உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, February 3, 2011

தி.மு.க அல்லது அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர என்ன செய்யவேண்டும்??

தி.மு.க அல்லது அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர என்ன செய்யவேண்டும்??


இதெல்லாம் ஒரு கேள்வியா இலவசங்களை அள்ளித்தந்தால் ஆட்சிக்கு வரமுடியாத என்ன என்று கேட்கலாம் அதனால்தான் மண்டை காய்ந்து கூட்டணி குழப்பத்தில் இருக்கும் கட்சிகளுக்கு எனது இலவச ஐடியாக்கள்.


தமிழக அரசியல் கட்சிகளுக்கு இலவச வாக்குறுதி ஐடியாக்கள்


இலவசங்களை அள்ளி தருவதில் தமிழக கட்சிகளை மிஞ்ச இந்த உலகத்தில் வேறு எந்த கட்சிகளும் கிடையாது. அதுபோல தமிழக மக்களை போல சூடு சுரணை கெட்ட மனிதர்கள் இந்த உலகத்தில் வேறு எங்கேயும் காண முடியாது. அதனால் தான் தம் சொந்த சகோதரர்கள் பக்கத்து நாட்டில் மடிந்துவிழும் போது எந்தவித உதவி ச்சீசீ...ஒரு குரல் கூட கொடுக்காமல் இருந்தார்கள். இப்பொழுதும் கூட தம் சொந்த மண்ணில் உள்ள மீனவர்கள் சுட்டு கொள்ளப்படும் போதும் கூட அமைதியாக இருந்து இந்த எலெக்சனில் யாரு.... யாருகூட கூட்டணி வைக்கப் போகிறார்கள் நமக்கு என்ன இலவசமாக கொடுக்கப் போகிறார்கள் என்று இருக்கிறார்கள்.இவர்களை நான் சூடு சுரணை கெட்ட மனிதர்கள் என்று அழைப்பதில் தவறு இல்லை என்பதுதான் எனது கருத்து(ஃபேஸ் புக், டிவீட்டர், மற்றும் வலைத்தளங்களில் போராடும் தமிழ்மக்கள் இதிலிருந்து விதிவிலக்கு)அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருப்பதால் அவர்களுக்கு இந்த இலவசங்களை சிந்திப்பதற்கு நேரம் இல்லை.மக்களுக்கு இலவசங்களை அள்ளித்தரும் கட்சிகளுக்கு இந்த தடவை ஒரு மாறுதலாக அந்த கட்சிகளுக்கு இலவச ஐடியாக்களை நான் அள்ளித் தருகிறேன்.


இலவச வாக்குறுதி ஐடியாக்கள்"1. வீட்டுக்கு ஒரு லேப் டாப் கம்யூட்டர் இலவசம்.

2. ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு பட்டுபுடவை இலவசம்.

3. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக பிட்ஸா, பர்கர். ஃபரஞ் ப்ரை,கோக் இலவசம்.

4. மகா குடிகாரர்களூக்கு V.I.P உறுப்பினர் அட்டை வழங்கப் பட்டு அவர்களுக்கு விலையில் 20 சதவிகிதம் டிஸ்கவுண்ட்.

5. ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வழங்குவதற்கு பதிலாக அன்றன்று சமைத்த உணவு வழங்கப்படும்.(இதனால் பெண்களுக்கு சமைக்கும் வேலை குறைவு . மேலும் டி.வி சிரியல் பார்க்க அதிக நேரம் கிடைக்கும் அவர்கள் அறிவுத்திறன் வளரும்)

6. கள்ள காதலர்களுக்கும், காதலர்களுக்கும் பீச்சில் அதிக அளவு இடம் ஒதுக்கப்படும். அதற்கு குறைந்த கட்டணமாக அனுமதி சீட்டு வழங்கப்படும். இதனால் போலீஸ்காரர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்

7. எல்லா தமிழக மக்களூக்கும் கலைஞர் படம் போட்ட மஞ்சள் துண்டு அல்லது அம்மா படம் போட்ட பச்சை கலர் ஷால் இலவசமாக வழங்கப்படும்.

