டு முட்டாள் ழகம் தான். அதனால்தான் அவரால் பாதிக்கப்ட்ட றிவுகெட்ட திருட்டு முட்டாள் ழகத் தலைமை என்ன விலை கொடுத்தாவது அவரை தன் கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்ற முயற்சி செய்து கடைசியில் அவரைதன் கட்சிக்குள் வளைத்து போட்டது. இந்த தேர்தல் அந்த தலைமைக்கும் கடைசி தேர்தல் அதனால் இந்த தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அந்த தலைமை முடிவு செய்துள்ளது. எப்போதுமே பழிவாங்கும் குணம் கொண்ட இந்த தலைமை விஜயகாந்தை பழிவாங்க சதிதிட்டம் போட்டது அதன் முதல்படி அவரை தன் கட்சிக்குள் இழுத்து போட்டது. அதன் பின் தேர்தலுக்கு முதல் நாள் அவரைத் தீர்த்து கட்டவும் முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக ஆளும் கட்சிக்கு பழியும அதனால் கிடைக்கும் அனுதாப ஓட்டால் தம் கட்சி வென்று விட வாய்ப்பும் எதிர்காலத்தில் இவரால் கட்சிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படக் கூடாது என்று முடிவு செய்துள்ளது. எல்லோரும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முற்படுவார்கள் ஆனால் இந்த தலைமை மூன்று மாங்காய் அடிக்க முயற்சி செய்கின்றது. இந்த ரகசியத்தை அவர்கள் உண்மைகள் என்ற ப்ளாக்கின் புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது.( எப்படி நம்ம பில்டப்....) ஹீ....ஹீ......ஹீ........



நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்' என்ற பாரதியாரின் கவிதை வரியை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அரசியலில் எதுவும் சாத்தியம்; எவருக்கும் வழியும் கிடையாது, மறையும் கிடையாது என்று நம்ப வைத்துள்ளது தற்போதைய அரசியல் போக்கு. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், எப்படியும் மே 13ம் தேதிக்குப் பின், மக்களை முட்டாளாக்கத்தான் போகின்றனர். அதைத் தாங்கும் அளவுக்கு மக்களுக்கு ஒரு மனோதைரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இச்செய்தி. ஒருவேளை உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம்  நடந்துவிட்டால், "Madurai Tamil Guy' பொறுப்பல்ல."அரசியல்வாதிகளைப் போல் நீங்களும் எங்களை முட்டாளாக்கலாமா' என்று கோபப்படும் வாசகர்களுக்கு, ஏப்ரல் முதல் நாள் வாழ்த்துக்கள்...!




இது ஒரு முழு கற்பனையே....கற்பனையைத் தவிர உண்மை ஏதுமில்லை. நான் தினமலரில் படித்த முட்டாள் தின (Apirl Fool) செய்தியின் விளைவே இந்த கற்பனை அவர்களின் கற்பனையை படிக்க இங்கே அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு க்ளிக் செய்யவும் ((http://www.dinamalar.com/News_Detail.asp?Id=216455 )


31 Mar 2011

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.