Sunday, May 30, 2021

@avargal unmaigal

 #Me_too பாலியல் பலாத்காரங்கள்

பாலியல் பலாத்காரங்கள் இன்று நேற்று மட்டுமல்ல பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதாவது மன்னர் ஆட்சிக்காலத்தில் அந்தப்புரத்தில் தொடங்கி ராமாவாராம் தோட்டத்திற்கும் சென்று இன்று பத்ம சேஷாத்ரி பள்ளிக் கூடம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது

அவ்வப்போது சில சலசலப்புகள் தோன்றி தோன்றி வானத்தில் இருக்கும் விடிவெள்ளிகள் போல மறைந்து கொண்டுதான் இருக்கின்றன இது வெளியுலகத்திற்கு வரும் சில செலிபிரட்டிகளின் செல்வாக்கில் சிறிய அளவில் கறை ஏற்படுகிறதே ஒழிய அது மறைவதில்லை என்பதுதான் கசக்கும் உண்மை

 
@avargal unmaigal

இந்தப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல பல ஆண்களும்தான் ஆனால் ஆண்கள் அதை வெளியே சொல்லாமல் மெளனமாகக் கடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். இன்று பெண்களாவது அவ்வப்போது ஆங்காங்கே குரல் எழுப்பித் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைக் காலம் கடந்தாவது தைரியமாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்னும் வாயைத் திறக்காமல் சென்று கொண்டு இருக்கிறார்கள் காரணம் இது அவர்களின் ஆண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கருதுவதுதான்

பிரபலமானவர்கள் வெளிப்படையாகத் தங்களின் பிரச்சனையைச் சொல்ல முடியும் அதே நேரத்தில் சாதாரணப் பெண்களால்/ஆண்களால் ஒரு விரக்தி சிரிப்போடு மட்டுமே அந்த நிகழ்வைக் கடந்து வர முடியும். அவர்களின் விரக்தி சிரிப்பிற்குக் காரணம் நம்மால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத வன்புணர்வு செயல்களைப் பிரபலமான நடிகைகள் இவர்களாலாவது சொல்ல முடிகின்றதே என்பதால் தான்


இப்படிப் பிரபலங்கள் வெளியே சொல்வதால் பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்ன அவர்கள் அப்படிச் சொல்வதால் தைரியமான பெண்கள் என்று சமுகம் சொல்லும் அவ்வளவுதான் அதைத்தாண்டி மாற்றங்கள் ஒன்றும் எற்பட்டுவதில்லை அப்படி ஒன்று ஏற்பட்டு இருக்குமானால் பத்ம சேஷாத்ரி பள்ளிக் கூடங்களில் இப்படி ஒரு சம்பவம் நேர்ந்து இருக்காது

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறைக்குப் பிறகும் அந்தத் தொகுதியில் அதற்குச் சம்பந்தமான ஆண்ட கட்சியார் ஒருவரே மீண்டும் வெற்றி பெறுகிறார் என்றால் அங்கு என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.


இப்படிச் செய்திகள் வெளியே தெரிவதினால் அது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் மெல்லக் கிடைத்த விஷயங்களே தவிர ஒன்றுமில்ல. இப்படிப்பட்ட பாலியல் பலாத்காரம் குறையத் தொடங்க வேண்டுமானால் பெண்கள் இப்படி வெளியே வந்து சம்பவம் நடந்த சில காலங்களுக்குப் பின் சொல்வதை விட அந்தச் சம்பவம் நடக்கும் நேரத்திலே அந்தச் சம்பவத்திற்குக் காரணமானவரின் ஆண் உறுப்பைக் கடித்தோ அல்லது அறுத்தோ விடுவார்களேயானால் காலப் போக்கில் ஆண்கள் பயந்து போய்ப் பலாத்காரம் செய்வதைக் குறைத்துக் கொள்ளலாம் இப்படிச் சில பெண்கள் அல்ல பாதிக்கும் ஒவ்வொரு பெண்களும் செய்ய ஆரம்பிக்க வேண்டும் அப்போதுதான் மாற்றம் ஏற்படும் அப்படி இல்லையென்றால் மாற்றம் ஏற்படவே செய்யாது

அதைவிட்டு விட்டு கோர்ட்டு வழக்கு என்று சென்றால் அங்கு நீதி கிடைக்கும் அந்த நீதி உங்களுக்கானது அல்ல வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும் நீதி அது சாமானிய மக்களுக்குக் கிடைக்காது.



