Thursday, November 18, 2021

  

@avargal unmaigal



மனித உளவியலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த கில்லாடி மோடி

உங்கள் எதிரி துன்பப்பட்டால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது இது மனித உளவியல்

"சிறுபான்மை முஸ்லீம்கள் தங்களுக்கு  எதிரிகள்" என்று பெரும்பான்மையினரை நம்ப வைத்தது.  அதுமட்டுமல்லாமல் இன்னும் அதிக அளவில் மக்களை நம்பவைக்க முயல்கிறது பாஜக.  நன்றாக உற்று நோக்கிப் பாருங்கள் பாஜக இந்துக்களுக்கு  என்று எந்தவிதமான நன்மை பயக்கும் உறுதியான பலன்களை வழங்கவில்லை. ஆனால் பாஜக சிறுபான்மையான முஸ்லீம்களின் வாழ்க்கையை அவலப்படுத்துவார்கள் என்பது மட்டுமே உண்மை இதை  யாராலும் மறுக்க முடியாது

.

பாஜகவின் செயல்  எப்படி இருக்கிறது என்றால்   நீங்கள் எங்களுக்குச் சம்பளம் இல்லாமல் உழைத்தால் நான் உங்கள்  எதிரியின் சம்பளத்தைக் குறைக்க உறுதியளிக்கின்றேன் என்று  கேட்பது போலத்தான் உள்ளது

முஸ்லீம்களின் வாழ்க்கையை அவலப்படுத்துவது  என்பது  எவ்வளவு காலம்  வரை செய்ய முடியும். எதற்கும் ஒரு  எல்லை உண்டு.  26 கோடியை இந்திய முஸ்லீம்களை BJP RSS  நீக்குவது அவ்வளவு எளிதல்ல & முடியவும் முடியாது

வரலாற்று ரீதியாக, முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக துன்பகரமான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஆனால் இந்துக்களால் அப்படி வாழ  முடியுமா?


சில இந்துக்கள் சொல்லக் கூடும் பாஜகவினால் நாங்கள் நன்மை அடைந்தோம் என்று.. அது நீங்கள் யாரைக் நோக்கிக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. கோயம்புத்தூரில் குடியேறிய மார்வாரிகளைக் கேட்டால், முஸ்லீம்களைத் தொழிலிலிருந்து விரட்டியடிப்பதற்கு பாஜக உதவியது என்றும், கோவை வணிக நிறுவனத்தைக் கைப்பற்ற உதவியது என்றும் சொல்வார்கள்.ஆம் இது போல சில செயல்களை மட்டுமே பா.ஜ.க  செய்ததே தவிர இந்துக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் பெரிய அளவில் வழங்கவில்லை, அது இன்னும் மோசமாகிவிட்டது.

சமுக இணையதளத்தில் ஒரு   வடநாட்டைச் சேர்ந்த இந்துக் குடிமகன் சொன்னது இது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பதால், நானும் எனது குடும்பமும் இந்து என்ற பெயரில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவதில்லை பெற்றதில்லை... என் தாத்தா பாட்டி பாஜக அல்லாத ஆட்சியில் சார்தாம் யாத்திரை (Chardham yatra) செய்தார்கள், அப்போது அவர்களுக்கு  எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்போது பாதுகாப்பு காரணங்களால் அமர்நாத் யாத்திரை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதால்,  எனது பெற்றோர்கள் செய்த யாத்திரை போல என்னால் இப்போது செய்ய முடியவில்லை என்று சொல்லுகிறார், முன்பு எளிமையாக இருந்த யாத்திரை இப்போது கடினமாகிவிட்டது. இதுதான் நாம் பெற்ற நன்மையா என்ன? இதே நேரத்தில் இஸ்லாமியர்கள் நாடு கடந்து புனித ஹஜ் யாத்திரையை எந்த வித தடங்களும் இன்றி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்குத் தடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை . ஆனால் மோடியின் ஆட்சிக்குப் பின் இந்துக்களால் இப்படி யாத்திரை செய்யமுடியாமல் இருக்கிறது...

மதத்தின் பெயரால் அவர்கள் தங்கள் சொந்த நலன்களைச் செய்கிறார்கள், மக்கள் அதைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று அந்த வட நாட்டு இந்து சொல்லுகிறார்.

பாஜகவால்  வெறுப்பையும் பகையையும் பரப்பாமல் அவர்களால் ஆட்சியில் தொடர  முடியாது.  இதை அவர்கள் மிக நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். நாம்தான் அதை இன்னும் உணரவில்லை. முன்பு பிராமணரும்  இஸ்லாமியர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக நன்றாகவே பழகி அவரவர் மத சம்பிரதாயங்களை எந்தவித தடையுமின்றி செய்து வந்தார்கள் பிராமணர் இஸ்லாமியர்களைப் பாய் என்று அன்பாகவே அழைத்து வந்தார்கள் அது போல இஸ்லாமியர்களும் பிராமணர்களை ஐயரே சௌக்கியமா என்று அன்போடுதான் அழைத்துப் பழகி வந்தார்கள்.

இப்படிப் பழகி வந்தவர்களுக்கிடையே நச்சு விதைகளை அவர்கள் மனதில் கடந்த 30 ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கெடுத்துவிட்டார்கள் என்றே சொல்லாம்

அது போல விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள் அதில்தான் இப்போது எவ்வளவு மாற்றம்.



மோடி பாஜக ஆர் எஸ் எஸ் செய்ததை  எல்லாம் சுருக்கமாகச் சொன்னால் அவர்கள்  இந்து மக்களை அவர்கள் மதத்தை விரும்ப வழிவகைகளை ஏற்படுத்தித் தரவில்லை  ஆனால்  அவர்கள் இஸ்லாமிய  மதத்தை வெறுக்க வழி செய்து இருக்கிறார்கள்

வெறுப்பையும் பகையையும் பரப்பாமல்  மோடி பாஜக ஆர் எஸ் எஸ் அவர்களால் வாழவும்  முடியாது ஆளவும் முடியாது..


இதை எல்லாம் பொறுப்புள்ள இந்தியன் புரிந்து கொள்வதற்குள்  தலைக்கு மேல் வெள்ளம் போலக் காலம் ஒடி சென்று இருக்கும்.


டிஸ்கி : பதிவு முடிவில் ஜெய்ஹிந்த் சொல்லனுமா? ஜெய்பீம் சொல்லனுமா? ஒரே குழப்பமாக இருக்கிறதே

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. அனைத்து ஆட்டத்திற்கும் ஒரு முடிவு உண்டு...

    ReplyDelete
  2. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று திரைப்படத்தில் வரும் நகைச்சுவைதான் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.