Monday, November 29, 2021

 நெருங்கிய உறவின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு

 

@avargal unmaigal



பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்கத்தான் நேரிடும் இதில் யாரும் விலக்கல்ல. இதிலிருந்து யாரும் தப்பியதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும்  நெருங்கிய உறவுகள் எதிர்பாராத விதமாக இறக்கும்போது, அதனைத் தாங்கிக்கொள்ளும் மனதிடம் பலரிடமும் இருப்பதில்லை!


பொதுவாக உடல்நலக் குறைவால் ஒருவர் உயிரிழந்தால், அவரது இறுதி நாட்களில் உடனிருப்பவர்கள் அந்த மரணத்துக்கு தங்கள் மனதைத் தயார் செய்து கொள்ள அவகாசம் இருக்கும். அல்லது முதியவர்கள் அல்லது நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்காது.  ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு உறவுகள் உடல்நிலை சரியில்லை என்றால் அதைப் பற்றி அதிகம் தெரிவதில்லை அப்படிப்பட்ட உறவுகள் இறந்துவிட்டார்கள் என்ற தகவல் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவரும் போது மிக அதிர்ச்சியாகி மனம் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது செய்வது அறியாது மலைத்துப் போய்விடுகிறோம்.

உள்ளூரில் இருப்பவர்கள் மரணித்த உறவுகளின் வீடுகளுக்குச் சென்று தங்கள் மனத்துயரை இறக்கி வைப்பதோடு மட்டமல்லாமல் மரணித்த உறவின் குடும்பத்தாருக்கும் மிக ஆருதல் வார்த்தை சொல்லி அவர்களையும் துயரத்திலிருந்து மீட்க முடியும்


ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலமையோ மிகக் கடினமாகத்தான் இருக்கிறது அவர்களால் மரணித்த உறவின் குடும்பத்தாருக்கு ஆருதல் மொழி சொல்ல முடியாமலும்  அதே சமயத்தில் மரணித்த உறவினால் நமக்கு ஏற்பட்ட் பாதிப்புக்கு மன உளைச்சலுக்கு ஆறுதல் பேரமுடியாமல் சங்கடப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது


மரணங்களின் துயரிலிருந்து மீள நாளாகும் என்பது உண்மை தான். எளிதானது அல்ல. ஆனால் மீளாத் துயரம் என்றும் எதுவும் இல்லை  “நாம் யார் ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருந்தாலும் அவரை ஒரு நாள் இழக்க நேரிடும் தானே. எனவே அன்புக்குரியவர்களின் மரணத்துக்கு பிறகான நமது வாழ்க்கையில் அர்த்தம் கண்டு பிடிக்க வேண்டும். தனிமை என்பது ஒரு மனநிலை. 100 பேருக்கு மத்தியிலும் தனிமையாக நினைக்க முடியும். யாருமே அருகில் இல்லாவிட்டாலும் எல்லாரும் இருப்பது போல் தோணலாம். எனவே மனம் விட்டு யாரிடமாவது கண்டிப்பாகப் பேச வேண்டும். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்”

அதற்குச் சரியான உறவும் நம்மைச் சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படி இல்லாவிட்டால் மரணித்தவரின் குடும்பங்களி; உள்ளவர்களை விட நாம் அதிக அளவில் நிம்மதி இழக்க நேரிடும்

Nadhira
நபி ஸல் கூறினார்கள்..
"யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல்
கப்ரில் ஒரு மையித், தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் (அல்லது பிள்ளைகள், அல்லது உறவினர்கள்,) ஆகியோரிடமிருந்து துஆவை (பிரார்த்தனையை) எதிர்பார்க்கின்றது.

அப்படி யாரேனும் செய்து ஏதேனும் ஒரு துஆ அந்த மையித்தைச் சென்றடைந்தால், அதை, துன்யா மற்றும் அதிலுள்ளவற்றை விட மிகப் பிரியமாக நினைக்கின்றது.

நிச்சயமாக, அல்லாஹ், உலக மக்களின் பிரார்த்தனை மூலம் கப்ரு வாசிகளுக்கு மலைகள் போன்று அருள்களைப் பொழிகின்றான்.
இறந்தவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்பது (பிழை பொறுக்கத் தேடுவது) உயிரோடிருப்பவர்கள் மரணித்தவர்களுக்கு வழங்குகின்ற சன்மானமாகும்
(அன்பளிப்பாகும்)", என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி பைஹகீ, ஹதீஸ் 7904, மிஷ்காத், ஹதீஸ் 2355, (பாடம் – பாபுல் இஸ்திஃபார்)

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்! வெளி நாட்டில் வாழ்பவள் என்பதால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் எனக்கு ஒத்துப்போகின்றன. நெருங்கிய உறவினரது எதிர்பாராத மரணம் ஆறு மாதங்களாயும் இன்னும் ஆறவில்லை. அவரின் இளம் மனைவியின் கண்ணீர்க் குரலை அடிக்கடி கேட்பதால் இன்னும் அதிலிருந்து வெளிவரமுடியவில்லை. நீங்கள் சொல்வது மாதிரி, நேரில் ஆறுதல் சொல்லியிருந்தாலோ, அல்லது அந்த மரணத்தை சந்தித்திருந்தாலோ, ஒருவேளை அந்த துக்கத்திலிருந்து மீள முடிந்திருக்குமோ என்னவோ? கொரோனாவால் இன்னும் ஊருக்குப்போக முடியாத நிலை. வெளி நாட்டு வாழ்க்கையில் சந்திக்கும் பல சோதனைகளில் இதுவும் ஒன்று!

    ReplyDelete
  2. உண்மை மதுரை சகோ. வெளிநாட்டில் வாழ்பவர்களின் உணர்வுகளை பளிச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான் நார்மல் நாட்களில்

    ஆனால் இப்போது இங்கு உள் நாட்டில் இருக்கும் போதே இதோ இந்தக் கொரோனா வினால் இறப்பவரின் உடல் கூடக் காணக் கிடைப்பதில்லையே. நெருங்கிய உறவினர் மருத்துவமனையில் இருக்கும் போதும் கூடச் செல்ல முடியவில்லையே. கொரோனாவினால் உள்ளூரில் கூடப் பிரயாணம் செய்வது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. இப்போதேனும் கொஞ்சம் விதிகள் தளர்ந்திருக்கிறது ஆனால் முன்னும் சரி இனியும் லாக் டவுன், மற்றும் விதிகள் எதிர்பாக்கப்படுகிறது. வரும் என்று. புதியதாக ஒன்று ஊடுருவி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. என்னவோ சோதனைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

    கீதா

    ReplyDelete
  3. ஆழ்ந்த இங்கல்கள்.

    ReplyDelete
  4. வெளிநாட்டு வாழ்வின் பாதிப்புகளில் இதுவும் ஒன்று
    காலம் தங்கள் கவலையை போக்கட்டும்

    ReplyDelete
  5. நெருகிய உறவின் இழப்பு மிகவும் கொடியது. அதற்கு போக முடியாமல், பார்க்கமுடியாமல் இருப்பது மேலும் வருத்தம்.

    உறவினர்கள், குடும்பத்தினர் எல்லாம் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.