Saturday, January 11, 2020

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது எப்படி?


ஒருத்தன் தவறுகளே செய்யவில்லை என்றால் அவன் வாழ்க்கையில் புதிதாக ஏதும் முயற்சித்து பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. எடிசனை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஆயிரக்கணக்கில் தவறுகள் செய்ததனால்தான் இறுதியில் அவர் லைட்டை கண்டுபிடித்தார். இதைத்தான் வரலாறு நமக்கு கற்று தந்ததது..ஆசிரியர்களும் நமக்கு சொல்லி தந்தனர்..


இப்படி ஆசிரியர் ம்ற்றும் வரலாறு கற்று தந்ததை அப்படியே வேதவாக்காக எடுத்து கொண்டு நாம் உடனே புதிய முயற்சியில் இறங்கி தவறுகள் இழைத்து அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள நினைத்தால்  நம் வாழ்க்கை  முடிந்துவிடும்.. லைஃப் இஸ் வெரி சார்ட்


அதனால்தான்  நான் சொல்லுறதை நன்றாக கேட்டுக் கொண்டு கஷ்டப்படாமல் வாழ்க்கையில் முன்னேறுங்கள் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  பிறருக்கு நாம் அட்வைஸ் பண்ண வேண்டியது மட்டுமே... நாம் கொடுக்கும் அட்வைஸ் பலன் அளித்தால்  அதை பின்பற்றி  நாம் முன்னேறலாம் அதை நேரத்தில் நாம் கொடுக்கும் அட்வைஸால் தவறுகள் மற்றவர்களுக்கு ஏற்படுமானால் அதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு முன்னேறலாம் அதனால் பாதிப்பு  மற்றவர்களுக்குதானே தவிர நமக்கு சிறிதும் பாதிப்பு  இல்லை.


இப்படித்தான் நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்களின் மூலம் ஏற்படும் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்...


என்ன மக்களே எனது இந்த அட்வைஸ் மூலம் பாடம் கற்றுக் கொள்வது மிக எளிதுதானே....



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.