Monday, May 3, 2021

 

#avargal unmaigal

திமுகவிற்கு மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பை தந்த தமிழக மக்கள்


திமுகவின் வெற்றி என்பது ஸ்டாலின் உழைப்புக்கும் மோடி மீதான மக்களின் எதிர்ப்புக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகின்றேன். அதுமட்டுமல்ல  தமிழக தேர்தலில் அனைத்து முக்கிய கட்சிகளும் வெற்றி பெற்று இருக்கின்றன என்பது என் கருத்து.
 

திமுக கூட்டணி  180 இடங்களுக்கு மேல்  ஏன் 200 இடங்களையும் பிடித்து விடும் என்றுதான் பரவலான கருத்து  சமுக இணைய தளம் மற்றும் ஊடகங்களிலிருந்து வந்தது.. ஆனால் மக்கள் எங்களுக்கு அதிமுகவின் செயல் பிடிக்கவில்லை .அதே நேரத்தில் உங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கையும் ஏற்படவில்லை, அதனால் சற்று குறைத்துக் கொடுக்கிறோம் என்று சொல்லி அவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் ஒரு வேளை முழு ஆதரவையும் கொடுத்து இருந்தால் தலைக்கனம் ஏற்பட்டுவிடும் என்று தமிழக மக்கள் நினைத்து இருக்கலாம்.


அதே நேரத்தில் அதிமுகவை பார்த்து  ஜெயலலிதா மறைவுக்குப் பின் உங்களது செயல்கள் மிகச் சரியாக இல்லை.. உங்களை வெற்றி பெறச் செய்தால் உங்களின் செயல்களை அங்ககரித்தது போல ஆகும், அதனால் உங்களை முழுவதும் கை விட்டு விடாமல் , உங்களுக்கு ஒரு சிறு வெற்றி வாய்ப்பை தருகிறோம் .அதை வைத்துச் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்பட்டால் வருங்காலத்தில் உங்களுக்கு எங்களது ஆதரவைத் தருகிறோம் என்று சொல்லிருக்கிறார்கள் போலத்தான் இருக்கிறது,


அதே போலப்  பட்ட மரம் போல இருக்கும் காங்கிரஸுக்கும் இப்படியே இருக்காதீர்கள் உங்களுக்கு வளர வாய்ப்புக்கள் தருகிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம்  இந்தியா முழுவதும் செழிப்பாகி வளர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லிருக்கிறார்கள்.


மேலும் மயிரிலும்  தாமரை  வளராது என்று இருந்ததைச் சற்று மாற்றி தமிழகத்திலும் வளர முடியும். உங்களை அடியோடு வெறுக்கவில்லை ஒதுக்கவில்லை . அதனால் இனிமேலாவது தமிழர்கள் மீது துவேஷம் கொள்ளாமல் நல்லது செய்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்ற வாய்ப்பையும் தமிழக மக்கள் அவர்களுக்குக் கொடுத்து இருக்கிறார்கள்


இப்படித்தான் அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப   வெற்றி வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் தமிழக மக்கள்.. இதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்து தங்களை வளர்த்து கொள்ளுங்கள் ,அப்படி வளரச் செய்வதோ வளராமல் இருக்கச் செய்வதோ உங்கள் கையில்தான் என்று சொல்லாமல் சொல்லிடிருக்கிறார்கள் என்பதாகவே  எனக்கு தோன்றுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்





ஸ்டாலினின் வெற்றிக்கு சிஸ்டம் எஞ்சினியர் வாழ்த்தியதும்  மனதில் நினைத்ததும் 



13 comments:

  1. மேற்குவங்கமும், கேரளமும் விதிவிலக்கு.     ஆளுகின்ற கட்சி மீது  எப்போதுமே அதிருப்தி இருக்கும்.  அதுவும் பத்தாண்டுகளுக்கு ஆளும் கட்சி.  சாதாரணமாக இந்நிலையில் தோற்கும் அக்கட்சி சமீப காலங்களில் மிகக்குறைந்த இடங்களையே பெறும்..    திமுக வெற்றி என்பது ஆளும்கட்சி எதிர்ப்பு, பாஜக மீதான எதிர்ப்பு இதன்மேல் கட்டப்பட்டது.  அப்புறம்தான் திமுகவின் வாக்குகள்.   நாம் தமிழர் தனித்து நின்று தங்கள் வாக்கு வங்கியை வளர்த்துக்கொள்வது ஆரோக்கியமான செயல்.  விரைவில் அக்கட்சி நல்ல இடத்தைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.பிரேமலதா, தினகரன், தமிமுன், கருணாஸ், சரத்குமார் போன்றவர்கள் காணாமல் போவது நல்லதே.  

    ReplyDelete
    Replies
    1. முதலில் சிறு கட்சிகள் ஒழிய வேண்டும்.. இந்த தேர்தலில் நீங்கள் சொன்ன மாதிரி சில கட்சிகள் ஒழிந்தன..

      Delete
    2. தொடர்ந்து பத்தாண்டுகள் ஒரு கட்சி ஆட்சி செய்தால் அது தோற்கும் என்றால் அடுத்து வரும் பாரளுமன்ற தேர்தலில் பாஜக தோற்குமா?

      Delete
    3. நிறைய வாய்ப்பு. ஆனால் எதிர்த்து நிற்க ஒரு வலுவான தேசியக் கட்சி இருக்கவேண்டும்!

      Delete
    4. அடுத்த தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது அதற்குள்ளபாஜக தலைவர்களை ஒரு வலுவான கட்சியை எதிர்கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என நம்பலாம்

      Delete
  2. மிகச் சரியான தீர்ப்பாக இருக்கிறது உங்கள் விமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் பட்டதை எழுதிவிட்டேன் அவ்வளவுதான்

      Delete
  3. விமர்சன‌த்திற்கு தேர்ந்தெடுத்த படங்கள் மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஹிந்து நாளிதழில் வந்த படத்தை சுட்டு பகிர்ந்து இருக்கின்றேன்

      Delete
  4. பதவிக்கு வந்தவர்கள்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு நல்லது செய்யவே அவர்களுக்கு பதவியை கொடுக்கிறோம் ஆனால் பதவி வந்ததும் அனைவரும் மக்களை மறந்துவிடுகிறார்கள் இது கட்சி பேதம் இன்றி நடை பெறுகிறது பிள்ளைகளை வளர்க்கும் போதே அடௌத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும் அப்போதுதான் அந்த பிள்ளைகள் வளர்ந்து தலைவராகும் போது கொஞ்சமாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மனதில் படும்

      Delete
  5. ஏற்கனவே வளர்ந்து ஆலமரம்போல கிளைபரப்பி இருக்கும் பெரிய கட்சிகளை மட்டுமே ஆதரித்து எழுதியிருக்கிறீர்கள். திமுக மற்றும் அதிமுக வாக்குக்கு பணம் கொடுத்துத்தான் வாங்கி இருக்கிறார்கள். தகாத வழிகளில் சம்பாதித்த தங்களின் பணபலத்தினால் சிறிய கட்சிகள் எதுவும் வளர்ந்துவிடாதபடி சதிகள் செய்து வெற்றியை அடைந்து இருக்கிறார்கள். கட்சிகளுக்குள் சீரான போட்டி (Level Play Ground) இல்லை. மீண்டும் மீண்டும் ஊழல் ஆட்சியே அமைய வழி கோலி இருக்கிறார்கள். இத்தகைய பாதக சூழ்நிலையிலும் நாம் தமிழர் கட்சிக்கு முப்பது இலட்சம் (சுமார் ஏழு சதவீதம்) பேர் வாக்களித்து இருக்கிறார்கள். அதைப்பற்றி எதுவும் உங்களது பார்வையில் இல்லை. எனவே நடந்து முடிந்த இந்த தேர்தல் பற்றி உங்கள் பார்வை நடுநிலைமையோடு இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செல்வதுரை சார் நீங்களே சொல்லிவிட்டீர்கள் பெரிய கட்சிகள் ஆலமரம் என்று அப்படி இருக்கையில் ஆலமரத்தோடு சிறி செடியை ஒப்பிட்டு பேசமுடியுமா என்ன? நாம் தமிழர் கட்சி ஆலமரமாக ஆக வேண்டாம் சிறு மரமாக ஆன பின் அதைப் பற்றி பேசுவோம் . நான் எழுதுவதெல்லாம் ஊடகங்கள் மீடியாக்காள் மற்றும் சமுக இணையதளங்களில் வரும் செய்திகளை படித்து அதன் மூலம் நான் புரிந்து கொண்டவைகளை எனது பாணியில் எழுதி பகிரிந்து வருகிறேனே தவிர நான் நடுனிலை வாதி என்று கூறிக் கொண்டு எதையும் எழுதிப் பகிரவில்லை .

      @செல்வதுரை சார்உங்களின் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் பல சார்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.