நீதி : ஒரு பெண் எப்போது ஒர் ஆணால் ஏற்படுகின்ற பிரச்சனையை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பிக்கின்றாளோ அப்போதே அந்த ஆண் பயப்படத் தொடங்கிவிடுகிறான்.. ( நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அவன் பயப்படத்தான் ஆரம்பிக்கிறான் ஆனால் குற்றங்களைச் செய்ய நிறுத்த ஆரம்பிக்கவில்லை பேச ஆரம்பிப்பதால் பயப்படும் அவன் பெண்கள் செயல்களில் இறங்கினால் ?)அப்படி என்றால் இதுவரை பேசாமல் இருந்தது பெண்களுடைய குற்றமும் தானே..


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. மதுர நீங்க சொல்லிருக்கறது பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது நல்ல கருத்து ஆமா நானும் இதைத்தான் சொல்லுவேன்...பெண் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே மிகவும் தைரியமாக வளர்க்கப்பட வேண்டும். அப்பத்தான் இப்படியான சூழலில் எதிர்க்கத் துணிவு வரும். பெண் குழந்தைகளுக்கு கராத்தே, உற்பயிற்சி, சூழலைச் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறன் எல்லாம் கற்பிக்கணும்.

    அதே போல நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆண்களுக்கும் நடக்குது ஆனால் வெளில சொல்லமாட்டாங்க தான். அதற்கும் நம் சமூகம் தான் காரணம்.

    கீதா

    ReplyDelete
    Replies


    1. காராத்தே இந்த மாதிரி பாலியல் பலாத்காரங்களுக்கு உதவாது காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களால்தான் இந்த மாதிரி நிகழ்வை ஏற்படுத்துக்கிறார்கள்.. அப்படிப்பட்டவர்களை என்ன ஆனாலும் சரி என்று எதிர்க்கு உறுதியான மனநிலை வேண்டும்

      Delete
  2. எம் ஜி ஆர் சிவாஜி மட்டுமில்லை, எம் ஆர் ராதா, பாலையா, கண்ணதாசன், கருணாநிதி, அண்ணா எல்லோருக்கும் இது பொருந்தும்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன மற்ற எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் அண்ணா அவரை பற்றி இது வரை நான் ஏதும் தவறாக கேள்விப்பட்டதில்லை ஒருவேளை உங்களுக்கு அது பற்றி தெரிந்திருந்தால் சொல்ல முடியுமா?

      Delete
    2. 'நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல, அவர் படி தாண்டா பத்தினியுமல்ல' என்று அவர் சொன்னதாய் ஒரு வாசகம் உண்டு...

      Delete
  3. இதற்கு ஒன்றே வழி பெண் கல்வி... 100/100 பெண்கள் கல்வியில் மேம்பட வேண்டும்...

    ReplyDelete
    Replies

    1. பெண்கல்வியால் மட்டுமே இதை தடுக்க முடியாது கடுமையான சட்டமும் நல்ல சிந்தனைகளை அனைவருக்கும் சிறிய வயதில் கற்று தறுவதோடு சமுகத்தை கெடுக்கும் சினிமா படங்களை கடுமையாக தணிக்கை செய்து வெளியிட வேண்டும்

      Delete
  4. வலைப்பூவின் அழகான வடிவமைப்பிற்கு வாழ்த்துகள் தல...

    ReplyDelete
    Replies
    1. கவனித்து பாராட்டியதற்கு நன்றி தனபாலன்

      Delete
  5. நீதி : ஒரு பெண் எப்போது ஒர் ஆணால் ஏற்படுகின்ற பிரச்சனையை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பிக்கின்றாளோ அப்போதே அந்த ஆண் பயப்படத் தொடங்கிவிடுகிறான்.. ( நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அவன் பயப்படத்தான் ஆரம்பிக்கிறான் ஆனால் குற்றங்களைச் செய்ய நிறுத்த ஆரம்பிக்கவில்லை பேச ஆரம்பிப்பதால் பயப்படும் அவன் பெண்கள் செயல்களில் இறங்கினால் ?)அப்படி என்றால் இதுவரை பேசாமல் இருந்தது பெண்களுடைய குற்றமும் தானே..
    நீங்கள் சொல்வது நுறு சதவீதம் சரி. பாலியல் தொந்தரவில் அகப்பட்ட பெண்கள் அப்படிப்பட்ட ஆண்களை தாங்களே தண்டிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது இச்சைக்கு இணங்குவது போல நடித்து மறைமுகமான ஆலோசனை பெற்று அவர்களை தக்க விதத்தில் தண்டித்துவிட வேண்டும். அதற்கான ஆலோசனை மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தண்டனை பெற்ற ஆண் இதுபோன்ற மற்ற ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்வண்ணம் தண்டிக்கப்படவேண்டும். இந்த பிரச்சினைக்கு இதைத்தவிர வேறு தீர்வு இல்லை. அதற்கான ஆலோசனை மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனுக்குடனான தண்டனையே குற்றங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்தும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.