உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 28, 2010

அன்பைத்தேடி..........

ஒரு பெண் வீட்டு வாசலுக்கு வந்த போது மூன்று முதியவர்கள் அமர்ந்திருப்பதை கண்டார். அவர்கள் யாரு என்று அவளால் அடையாளம் காண முடியவில்லை. இருந்த போதிலும் அவர்கள் மூவரும் பசியால் முகம் வாடியிருப்பதை அவளால் அறிய முடிந்தது. எனவே அவள் சொன்னாள் பெரியவர்களே நீங்கள் யாரு என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நீங்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறிர்கள்.வீட்டிற்குள் வாருங்கள் நான் உங்களுக்கு உணவு தருகிறேன் என்றார். அதற்கு அந்த முதியவர்கள் உன் வீட்டுகாரர் இருக்கிறாற என்று கேட்டார்கள். அந்த பெண் இல்லையென்றதும் அப்படியானால் எங்களால் வரமுடியாது என்று சொன்னார்கள்.


ஈவினிங் கணவர் வந்ததும் நடந்தை அந்த பெண் சொன்னார். கணவர் சொன்னார் பரவாயில்லை இப்பொழுது அவர்களை உள்ளே கூப்பிடு என்று சொன்னார். அந்த பெண் அவர்களை இப்போது உள்ளே வருமாறு அழைத்தார். அதற்கு அவர்கள் சொன்னார்கள் நாங்கள் மூவரும் சேர்ந்து யாரு வீட்டிற்குள்ளும் செல்லுவதில்லை என்று. அந்த் பெண் வியப்புடன் ஏன் என்று காரணம் கேட்டார். அதற்கு ஒரு முதியவர் இன்னொருவனை சுட்டிக்காட்டி சொன்னார் அவன் பெயர் செல்வம் அவனுக்கு அடுத்து இருப்பவன் பெயர் வெற்றி, எனது பெயர் அன்பு. இப்போது போய் உன் கணவரிடம் போய் கேள் யாரு உள்ளே வர வேண்டுமென்று?அந்த பெண் கணவரிடம் நடந்தை சொன்னார். அதற்கு அவர் மிகுந்த சந்தோஷத்துடன் செல்வத்தை கூப்பிடு நாம் வீடு செல்வதால் நிறைந்து இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு அந்த பெண் மறுத்து சொன்னார் என்னங்க வெற்றி இருந்தால் நமக்கு எதிலும் வெற்றி கிடைக்கும் அது நல்லது தானே என்றார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த வீட்டின் மருமகள் சொன்னாள் அன்புதானே எல்லோருக்கும் தேவை எனவே அன்பை கூப்பிடுங்கள் நம் வீடு முழுவதும் அன்பு நிறைந்து இருக்கட்டும். எல்லோருக்குமும் மருமகள் சொன்னது சரியாகப்பட்டது. எனவே அன்னைவரும் அன்பை கூப்பிடுவது என்று முடிவு செய்தனர்.அந்த பெண் வெளியே சென்று உங்கள் மூவரில் யாரு அன்போ அந்த பெரியவர் எங்கள் விருந்தாளியாக உள்ளே வரலாம் என்று அழைத்தார். உடனே அன்பு எழுந்து வீட்டிற்கு நடந்து சென்றது உடனே மற்ற இருவரும் அவர் கூடவே நடந்து சென்றனர். உடனே அந்த பெண் ஆச்சிரியப்பட்டு நான் அன்பை மட்டும் தான் அழைத்தேன் ஏன் நீங்கள் இருவரும் இப்போ வருகிறீர்கள் என்று கேட்டாள்.அதற்கு ஒரு பெரியவர் நீங்கள் செல்வத்தையாவது அல்லது வெற்றியையாவது கூப்பிட்டு இருந்தால் மற்ற இருவர் இருந்திருப்பார்கள் ஆனால் அன்பை கூப்பிட்டீர்கள். அன்பு எங்கேயெல்லாம் போகிறதோ அங்கேயெல்லாம் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம்.எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே எப்பொழுதும் வெற்றியும் செல்வமும் இருக்கும். இதைப் படித்த பின்பு அன்பு செலுத்த பழகுங்கள் பின் வெற்றியும் செல்வமும் உங்கள் வீடு தேடி வரும். அதிக அளவு செல்வம் வைத்திருந்தால் அதுவும் ஆபத்து அதுக்காக அன்பு செலுத்துவதை குறைத்து கொள்ளாதிர்கள். அதற்கு பதிலாக உங்கள் செல்வத்தை என்னிடம் அனுப்பி வையுங்கள். உங்களுக்காஅ நான் ரிஸ்க் எடுத்து பார்த்து கொள்கிறேன்.யாரவது கோபலபுரம் சென்றால் கலைஞர் அவரிடம் என்னை பற்றி சொல்லிவையுங்கள். அவர்கள் குடும்பம் தான் தமிழ் நாட்டிலேயே அதிக அன்புள்ள பெரிய குடும்பம்.
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன் 

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. இந்த போஸ்ட் ரொம்ப பிடிச்சு இருந்தது...இது மகாபாரதத்தில் வரும் சின்ன பக்க கதை..ஒரு முனிவர் மற்றும் அவர் குடும்பத்துக்குள் நடக்கும் கதை...இதை நான் பலமாதிரி வடிவத்தில் படிச்சுருக்கேன்..பட் உங்களோட இந்த presentation நல்லா இருந்தது...அதுவும் பைனல் டச் வாஸ் குட்...வாழ்த்துக்கள் தமிழ் guy சார்!!

  ReplyDelete
 2. இந்தப் பதிவு நல்லாருக்கு. அங்கங்கே உள்ள ஊக்க வாசகங்களும் நல்லாருக்கு.

  அப்புறம், கோபாலபுரத்துல நிறைய அன்பு இருக்கதுனால, குவிஞ்சிருக்கிற செலவத்தால் வெற்றியை ‘வாங்கிக்கிறாங்க’ன்னு சொல்றீங்களா நீங்க? :-)))

  ReplyDelete
 3. ​கோபாலபுரத்து அன்பாலதான் கட்சி​யே உ​டையும் நி​லையில் இருக்கிறது...

  ReplyDelete
 4. அருமை நண்பா ..............

  கதை பழசு ..........
  சொல்லிய விதம் புதுசு ........

  ரசித்தேன்
  மகிழ்ந்தேன் ........

  சிறப்பு .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog