Friday, January 28, 2022

 பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்




டிவிட்டரில் ஒரு பொண்ணு  "வாழவே பிடிக்கவில்லையென்று "ஒரு டீவிட் போட்டு இருக்கிறது.. உடனே அதைப் பார்த்த "அங்கில்ஸ்"  எல்லாம் அட்வைஸ் மழை பொழிஞ்சு கிட்டு இருக்காங்க... அதுமட்டுமல்ல தங்களது போன் நம்பரைக் கொடுத்து ,அதற்குக் கால் பண்ண சொல்லுறாங்க.. ஆனால்  அந்த டிவிட்டடுக்கு ஒரு பொண்ணு கூட பதில் சொல்லவே இல்லை..

இதில ஒருத்தன் "ஆண்டி" கவலைப்படாதிங்க என் கூட வந்து வாழுங்க! உங்களைச் சந்தோஷமாக வைச்சிக்கிறேன் என்று பதில் டீவிட் போட்டு இருக்கிறான்...

அதைப் படித்ததும் எனக்கு  வந்த சிரிப்பைக் கொஞ்ச நேரத்திற்கு அடக்கவே முடியலை.... எனக்கென்னவோ இந்த பையன் மட்டும்தான்  சரியா பதில் சொல்லிருக்கிறான் போல தோனுது


ப்ரோ அவங்க படிப்புதரேன் காசுதரேன் பணம்தரேன் மருத்துவம்தரேன்னு சொல்லி  மத மாற்றம் பண்ணுறங்க. ரொம்ப தப்பு ப்ரோ

அது சரி ப்ரோ நாம்  என்ன தரோம்

நாம் மாட்டுக் கோமியம் குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி தரோம் பரோ

அப்ப சரி
 


@avargalunmaigal


மதமாற்றம் தப்பு என்றால் இந்துக்களை இந்துத்துவா என்ற புதிய மதத்திற்கு மாற்றுவது மட்டும் சரியா?




@avargal unmaigal




சிலரின் பதிவுகளைப் பார்க்கும் பொழுது அவர்கள் அட்ரஸைக் கேட்டு நேரில் சென்று அவர்கள் சமைத்ததை சாப்பிட்டு உண்மையிலே "அற்புதமான சமையல் "என்று பாராட்டி முத்தமிடத் தோன்றுகிறது..

ஆனால் அவர்களைச் சந்திக்கச் சென்றால் ஹோட்டலுக்கு கூப்பிட்டுச் சாப்பாடு வாங்கி தந்து அனுப்பிவிடுகிறார்கள். ஒரு வேளை அவர்கள் போஸ்ட் போட்டது எல்லாம் அந்த ஹோட்டல் உணவுகளைத்தானா?



சமுக இணைய தளங்களில் கம்பெடுத்துச் சுற்றும் பெண் போராளிகள் பலர் ஆண்கள் மிக மோசம்.. காமுகர்கள், நயவஞ்சகர் பெண்களுக்குச் சுதந்திரம் கொஞ்சம் கூட கொடுக்காதவர்கள் என்று இப்படிப் பல ஆண்களைப்பற்றி கருத்துக்களைக் கவிதையாகக் கட்டுரையாகக் கதையாகப் பதிவிட்டு  லைக்ஸ்களை அள்ளி குவிக்கும் பெண்கள்.. அவர்கள் கணவரைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். எனக்கு வரும் சந்தேகம் அவர்களின் கணவர்கள் மட்டும்தான் ராமன் ?மற்ற எல்லோரும் ராவணர்கள்தானா? ஒருவேளை அவர்கள் நல்லவர்கள் என்றால் அதைப் பற்றி ஏன் அவர்கள் எங்கும் குறிப்பிடுவதே இல்லை அல்லது அவர்கள் மோசம் என்றால் சமுக வெளியில் மற்ற ஆண்களின் முகங்களைக் கிழிப்பவர்கள் தங்கள் கணவர்களின் முகத்திரையைக் கிழிப்பதில்லை ஒரு வேளை அவர்கள் வீட்டு ஆண்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறார்களா? ஒரு வேளை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்து இருந்தால் அவர்கள் சமுகத்தில் மற்ற ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?


கங்கையில் குளித்தால் புனிதமாவார்கள் என்பது போல ஆண்கள் காதலர் தினத்திற்குப் பெண்களுக்குப் பரிசு வாங்கி கொடுத்தால் அவர்களும் நல்லவர்கள் ஆகமுடியும்

 
@avarhal unmaigal


ஆண்கள் காமுகர்கள், நயவஞ்சகர்கள். சர்வதிகாரிகள் போன்ற பட்டங்களைத் துறந்து  நல்லவர்கள் என்று பட்டம் பெறும் ஒரு நாள் உண்டு என்றால் அது காதலர் தினத்தன்று தான். அப்போது பெண்களின் கண்களுக்கு நல்லவர்களாகத் தெரிபவர்கள் அடுத்த நாள் முதல்  காமுகர்கள், நயவஞ்சகர்கள். சர்வதிகாரிகள்தான் தெரிவார்கள்



அமெரிக்கா வரும் பெற்றோர்களின் நிலை பணம் இல்லாத ஏழையின் நிலையைப் போன்றதுதான்.. இந்தியா போல அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ரெஸ்டரெண்ட் போகலாம் ஷாப்பிங்க் போகலாம் சினிமா போகலாம் பாருக்கு போகலாம்.. ஆனால் என்ன அங்கு எல்லாம் போகப் பணம் செலவழியும் அவ்வளவுதான். நினைத்த இடங்களுக்குப் போக வேண்டுமானால் டாக்ஸியை கூப்பிட்டால் போதும் பிள்ளைகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் என்ன பணம் செலவழியும் அதுதான் உண்மை அப்படி செலவு செய்யும் அளவிற்கு மனதும் கிடையாது  வசதியும் கிடையாது. தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு ஏழை பெற்றோரைச் சென்னைக்கு அழைத்து வந்தாலும் இதே நிலைதான் அது போலத்தான் அமெரிக்காவிற்கு வரும் பெற்றோர்களின் நிலையும்.


அதானல் அமெரிக்க வந்தவிட்டு எங்கும் சுதந்திரமாக போக முடியலை பார்க்க முடியலை என்ற கம்பெளையண்ட் வேண்டாம்



தமிழக ஊர்திக்கு அனுமதி கொடுக்காததால் இந்த வருடம் ரஜினி குடியரசு தினத்திற்கு வாழ்த்து சொல்லவில்லை..  ஹீஹீஹீ #பரட்ட பத்த வைச்சிட்டே

மதமாற்றங்களால் இந்துமதம் அழிந்துவிடுமா? அதைச் சட்டத்தால்தான் காப்பாற்ற முடியுமா? 


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. பதில் Tweet போட்ட பையனின் தலைவரே...! வணக்கம்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ரொம்ப குறும்பு.. பதிலை படித்து சிரித்தேன் குட்

      Delete
  2. அந்தப்பெண்ணை சிந்திக்க வைக்கவே பையன் ஆன்ட்டி என்று ஜொள்ளு விட்டான் போல்...

    ReplyDelete
    Replies
    1. அந்த பொண்ணை போலவே அந்த பையனுக்கும் வாழ பிடிக்கலையோ என்னவோ

      Delete
  3. நன்றாக சமைக்கிறோம் என்று நினைத்து விருந்தினர் / நண்பர் வரும் நாளில் செய்து சொதப்பிவிட்டால் பெயர் கெட்டுவிடுமே என்கிற பயம் காரணமாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்கலாமோ அந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.