Sunday, May 9, 2021

#avargal unmaigal

 முதல்வர் ஸ்டாலின் ஒரு திட்டம் போட்டால் "குடிமக்கள்" வேற ஒரு திட்டம் போடுறாங்க


மனைவி: என்னங்க வழக்கமாக வீட்டுச் செலவிற்கும் கொடுக்கும் பணத்தைக் கொடுக்காமல் குறைத்து கொடுக்கிறீங்க

கணவன் : அடியே தலைவர்தான் பெண்கள் எல்லாம் இலவசமாகப் பேருந்தில் பயணம் செல்லலாம் என்று சொல்லிவிட்டாரே அதனால்  உன் பேருந்து செலவிற்கான பணத்தைக் கழித்துவிட்டுத் தான் தந்து இருக்கிறேன் சரியாகக் கணக்கு பார் உனக்குப் புரியும்.

மனைவி. உம்ம் இப்ப சரியாகத்தான் இருக்கிறது.. ஆமாங்க அப்படி மிச்சம் மாகும் பணத்தைச் சேமிப்பு கணக்கில்தானே போடப் போறீங்க
 
கணவன் : அடியேய் அதைச் சேமிப்பு கணக்கில் போட்டால் நமக்கு மட்டும்தான் பயன்படும் அதனால நான் அப்படிச் செய்யாமல் டாஸ்மாக்கில் கொண்டு போய் போடப் போறேன் அப்பத்தான் மேலும் பல நல்ல திட்டங்களைத் தலைவர் போட வசதியாக இருக்கும்

மனைவி : யோவ் யாரை வேண்டும் என்றாலும் திருத்திடலாம் ஆனால் குடிகாரப் பயல்களை மட்டும் திருத்தவே முடியாது


ஜெயலலிதாவால் 'பெண்களுக்குச்' செய்ய முடியாததை ஸ்டாலின் செய்து சாதிப்பாரா?


பேஸ்புக்கில் 30 லிருந்து 50 வயதிற்குள்ளவர்கள் தங்கள் அம்மாக்களின் போட்டோக்களை போட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை சொல்லுறாங்க ஆனால் 5 லிருந்து 10 வயசு குழந்தைகள் எல்லாம் "அழகான இளமையான" அம்மாக்களின் போட்டோக்களை போட்டு வாழ்த்து சொல்லல ஒரு வேளை அவங்க இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு வாழ்த்து சொல்லுறாங்களோ என்னவோ பேசாமல் நாம் இங்கன கடையை மூடிட்டு அங்க போய் தோழிகளுக்கு அன்னயர் தின வாழ்த்துக்களை சொல்லுவோம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. டாஸ்மாக் எல்லாம் நிரந்தரமாக மூடப்படுகிறது என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    ReplyDelete
  2. கெட்டாலும் குடிமக்கள் குடிமக்களே! லாக்டவுன் காலத்துக்கான உற்சாகபானத்தை இரண்டு நாட்களில் வாங்கிவிட்டார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.