முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரள நடிகர்கள் மீது அவதூறு வழக்குத் தொடுக்கத் அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்?
முல்லை பெரியார் அணை விவகாரம் இப்போது மீண்டும் தலை எடுத்து இருக்கிறது... கடந்த காலங்களில் முல்லை பெரியார் அணை பாதுகாப்பு பற்றி உச்ச நீதிமன்றம் எஞ்சினியர்களை வைத்து ஆய்வு செய்து அந்த ஆய்வுக் குழுவின் மூலம் கிடைத்த பதில்கள் மூலம் அது பாதுகப்பானது என்று தீர்ப்பு வழங்கி மேலும் பாதுகாப்பு குறித்துப் பல நெறிமுறைகளையும் கூறியுள்ளது. அப்படி இருக்கும் போது கேரள நடிகர் ஒருவர் அது பற்றி தவறாகக் கருத்துச் சொல்லி அது மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடிகரின் தவறான கருத்து மூலம் மாநிலங்களுக்கிடையேயான மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு தவறான கருத்தைப் பரப்பிய அந்த கேரளா நடிகர் மீது ஏன் தமிழக ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் அவதூறு வழக்குத் தொடுக்காமல் சும்மா போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றன
தமிழக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் குதிக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஏன் அவர்கள் கேரளா நடிகர் மீது முதலில் அவதூறு வழக்குத் தொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் துரை முருகன் அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வதும் ஏன்? ஏன் துரை முருகனுக்கும் நீதி மன்றத்தில் நீதிபதிகள் சொன்ன தீர்ப்பின் மீது நம்பிக்கை வரவில்லையா என்ன? துரை முருகன் எஞ்சினியரா அல்லது அவர் கூட சென்று சும்மா ஐந்து நிமிஷத்தில் அணையை வேடிக்கை பார்த்த எஞ்சினியர்கள் துரை முருகனுடன் சேர்த்து எந்த மாதிரியான கள ஆய்வு செய்தார்கள் என்று சொல்ல முடியுமா ? அதன் முடிவுகள் என்ன அறிக்கை தர முடியுமா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை - அணையில் ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேட்டி அணையை வேடிக்கை பார்ப்பது எல்லாம் ஆய்வு என்றால் கேரளா நடிகர் சொன்னதும் தவறு இல்லை என்று ஆகிவிடுமே.
அரசியல் கட்சிகள் கேரள நடிகர் மீது அவதூறு வழக்குத் தொடுக்காத நிலையில் சமுக ஆர்வலர்களோ அல்லது ஏன் நீதிமன்றமோ அந்த நடிகர் மீது வழக்குத் தொடுத்து எந்த ஆய்வின் அடிப்படையில் அந்த நடிகர் பாதுகாப்பு அற்றது என்று சொன்னார் என்று விசாரித்து அவர் சொன்னது தவறு என்றால் சில மாதங்களாவதுவது சிறையில் அடைத்தால் வருங்காலத்தில் இப்படி பிரபல நடிகர்கள் அவதூறு செய்தி பரப்புவதிலிருந்து தடுக்கலாம்தானே?
இதைச் செய்ய யாராவது முன் வருவார்களா?
டிஸ்கி : ஸ்டாலின் முடிந்தால் துரை முருகனுக்கு ரிட்டையர்மெண்ட் கொடுத்து அனுப்பலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

யார் அந்த கேரள நடிகர்?
ReplyDelete