Saturday, May 22, 2021

 

@avargal unmaigal

கொரோனா லாக்டவுன் காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம் ஆண்கள் என்ன செய்யக் கூடாது?



இந்த கொரோனா லாக்டவுன் காலத்திலாவது பெண்கள் வீட்டிலே சாம்பார் பொடி, ரசப்பொடி ,கரம் மசாலா பொடி  எப்படி அரைப்பது, அது போல வீட்டிலேயே இட்லி தோசைக்கு மாவு அரைப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டு கடையில் விற்கும் தோசை மாவு மற்றும் சமையல் பொடிக்கு குட்பை சொல்லுங்கள்... உடம்புக்கு  மட்டும் ஆரோக்கியம்மட்டுமல்ல நம் பணத்திற்கும்தான். அதோடு அருமையான சுவைக்கும் ஒரு நல்ல வழி


அது போல வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும்  ஏன் கணவருக்கும் அவசரக் காலத்திற்கு எப்படிச் சமைப்பது என்பதையும் கற்றுத் தாருங்கள் அதைவிட்டு விட்டு எங்க வூட்டுகாரருக்கு அல்லது குழந்தைகளுக்குச் சுடுதண்ணி வைக்கவே தெரியாது என்று பெருமை பேசி திரியாதீர்கள்



ஆண்கள் செய்யக் கூடாதது:

என் நண்பர் ஒருத்தர் கொரோனா லாக்டவுன் காலத்தில் மனைவியிடம் உனக்குப் பதில் நானே லாக்டவுன் காலத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு விடுகின்றேன் என்று சொல்லி இருக்கிறார், மனைவியும் சரி என்று சொல்லிவிட்டார்

அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்திருச்சு நல்லா ஷேவ் பண்ணி தலை சீவி வாசலுக்கு எதிர்பார்போட போனால் அங்கு இவரைப் பல ஆண்கள் வாசல் தெளிக்க வந்து இருக்கிறார்கள் அவர்கள் எதிர்பார்த்து வந்தது பக்கத்து வீட்டுப் பெண் அதிகாலையில் வாசல் தெளித்து கோலம் போட வருவார்கள் அவர்களிடம் கடலை போடலாம் என்றுதான் ஆனால் நிலைமையோ தலை கீழாகி போச்சு

பயபுள்ளை எங்கிட்ட யோசனை கேட்டு இருக்கலாம் நான் எப்படி கடலை மிக எளிதாகப் போடலாம் என்று சொல்லித் தந்து இருப்பேன்
 


நெக்ஸ்ட்  செய்தி : சேலையால் மார்பகத்தை மறைக்காமல் சில பெண்கள் கவர்ச்சி காட்டுவது போல மாஸ்கை முகத்தில் சரியாகப் போடாமல் மூக்கை வெளியே காட்டுவதுதான் கவர்ச்சி என்று  தமிழக மக்களுக்கு  யாரவது சொல்லிட்டாங்களோ என்னவோ?



ஒரு பதிவில் லாக்டவுன் சமயத்தில் வூட்ல இன்று  மட்டன் பிரியாணி சிக்கன 65 என்று பதிவிட்டு அதிக லைக் வாங்கிய பெண் 

அடுத்த போஸ்ட்ல   சீரியாகச் சொல்லுகிறேன்  வெறும் கஞ்சியை குடிச்சாவது வீட்லயே இருங்கள்..  கொரோனா ரொம்ப மோசமானது..
போன வாரம் சிரித்துப் பேசி குழந்தையைக் கொஞ்சிய அம்மா  இப்ப  இல்ல  என்று உணர்ச்சிகரமாக ஒரு பதிவு எழுதி  அறிவுரை சொல்லி லைக் வாங்கிட்டு இருக்கிறார்கள் #என்னத்த சொல்ல ஹும்ம்




இந்த வருஷம் இந்தியாவில்  வருமானவரி சோதனை நடத்த வேண்டிய இடங்கள் ஹாஸ்பிடல்கள்தான்.. அதை மத்திய அரசாங்கம் செய்யுமா அல்லது ஹாஸ்பிடல் நிர்வாகத்திடம் இருந்து கட்சிக்கு நன்கொடை மட்டும் பெற்றுக் கொள்ளுமா என்பதுதான் கேள்வி இங்கே


தமிழகத்தில் கொரோனாவை மொத்த விலைக்கு வாங்க நாளை கடைசி நாள் அதன் பின் அடுத்த ஒரு வாரத்திற்கு அதற்கு விடுமுறை அதன்பின் மீண்டும் மொத்த விலைக்கு விற்பனைக்கு வரலாம்...

 இந்தியாவின் இன்றைய நிலை நிஜமும் நிழலும் 


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. சிரித்து முடில மதுரை...அதுவும் கடைசில கொரோனா மொத்த விலை..அதுக்குச் சிரிச்சுட்டு கொஞ்சம் திங்க் பண்ணினா பயம் கவ்வுது. அந்த மொத்தத்துல எவ்வளவு பரவுதோ??

    கீதா

    ReplyDelete
    Replies
    1. துன்பத்திலும் சிரியுங்க என்று வள்ளுவர் அன்று சொன்னார் என்பது ஞாபகத்திற்கு வந்ததது

      Delete
  2. நகைச்சுவையாக இருந்தாலும் ஆலோசனை அருமை...

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையாக சொல்லுவோம் அப்பவாது மக்கள் கொஞ்சமாவது புரிஞ்சுக்கலாம் அல்லவா

      Delete
  3. Replies
    1. பாராட்டுக்கு நன்றி வெங்க்ட்ஜி

      Delete
  4. கடைசி விஷயம் உண்மையிலும் உண்மை! எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. என்னங்க துணிக்கடைக்கு எல்லாம் போய் மொத்தமாக கொரோனாவை வாங்குறாங்க ரொம்ப தைரியமாக இருக்கிறாகள் மக்கள்

      Delete
  5. பொடி பண்ணி வச்சிக்கலாம் நல்ல ஐடியா ,நானும் 50 நாட்களாக வீட்டை விட்டு எங்கும் போகாமல் ஒரு சோம்பேறித்தனம் வந்துவிட்டதென்னவோ உண்மை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.