Friday, January 24, 2020

 அமெரிக்க டாக்டர்கள் ரொம்ப மோசம்டா


மனைவியை அவளது டாக்டரிடம் வழக்கமான ஹெல்த் செக்கப்புக்கு கூட்டி சென்றேன்..
மனைவியின் ஹெல்த் ரிக்கார்ட்டை எல்லாம் பார்த்துவிட்டு அவர்து எடை மிகவும் குறைந்து இருப்பதால் மனைவியின் உணவு பழக்கத்தை பற்றி கேட்டு கொண்டு இருந்தார்.

அப்போது நான் அவள் ஒழுங்காக மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை என்று சொன்னேன்..


அவர் பதிலுக்கு 3 males a day கண்டிப்பாக எடுத்து கொள்ளனும் என்றார்.

நான் சற்று அதிரிச்சியுடன் டாக்டர் என்ன சொல்லுறீங்க  3 males a day  என்று சற்று சத்தம் அதிகம் போட்டு கேட்டுட்டேன்...

அவர் உடனே சார் நான் சொன்னது 3 Meals day என்று சொன்னது உங்கள் காதில் தவறாக விழுந்து இருக்கிறது என்று சொல்லி சிரித்தார்...

அவர் மட்டுமல்ல என் மனைவி நர்ஸ் எல்லோரும் சிரித்தனர்....

என் சங்க்டத்தை பார்த்த டாக்டர் சார் நீங்க கூடிய சீக்கிரம் ENT ஸ்பெஷலிஸ்டை பார்த்து உங்கள் காதை செக் செய்தால் இந்த மாதிரி சங்கடங்களிலிருந்து நீங்கள் தப்பலாம் என்றார்..

அடேய் நகைச்சுவையாக பேசுவோமே என்று சொன்னால் அதையும் சீரியஸாக எடுத்து மெடிக்கல் அட்வவைஸ் அதுவும் அழகான நர்ஸ் முன்னால் சொல்ல உங்களால் எப்படிய்யா முடிகிறது பாவிபயலே இப்பவே நான் ஆன்லைன் போய் உனக்கு ரிவ்யூ மோசாமா போடுறேன்




டிஸ்கி :  டயட்டில் இருக்கும் போது மிக கஷ்டமான விஷயம் என்னவென்றால் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று பார்ப்பது அல்ல நம் அருகில் உள்ள உற்வுகள் நட்புக்கள் என்ன சாஅப்பிடுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

24 Jan 2020

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.