Sunday, January 12, 2020

@avargal unmaigal
அடிமைகளிடம் விலை போய்விட்டதா தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்?


சென்னையில் நடை பெறும் புத்தக கண்காட்சியில் அரசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் விற்றதாக ஒரு விற்பனையாளரை இந்த சங்கம் வெளியேற்றி இருக்கிறது...... நியாமாக இருந்தால் தேசத்திற்கெதிராவோ அரசியலமைப்பிற் கெதிராகவோ, மக்களாட்சிக்கு எதிராகவோ அல்லது மக்களுக்கெதிராவோ இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தால் அந்த விற்பனையாளரை வெளியேற்றுவதில் ஒரு நியாயம் இருக்கிறது

ஆனால் அரசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் விற்றதாக சொல்லி வெளியேற்றி இருப்பது எந்த வகையில் நியாயம்... அந்த புத்தகத்திற்கு அரசாங்க தடை அல்லது கோர்ட்தடை என்று ஏதாவது இருக்கிறதா? ஒரு வேளை அரசாங்கத்திற்கு எதிராக இருந்தால் அந்த புத்தகத்தை அரசாங்கம் தடை செய்யாமல்  ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது

இது என்ன பதிப்பாளர் சங்கமா இல்லை.அதிமுக அரசு பஜனை சங்கமா?.


ஏன் அரசு மற்றும் அரசு கொள்கைகளை விமர்சிக்கும் நூல்கள் அல்லது , ஊழலை அம்பலப்படுத்தும் நூலை வெளியிடக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அவர் சொத்து குவிப்பு வழக்கு சம்பந்தமான நூல்கள் வெளியிடப்பட்டன அப்போது எல்லாம் ஜெயலலிதா அரசு ஒன்ரும் செய்யவில்லை ஆனால் இப்போது அடிமை அர்சுக்கு பயந்து பபாஸி இப்படி நடவடிக்கை எடுப்பது எப்படி நியாயமாகும்

இப்படி வெளியேற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புத்தக பதிப்பாளர் &விற்பனையாளர் அன்பழகன் பபாஸி உறுப்பினர்களை திட்டினார், தாக்க முயற்சித்தார் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341 (Wrongful restraint- சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல்), 294(b) ஆபாசமாகப் பாடுதல், பேசுதல், 506(ii) கொன்றுவிடுவததாக மிரட்டுதல் ஆகிய பிரிவுகளிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றப்பிரிவுகளில் 506(ii) மட்டுமே பிணையில் விட முடியாத, அதாவது சிறைக்கு அனுப்பக் கூடிய குற்றமாகும். யாரையாவது ஜாமீனில் விடாமல் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமென்றால் போலீஸ்காரர்கள் இந்த 506(ii) வைச் சேர்த்து விடுவார்கள்.


புத்தகம் மீது தடை இல்லாததால் தடை செய்யப்பட்ட புத்தகத்தை விற்பனை செய்கிறார் என்று அவர் மீது வழக்குப் போட முடியாது என்பதால் அவரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த வழக்கு புனையப் பட்டிருக்கலாம் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.


இதுவரை எந்த புத்தக நிறுவனமும் இதற்கு கண்டனங்களை தெரிவிக்கவில்லை எங்கே கண்டம் தெரிவித்தால் தங்களது பதிப்பகமும் வெளியேற்றப்படும் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்று சுயநலத்துடன் இருக்கிறார்கள்


பொதுமக்களே கருத்து சுதந்திரத்தை பறிக்கும் அந்த அடிமை ஆட்சிக்கு எதிராக குரல் கொடுங்கள் அதே சமயத்தில் புத்தக் கண்காட்சிக்கு சென்று அப்பளங்களை மட்டும் வாங்கி தின்று உங்களது மாலை நேரங்களை கழித்து வாருங்கள் கருத்து சுதந்திரத்திற்காக் குரல் கொடுக்காத பதிப்பாளர்களின் நிறுவனங்களை புறக்கணியுங்கள்

__________________________________________________________________________
அமெரிக்காவில்  குற்றங்கள் செய்யும் இந்தியர்களில் 90% பிரதமர் மோடியின் மாநிலத்திலிருந்து வந்தவர்களால் செய்யப்படுகின்றன.
___________________________________________________________________________
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.