8. எல்லா குழந்தைகளையும் அமெரிக்காவில் உள்ளது போல இலவசமாக ஸ்கூல் பஸ்ஸில் அழைத்து செல்லப் படுவார்கள்.( பஸ்ஸில் கலைஞர் படம் அல்லது அம்மா படம் பெரிய அளவில் போடப்பட்டிற்கும்). இந்த பஸ்ஸை ஒட்டுபவர்கள் அரசு டிரைவர்களாக ஆக்கப்படுவார்கள்( கட்சிகாரர்களுக்கு அரசின் புதிய வேலை வாய்ய்பு)

9. இந்த பஸ்ஸில் செல்ல விருப்பம் இல்லாத வசதி படைத்த குழந்தைகளுக்காக சொகுசு கார்கள் குறைந்த செலவில் விடப்படும்.

10. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஐயா ராமதாஸின் வேண்டுகோளுக்கு இணங்க டாஸ் மார்க் கடைகள் மூடப்படும்.( டோண்வொரி தமிழக மக்களே) அதற்கு பதிலாக எல்லா கடைகளிலும் ஒயின், பீர் மற்ற இதர டிரிங்கஸ் விற்க்கப்படும்.

11. வயதான ஆண்களுக்கு வயகாரா இலவசம்.

12. ஊழல் பாரதம் என்ற மகா டிவி சிரியல் எடுக்கபட்டு அதில் நடிக்க தமிழக மக்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

13. தாங்கள் செய்யும் ஊழல்களில் ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கும் மட்டும் 10 சதவிகித பங்கு அளிக்கப்படும்கடைசியாக ப்ளாக் நடத்தி பதிவுகள் போட்டு எனக்கு தமிழ்மணத்தில் அல்லது இண்டலி போன்ற வலைத்தளங்களில் ஓட்டு போடுங்கள் என்று கதறிக் கொண்டிருக்கும் வலைத்தளம் நடத்துபவர்கள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வந்து நீங்கள் எழுதும் மட்டமான பதிவிற்கும் வந்து ஓட்டு போடுவார்கள் என்று உறுதி கூறுகிறோம்வாழ்க தமிழகம்......???????என்னிடம் இருந்த ஐடியாக்களை இங்கே கூறியுள்ளேன். இதை படித்த உங்களுக்கு மேலும் ஐடியாக்கள் தோன்றினால் பின்னுட்டாமாக போடவும்.( Indian, Politics ,Madurai ,Tamil ,Fun )

6 comments :

 1. எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வந்து நீங்கள் எழுதும் மட்டமான பதிவிற்கும் வந்து ஓட்டு போடுவார்கள் என்று உறுதி கூறுகிறோம்//

  :))

  இதுக்காகவே இந்த திட்டம் ஜெயிக்க பிராத்திக்கிறேன்..

  ReplyDelete
 2. அட்ரா சக்கை. இதில் ஏதாவது ஒன்று நடந்தால் கூட தமிழகம் வரைவில் அழிய நீங்கள் தான் முதல் காரணமாய் இருப்பீர்கள். அரசியல்வியாதிகளுக்கு கவலை இல்லை. நமக்குதான் மனசாட்சி என்றொன்று இருக்கிறதே ஜாக்கிரதை

  ReplyDelete
 3. //13. தாங்கள் செய்யும் ஊழல்களில் ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கும் மட்டும் 10 சதவிகித பங்கு அளிக்கப்படும்//

  அய்யோ.. அய்யோ.. இது ஒண்ணே போதுமே.. சொக்கா.. சொக்கா... ஒண்ணா ரெண்டா.. 1 லட்சத்தி எழுவத்தாறாயிரம் கோடில எம்பங்கு எம்புட்டுங்கோ?

  ReplyDelete
 4. தமிழ்நாட்டில் இப்படி தூக்கத்தில் தான் கனவு காண வேண்டும்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog