உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 14, 2010

என் காதல் கண்ணீர்....ஒரு வாரமாக விடாது மழை எப்படா சூரியனைப் பார்க்க மாட்டோமா என்று நினைத்து கொண்டிருந்த போது செல் போன் சிணுங்கியது. மீண்டும் அவளேதான் ,இந்தவாரத்தில் அவளை சந்திப்பது இது நான்காவது தடவை. இந்த அடாது மழையிலும் அவள் எனக்காக வந்து அருகில் உள்ள காபி கடையில் காத்திருக்கிறாள். அவள் தோழி யாரோதான் வந்து டிராப் செய்துள்ளார்கள் போலும்.. அவளேதான் தன்னம் தனியாக அந்த சின்னம் சிறிய பிங்க் கலர் குடையை பிடித்தபடி குளிரில் நடுங்கியபடி பார்க்கவே மிகவும் பலவினமாக நின்றிருந்தாள்.

நான் மெதுவாக அவள் அருகில் சென்று கல்நெஞ்சத்துடன்,எத்தனை தடவதான் உன்னிடம் சொல்வது என்னைப்பார்க்க வர வேண்டாமென்று....

அவள் சொன்னாள் " ஐ மிஸ் யூ " என்று........நான் மீண்டும் கல்நெஞ்சத்துடன் அவளிடம் வா...நான் உன்னை உன் வீட்டிற்க்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னேன். அவளோ அவள் குடையை திறக்காமல் நின்றாள் எனக்கு தெரியும் அவள் என் அருகில் வந்து என் குடைக்கு அடியில் என் கூட சேர்ந்து கொள்ளலாம் என்று...நானும் விட்டு கொடுக்காமல் உன் குடையை ஒப்பன் செய்து வா.. போகலாமென்றேன்.அவள் வேண்டா வெறுப்பாக குடையை ஒப்பன் செய்து நடந்து வந்து என் காரில் ஏறினாள். காரில் ஏறியதும் சொன்னால் காலையில் இருந்து ஒன்னும் ஒழுங்காக சாப்பிடவில்லை எனவே போகும் வழியில் நிறுத்தினால் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று.நான் உடனடியாக கல்நெஞ்சத்துடன் மறுத்தேன்.. அவள் வெறுப்புடன் ரயில்வே ஸ்டேசனில் கொண்டுவிட்டாள் ரயில் ஏறி சென்றுவிடுவதாக சொன்னாள்.இந்தவிடாத மழைக்காரணமாக அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம். அவளால் ஒரு ட்ரெயினிலும் ஏற முடியவில்லை.நீண்ட நேரமாக இரண்டு பேரும் காத்திருந்ததார்கள் அவள் என்னைஅப்பாவி முகத்துடன் விழிமேல் விழிவைத்து என்னைப் பார்த்தாள். அவளின் உணர்வு எனக்கு புரிந்தது. இவ்வளவு தூரத்தில் இருந்து, இந்த அடாதமழையில் என்னப் பார்க்க வந்தவளை நான் எப்படி நடத்துகின்றேன் என்று...என் மனது வலித்தது..என் மனதில் தோன்றிய குற்ற உணர்வால் அவளை இந்த ஒரு இரவு மட்டும் என்னுடன் தங்கிவிட்டு செல்ல அனுமதி அளிக்காலாம் என்று என் மனது ஒரு கணம் நினைத்தது.ஆனால் உண்மையில் கடின உள்ளத்தோடு "வா பஸ்ல போக முயற்சிக்கலாம் என்றேன். பஸ் ஸ்டாண்டோ நடக்கும் துரத்தில் உள்ளதால் நடந்து சென்றோம்..என் நினைவுகளோ பின்னோக்கி சென்றன....இவளையும் சேர்த்து நாங்க நான்கு பேர் சேர்ந்து ஒரே வாடகைவீட்டில் இருந்தோம். எங்க போனாலும் நாங்க நான்கு பேரும் சேர்ந்துதான் போவோம். நாங்கள் ஒரு குடும்பம் போல ஒற்றுமையாக இருந்தோம். திடீரென எங்கள் இருவருக்குள்ளூம் ஒரு நெருக்கம். நான் அவளை காதலிக்க ஆரம்பித்தேன்..அவள் படிப்பை முடித்துவிட்டாதால் அவள் அவளுடைய சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டாள், எனக்கோ இன்னும் ஒரு ஆண்டு படிப்பு இருந்தது. விடுமுறை வரும் நேரத்தில் நான் ரயிலில் அவள் வீட்டிற்கு சென்று பார்த்து வருவேன். ஆனால் அதிக நேரம் அங்கே இருக்க மாட்டேன். மிகவும் இரு புதையலை போன்று என் உறவை வைத்து இருந்தேன்.மெதுவாக அவள் நடைபாதையில் எனக்கு முன் சென்று கொண்டிருந்தாள். பலகினமனத்தோடு தள்ளாடி தள்ளாடி சென்ற போது வேகமாக காற்று விசியதால் அவள் குடை உடைந்து போனது. இப்போது போர்களத்தில் காயம்பட்ட வீரன் போல சோர்ந்து நடந்தாள். நடக்கும் போது தள்ளாடி அவள் வரும் காரில் விழ தெரிந்த போது அவளை கைத்தாங்களாக பிடித்து அழைத்து, வரும் போது என் அடிமனதில் மிக பயங்கரமான் வலி தோன்றியது. போகும் வழியில் நாங்கள் அடிக்கடி செல்லும் பார்க் வந்தது.அதை பார்த்ததும் அவள் என் கையை பிடித்து கெஞ்சியாவாறு ஒரு தடவை கடைசியாக இந்த பார்க்கிற்கு சென்று வருவோம். அதன் பின் சத்தியமாக நான் ஏதும் கேட்காமல் நான் என் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறினாள்.

அவளின் கெஞ்சுதலுக்கு என் கல்லான இதயமும் ஐஸ்கிரிம் போல இளகியது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவளை பார்க்குக்கு அழைத்து சென்றேன்.நான் ஒரு மழை நீர் துளி பாடாத இடத்தில் நின்றேன். அவளோ அருகில் இருந்த ஓக் மரத்தை சுற்றி வந்து ஏதோயோ தேடினாள். அவள் என்ன தேடுகிறாள் என்று எனக்கு தெரியும்.ஆறுமாதத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் சேர்ந்து இங்கு வந்த போது சிறிய பாக்கெட் கத்தியினால் பனி & ரத்னா வந்தார்கள். இருவரும் ஒருத்தரை ஒருவர் நேசிக்கின்றனர். அவர்கள் உயிர்யுள்ளவரை இதை மறக்க மாட்டார்கள் என் செதுக்கினோம். அதைத்தான் ரத்னா சிறிது நேரம் தேடி கண்ணில் கண்ணிரோடு திரும்பி வந்தாள்.

அவள் சொன்னாள் பனி நாம் எழுதி வைத்ததை அங்கு காணோம் என்றாள். என் இதயத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு & என் இதயமே சுக்கு நூறாக உடைந்தது போல ஒரு பெறும் வலி ஏற்பட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் எனக்கு அதைபற்றி ஒன்னும் கவலையில்லை என்றவாறு நாம் கிளம்பலாமா என்றேன்.

நான் என் பெரிய கறுப்பு குடையை விரித்தேன். என் அருகில் வந்து நின்றவள். போக மனது இல்லாமல் இன்னும் சிறிது சான்ஸ் ப்ருப்பதாக நினைத்து என்னிடம் கேட்டாள். நீங்கள் இன்னொரு பெண்ணை விரும்புவதாக கூறியது கட்டுகதைதானே. நான் எந்த முறையிலாவது உங்களை வெறுப்படைய அல்லது தவறு செய்திருந்தாள் என்னை மன்னித்து கொள்ளுங்கள். நாம் மீண்டும் புதியதாக பழயதை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்குவோம் என்றாள்.

அதன் பிறகு நான் ஒரு வார்தை கூட அவளிடம் பேசாமல் தலையை சிறிது வேகமாக அசைத்து தலையை கிழே தொங்கப் போட்டவாறு பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தோம். மீண்டும் என் நினைவுகள் பின் நோக்கி சென்றன.....

மூன்று வருடங்களுக்கு முன்பு உடல் நலம் இல்லாததால் டாக்டரிடம் சென்ற போது எனக்கு ஆரம்ப கட்ட கேன்ஸர் இருப்பதாகவும் அது குணமாகக் கூடியதுதான் என்று சொன்னார். அதன் பிறகு அவர் தந்த மருந்துக்களை சாப்பிட்டு அவரையும் அந்த நோய்யையும் மறந்து விட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு பின் உடலில் ஏற்பட்ட வலியின் காரணமாக டாக்டரிடம் சென்ற போது, அவர் செய்த டெஸ்டின் ரிசல்ட்டை பார்க்கும் போது கேன்ஸ்ர் மிகவும் முற்றிப் போய்யிருப்பதாகவும் நான் அதிக நாள் வாழ முடியாது என்று சொன்னார். என்னால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு எந்த சிறிய வலியும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தற்கொலை பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.ஆனால் நான் தற்கொலை செய்த காரணத்தை ரத்னா கண்டுபிடித்தால் அவள் வாழ்க்கையயை விணடித்து விடுவாள் . இந்த இளம் வயதில் என்ன்னால் அவள் வாழ்க்கை விணாகிவிடகூடாது என்றுதான் என்னுடய இந்த நாடகம். அதனால்தான் நான் உருவாக்கிய அவளை எனக்கு பிடிக்கவில்லை யென்ற பொய் நாடகம். இது ஒரு க்ருயல் நாடகம் தான் . இது அவளி இதயத்தை சிறிது உடைக்கத்தான் செய்யும் .ஆனால் இந்த நாடகம் நாங்கள் பழகிய நாட்களை எளிதாக காலப்போக்கில் அவளிடம் இருந்து துடைத்துவிடும்.காலம் அதிகமில்லை...கூடிய விரைவில் என் தலை முடி உதிர தொடகினால் அவளுக்கு தெரிந்து போகும். இந்த நாடகத்தில் நான் வெற்றியை எட்டும் நேரம் வந்துவிட்டது. இன்னும் இருபது நிமிடத்தில் இந்த நாடகம் முடிந்துவிடும். இதுதான் என் மனத்தில் தற்போது ஒடிக் கொண்டிருக்கிறது.நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது.. பஸும் வந்தபாடில்லை. எனவே நான் செல் போன் எடுத்து கால் டாக்ஸியை கூப்பிட்டேன்.எங்களின் இறுதி நேரம் சத்தமில்லாமல் மெளனமாக கழிந்து கொண்டிருந்தது.டாக்ஸி வருவதைக் கண்டது கஷ்டப்பட்டு என் கண்ணீரை அடக்கி கொண்டு டேக் கேர் ஆஃப் யுவர் செல்ஃப், டேக் குட் கேர் ஆஃப் யுவர் செல்ஃப் என்று சொன்னேன். அவள் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிறிது தலையை அசைத்தவாறு அவள் உடைந்து போன குடையை தலை மேல் வைத்து டாக்ஸியை நோக்கி நடந்தாள் நான் அவளுக்காக டாக்ஸியின் கதவை திறந்தேன். அவள் என்னை ஒரு பார்வை பார்த்து ஏதும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள். இரண்டு உள்ளம் உடையும் கடைசி நொடி அது.காரின் கண்ணாடி வழியாக என் முதல் காதலியும் என் இறுதி காதலியும் என் இறுதி வாழ்க்கையில் இருந்து வெளியே செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். டாக்ஸி மெதுவாக நகர்ந்த்து. என்னால் என் வருத்தத்தை அடக்க முடியவில்லை.. என் இருதயத்தை யாரோ வெளியே எடுத்து கசக்கி பிழிந்த மாதிரி ஒரு பெரிய வலி.... கைகளை ஆட்டியவாறு காரின் பின்னாலேயே ஒடினேன்.. எனக்கு தெரியும் அவளை கடைசிதடவையாக பார்ப்பது என்று...அவளிடம் நான் இன்னும் அவளைத்தான் காதலித்து கொண்டிருக்கிறேன் என்று... என்னுடனே இருந்து விடு என்று கத்த வேண்டும் போலிருந்தது. நான் கத்த வாயை திறக்கும் போது கார் தெரு முனையை விட்டு திரும்பி சென்றது. என் கண்களில் இருந்து கண்ணிர் வழிய தொடங்கியது அது மழை நிரோடு கரைந்து போனது. நான் கதறி அழுக தொடங்கினேன் என்னோட சேர்ந்து வானமும் கதறியது....இந்த நாள் வரை அவளிடம் இருந்து எந்த போனும் வரவில்லை...அவள் என் கண்ணிரைக்கூட பார்க்க வாய்ப்பு இல்லை ஏனென்றால் மழை நீரில் என் கண்ணீர் கரைந்து விட்டது...........

.இது வரை நடந்ததை சொன்ன நான் பனி இல்லை நான் ரத்னா . என் ஞாபகத்திலிருந்தும் நான் கடந்த வருடம் கண்டு எடுத்த பனியின் டைரியில் இருந்து பனி எழுதியதைதான் நீங்கள் படித்த்து.என் பனி போன்ற நல்லவர்களை கடவுள் சீக்கிரம் அழைத்து கொள்கிறான். ஏன்?.......ஏன்?............ஏன்?-------------------------------------------

இது எனக்கு இமெயிலில் வந்த ஆங்கில கதையை நான் எனக்கு தெரிந்த தமிழில் வழங்கியுள்ளேன்.. எப்படி என் நடை? நேரம் கிடைத்தால் கமெண்ட்ஸ் எழுதவும். நன்றி...

3 comments :

 1. மதுரை மச்சானுக்கு...இந்த பதிவு ரொம்பவே உணர்ச்சி பெருக்கோட இருந்தது...உங்கள் தமிழாக்கம் அருமை...

  ReplyDelete
 2. போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
  போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
  உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
  யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
  கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

  அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய் ...
  அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
  கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
  என் வாழ்வில் வந்தேவானாய் ஏமாற்றம் தாங்கலையே
  பெண்ணே நீ இல்ல்லாமல் ...பூலோகம் இருட்டிடுதே

  http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6981

  check out this link....

  ReplyDelete
 3. nenjai nehila vaithathu unkal kathal kathai kathaiyin iruthiyil en kannilum kanner.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog