Saturday, January 18, 2020

அரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது


 அரசியல் ஆற்றில் வெள்ளம்  கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் சிலர் பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்தவர்களில் எம்ஜியாரும் ஒருவர் . அவர் ஆற்றில் குதித்து  அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் .காளை மாடு சுலபமாக
அவரை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

இதை கேள்விபட்ட கமலஹாசன். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தார். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று கமலஹாசனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டார். இந்த  கமலை  இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது.ஒரு கட்டத்தில் நாய்,‘வள்... வள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.விளைவு _இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் போக வேண்டிய  திசை வேறு.போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

அரசியலில் கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.

சிலர்  கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர்நாயின் வாலைப் பற்றிக்கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆனால் இதை எதையும் புரிந்து கொள்ளத ரஜினி

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ரஜினி நீந்தி
சென்று அதைப் பற்றுகிறார். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை.நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறார். கரையில்
நின்று கொண்டிருக்கிற அவரின் ரசிககர் கத்துகிறார்கள்...

தலைவா ..கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உங்களால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடுங்கள்!’’

அதை கேட்ட ஆற்றின் நடுவே இருந்து ரஜினி அலறி ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்...இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது

. ஏன்னா, அது கம்பளி மூட்டை இல்லே.  BJP கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் தலைவராக அல்லது கடவுளாகி விடுகிறார்கள்!


__________________________________________________________________________________________________

ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுவது சரியா? 



https://avargal-unmaigal.blogspot.com/2020/01/is-it-okay-to-say.html
______________________________________________________________________________________ 
அன்புடன்
மதுரைத்தமிழன்

18 Jan 2020

1 comments:

  1. கதை அழகாக பொருந்துகிறது தமிழரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.