Monday, November 29, 2021

 தலைவர்களும் ஊடகங்களும் சேர்ந்து அலட்சியப்படுத்தும் வைரஸ்?
 

@avargal unmaigal


கொரோனா வைரஸ்ஸால் மக்கள் கொத்து கொத்தாக மடிய ஆரம்பிக்கும் போது தலைவர்களும் ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து மக்களுக்குப் போட்டு வருகின்றனர்.. ஆனால் அதே தலைவர்களும் ஊடகங்களும் சேர்ந்து  ஒரு பழைய வைரஸ்ஸை அலட்சியப் படுத்துகின்றனர் அதாவது அதற்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.. இவ்வளவுக்கும் அந்த வைர்ஸ்ஸிற்கான மருந்தும் எளிதில் கிடைத்தும் அதைத் தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்துக் காப்பாற்ற முன்வருவதில்லை. இதற்குக் காரணம் அந்த வைரஸ் வசிதி படைத்தவர்களைத் தாக்குவதில்லை அதுதான் காரணம்..
 
ஆமாம் அந்த வைரஸ் எதுவென தெர்ந்து கொள்ள உங்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்யும்.. இந்த வைரஸ் வேறு ஏதுமில்ல.. அது 'பட்டினி' வைரஸ்தான். அதற்கான சிறந்து மருந்து உணவுதான்.

 
 இந்த பட்டினி வைரஸ்சால்(ஊட்டச்சத்துக் குறைபாட்டால்) ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 மில்லியன் மக்கள் பசி மற்றும் பசி தொடர்பான நோய்களால் இறக்கின்றனர். இது எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றைக் காட்டிலும் அதிகம்

21 ஆம் நூற்றாண்டில் பசி இன்னும் உலகின் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக உள்ளது. மேலும் அது மோசமாகப் போகிறது



ஏழைகளுக்கான இந்த மருந்தைத்  தலைவர்கள் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யலாம்தானே?

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நான் பள்ளி யில் படிக்கும் காலத்தில் பசிப்பிணி மருத்துவர் என்று ஒரு பாடம் உண்டு!

    ReplyDelete
  2. நல்லா யோசித்திருக்கீங்க மதுரை. இது வேதனையான ஒன்று.

    கீதா

    ReplyDelete
  3. பசுபிணி போக்கும் வள்ளலாராக எல்லோரும் மாறினால் இந்த நோய் போகும்.
    அல்லது மணிமேகலை வர வேண்டும் அமுதசுரபியை எடுத்து கொண்டு என்று நினைக்கிறார்கள் போலும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.