Sunday, November 14, 2021

 

@avargal unmaigal

பாலியல் பலாத்காரம் மாணவி தற்கொலை ஒரு வாரச் செய்தி மட்டுமே


ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண் அறிவாள் என்பது எல்லாம் பொய் அவர்களுக்கு ஒரு மயிரும் தெரியாது புரியாது. அப்படித் தெரிந்திருந்தால் தமிழக முதல்வராகப் பெண் இருந்திருந்தாலும் பள்ளியின் முதல்வராகப் பெண் இருந்தாலும் அவர்களுக்கு மற்ற பெண்களின் உணர்வுகளை  அறிந்து இருப்பார்கள் வேதனைகளை உணர்ந்திருப்பார்கள் ஆனால் நாட்டில் நடப்பதைப் பார்க்கும் போது  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்பது தெரிகிறது. ஒரு பெண் முதல்வராக இருந்திருந்த போது ஜெயலலிதா பெண்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கலாம் ஆனால் அவர் செய்தது எல்லாம் ஆண்களை அவரின் காலில் விழுந்து வணங்கச் செய்தது மட்டும் அவர் செய்த சாதனை அதைத் தவிரப் பெண்களுக்கு என்று அவர் செய்தது ஒன்றுமில்லை பெண்களுக்குப் பெண் குழந்தைகளுக்கு என்று அவர் என்ன செய்து இருக்கிறார்.


இப்போது சின்மயா வித்யாலயா பள்ளியின்  முதல்வராக ஒரு பெண் இருந்தும்  அங்கு படிக்கும் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை இறுதியில் பெண்  மன உலைச்சலில் தற்கொலை செய்து இருக்கிறார்.


ஒரு பெண் மாணவி புகார் செய்து நடவடிக்கை இல்ல அதற்குக் காரணம் அந்த பள்ளியின் பெயர் கெட்டுப் போகுமாம் இதை அந்தப் பள்ளியின் முதல்வர் எங்குப் படித்து அறிந்தாரோ. ஒரு பெண் மாணவி புகார் செய்தவுடன் அதை விசாரித்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து  போலீசிடம் தெரிவித்து இருந்தால் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மிகுந்த பொறுப்புடன் நடவடிக்கை எடுத்து குழந்தைகளை பாதுகாக்கின்றனர் என்றுதானே எல்லோரும் பாராட்டுவார்கள் ஆனால் அங்கு நடந்து என்னவோ எல்லாம் தலைகீழாகத்தான்


ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான் என்பதற்காகப் பெண்கள் அவமானப்படத்தேவையில்லை அதற்குக் காரணமான ஆண் அவமானப்படச் செய்ய வேண்டும் அதற்குத்தான் மக்கள் முனைய வேண்டும் செயல்பட் வேண்டும்.

எப்படி ரோட்டில் செல்லும் ஒரு  பெண்ணிடம் அவர் அணிந்து இருக்கும் நகைகளை அறுத்து  ஒருத்தன் செல்லும் போது அதை நாம் அவமானமாகப் பார்க்க மாட்டோம் அது போல இதையும் கருத வேண்டும் ஆனால் அப்படி கருத்துவாதோடு சும்மா இருந்திருக்காமல் அவனுக்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்க வேண்டும் அதற்குச் சட்டத்தை நாடினால்  சட்டம் பல சமயங்களில் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும்.
 
அதனால் சட்டத்தை நாடாமல் சமுகத்தை நாடி ஒட்டு மொத்த சமுகமும் சேர்ந்து தண்டனை தரும் படி இருக்கச் செயல்பட வேண்டும்


பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களே உங்கள் பெண் பாதிக்கப்பட்டு இருக்கும் போது அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளுக்குத் துணையாக  இருந்து அவளை முன்னிறுத்தி மற்ற மாணவர்களுடனும் சமுக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய போராட்டத்தை நடத்தி  நியாயம் கேட்க முனைந்திருக்கலாம்.


தமிழக அரசு இந்த வழக்கை மட்டும் விசாரிப்பதோடு நின்றுவிடாமல் பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடம் அனைத்திலும் ரகசிய விசாரணை நடத்தி அங்கு இது மாதிரி பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனையும் அதே நேரத்தில் அங்கு பணிபுரியும் அந்த  கயவர்களுக்கும் அவர்களுக்குத் துணை போவார்களுக்கு கடும் தண்டனையைத் தர வழி வகைகளை செய்யலாம். அப்படி தவறு செய்பவர்களின் முகங்களைச் சமுகத்தில் பெரிய அளவிற்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அரசு நடத்தும் பள்ளிகளில் இப்படிப்பட்டச் சம்பவங்கள் நடப்பதில்லை . ஆனால் பத்ம சேஷாத்திரி, விவேகானந்தா, சின்மயா, மகரிஷி, வேதாந்தானுலாம் கல்வி நிறுவனங்களுக்குப் பேர் வச்சுக்கிட்டு இவர்கள் பண்ணது முழுவதும் பள்ளி மாணவிகள் மேல் பாலியல் வன்கொடுமைகளும், பொம்பளை பொறுக்கித்தனங்களும் தான். இங்கு மாணவிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை நன்றாக விசாரித்தால் அங்கு வேலை செய்யும் பெண் ஆசிரியர்களும் நிர்வாகத்தால் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தான் படுகிறார்கள். ஒரு மதக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல எல்லா மத கல்வி நிறுவனங்களிலும் இப்படித்தான் நடக்கின்றன


அன்புடன்
மதுரைத்தமிழன்



 
@avargal unmaigal


இந்த செய்தி சொல்லும் விஷயம் இதுதான்... பொதுமக்களிடம் இருந்து பள்ளி முதல்வருக்குப் பாதுகாப்பு தருவதைத்தான் கைது என்று அழைக்கிறார்கள் சிலவாரம் காலம் கழித்து மக்களின் கவனம் வேறு திசைக்குத் திரும்பும் போது ஜாமினில் வெளி வந்துவிடுவார் மேட்டர் அவ்வளவுதான்


14 Nov 2021

8 comments:

  1. தொடரும் அவல நிலைமை.  கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான் ஆனால் அவை அமுல் படுத்துவதில்தான் கடுமை இல்லை அதனால்தான் செல்வாக்கு மிக்கவர்கள் எளிதில் தப்பித்து வந்துவிடுகிறார்கள்

      Delete
  2. மகளை இழந்த தாய் சொன்னது மிகவும் வருத்தம் அடைய வைத்தது.அந்த காலம் போல பெண்கள் வீட்டில் அடைபட்டு கிடக்க வேண்டியதுதான் , படிக்க அனுப்ப அச்சமாக உள்ளது .தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

    இனி இது போல செய்ய பயப்படவேண்டும் அது போன்ற தண்டனை தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இனி இது போல் உள்ள விஷயங்களுக்கு அரசு நடவடிக்கை என்று நம்புவதை விட பாதிக்கப்பட்டவர்களே நடவடிக்கை எடுத்துவிடலாம் அதுதான் என் மனதிற்கு சரியென்று படுகிறது

      Delete
  3. வேதனை. தொடரும் அவலங்கள்.

    ReplyDelete
  4. பொள்ளாச்சி என்னாச்சி...? அதே போல்...

    ReplyDelete
    Replies
    1. செல்வாக்கு மிக்கவர்கள் எளிதில் தப்பித்து வந்துவிடுகிறார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.