யாராவது ஒருவர் தினமும் சிரிக்கும்படி வாழுங்கள் ,ஆனால் அதற்குப் பதிலாகத் தினம் ஒருவர் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படி வாழ்ந்திடாதிங்க...#புரிகிறதா அல்லது புரியலையா?
உப்புமா நல்ல உணவுதான் ஆனால் அதற்காகத் தினம் தினம் சாப்பிட முடியாது அது போலத்தான் ரஜினியின் நடிப்பும்
கொரோனாவால் வேலை இழப்பு அல்லது வருமானக் குறைவு அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்பு இதிலிருந்து நாம் ( பல குடும்பங்கள் )மீள ஒரே ஒரு வழிதான் அது அவசியமானதை வாங்க முயலாதீர்கள் அதற்குப் பதிலாகத் தவிர்க்க முடியாததை வாங்குங்கள்"
''
தமிழகத்தில் பிராமண இளைஞர் பலருக்கு வயசு முற்றியும் கல்யாணத்திற்கு இன்னும் பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஸ்டாலின் ஏதாவது உதவினால் பிராமண இளைஞர் சமுதாயம் நன்றியுடன் இருக்கும் #செய்வாரா
குழந்தைகள் தின வாழ்த்தை பேஸ்புக்கில் சொல்லும் படித்த அறிவாளிகளே. நீங்கள் சொல்லும் ஸ்டேடஸை அந்த குழந்தைகள் படிக்கப் போவதில்லை அதனால் இப்படிச் சொல்லுவதற்குப் பதிலாக மடிக்கணினியைக் கொஞ்சம் மூடி வைத்து விட்டு இன்று ஒரு நாளாவது உங்கள் குழந்தைகளுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள் அது நீங்கள் சொல்லும் வாழ்த்தை விட மிக அதிக சந்தோஷத்தைக் குழந்தைகளுக்குத் தரும்
வயதானவர்களிடம் கேட்டால் இளைய வயதினர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்கிறார்கள் அது போல இளைஞர்களிடம் கேட்டால் வயதானவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்கிறார்கள். ஆக மொத்தம் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரிவதில்லை என்பது நிச்சயம்
சங்கிகள் ஏமாறும் இரண்டு வழிகள் ஒன்று உண்மையில்லாததை நம்புவது; மற்றொன்று உண்மையென நம்ப மறுப்பது
“குட் டச் பேட்டச்” சொல்லிதர வேண்டியது பெண் குழந்தைகளுக்கு அல்ல ஆண் ஆசிரியர்களுக்குத்தான்
சூர்யா ஜாதி வன்மம் பிடித்தவரே.. இப்படிச் சொல்லுவது யார் என்று பார்த்தால் மதம் வெறி கொண்ட பக்தால்ஸ்தான்
ஜெய்பீம் படத்தைப் பற்றியோ நடிகர் சூர்யாவிற்கு பாமகவினரால் விடப்படும் மிரட்டல் பற்றியோ தலைவர் ரஜினிகாந்த்திடம் கருத்துக் கேட்க அவர் வீட்டுக் கேட்டை ஆட்ட வேண்டாம் . அவருக்கு இப்போது உடல் நலம் சரியில்லை ஆனால் அண்ணாத்தை படத்தைப் பற்றி மட்டும் கேட்கக் கதவை ஆட்டலாம் அந்த நேரத்தில் மட்டும் உடல் நலம் சரியாகிவிடும். இது போயஸ் கார்டனில் இருந்து இன்று வந்த தகவல் ##WeStandWithSuriya
அறிவு என்பது உள்ளாடை போன்றது. அதை அணிந்திருப்பது பயனுள்ளது, ஆனால் அதைக் காட்ட வேண்டிய அவசியமில்லை
இப்போது முன்பு போலத் தொடர்ச்சியாகப் பதிவுகள் இட முடியாமல் போய்விடுகிறது.. இருந்தாலும் தேடிப்படிப்பவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாதத்தில் இது வரை 9 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளேன் அதுவும் 21 ம் தேதிக்கு அப்பறம் பதிவுகள் இடவில்லை என்றாலும் நேற்றும் இன்றும் அதிகபேர் வந்து பார்வை இட்டுச் சென்று இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எண்ணங்கள் அருமை தல...
ReplyDeleteபலருடைய மனதில் தோன்றுகின்ற எண்ணங்களே இவை. சிறப்பு.
ReplyDeleteஎல்லாம் சரி. ஆனால் பிராமண இளைஞர்களுக்கு ச்டாலின் என்ன செய்ய முடியும் என்று புரியவில்லை!!!
ReplyDelete
Deleteஎன்னுடைய பிராமண நண்பர் ஒருவருக்கு வயது 45 ஆகிவிட்டது இன்னும் கல்யாணம் ஆகவில்லை பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார் அவருக்கு இன்னும் செட்டாகவில்லை. அதோடு நான் எப்படி மோடியை விமர்சித்து பதிவுகள் போடுகின்றேனோ அது போல அவரும் விடாமல் திமுகவிற்கு எதிராக பேசுவார், அவரிடம் பேசும் போது சொன்னது உனக்கு ஸ்டாலின் பார்த்து ஏற்பாடு செய்தால்தான் கல்யாணம் நடக்கு அதுவரை நடக்காது என்று கிண்டல் பண்ணினேன் அதுதான் இங்கு பதிவாக போட்டு இருக்கின்றேன்
அது மட்டுமல்ல பல பிராமன இளைஞர்களுக்கு பொண்ணு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று உறவுகள் பேசும் போது கேள்விபட்டேன்
நீங்கள் கேள்விப்பட்டது சரியே மதுரை.
Deleteமுன்பெல்லாம் பையன் வீட்டில் அலட்டிக் கொள்வார்கள் நிராகரித்தல் வரதட்சிணை என்றெல்லாம் காரணங்கள் இருந்தன ஆனால் இப்போது பெண்கள் வீட்டில் தான் அதீதமான கண்டிஷன்கள். அது ஒரு பெரிய லிஸ்ட்!!!
கீதா
ஜெய்பீம்.. அய்யோ வேண்டாம்.. எதற்கு வம்பு? படம்பற்றியும் சூர்யா பற்றியும் ஏதாவது சொல்ல வந்தாலே வசவு விழும். முத்திரை விழும்! எனவே
ReplyDelete"சூர்யா வாழ்க!"
அத்தனையும் நல்லாருக்கு பலருக்கும் தோன்றுபவை. மிகவும் பிடித்தது....குழந்தைகள் தின வாழ்த்து சொல்வது பற்றிச் சொன்னது...அப்படியே டிட்டோ செய்கிறேன் மதுரை.
ReplyDeleteஅடுத்து பிராமண இளைஞர்களுக்குப் பெண் கிடைப்பது என்பது இப்போது ரொம்பவே கடினமாகத்தான் இருக்கிறது. நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
கீதா