Saturday, January 18, 2020

ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுவது சரியா?




 ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுங்கள் பெண் உடல் வேண்டுமெனில் ஆரம்பத்திலே கேட்டுவிடுங்கள். காதல்  அன்பு நட்பு என்கிற பெயரில் தாஜா செய்ய வேண்டாம் - இப்படி ஒரு  வாதம் நவீன பெண் புரட்சியாளார் யாத்திரி-கார்த்திக்கால் வைக்கப்பட்டு இருக்கிறது


அதாவது பெண் உடல் வேண்டுமென்பவர்கள் ஆரம்பத்துலயே சொல்லிட்டா என்ன? என்கிற வாதம் அவரின் ஒரு பதிவில் வைக்கப்படுகிறது அதை படிச்சிட்டு அவனவன் அதை ஷேர் செய்வதும் அதற்கு பதில்  எழுதுவதுமாக இன்றைய நாள் போய் கொண்டிருக்கிறது . என்ன வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இப்போது இருக்கிறது அதுவும் இலவசமாக என்பதால் எல்லோரும் லூசுத்தனமாக எழுதி கொண்டிருக்கிறார்கள்மப்படி எழுதுபவர்கள் வட்டம் பெரியதாக இருந்தால் ஆஹா ஒகோ என்றும் ,இல்லை அப்படி எழுதுபவர்கள் சங்கிகளாக இருந்தால் சங்கிகள் கூட்டம் ஆர்பரிப்பதும் பெரியார் கூட்டாமாக இருந்தால் பெரியாரிஸ்ட்டுக்கள் ஆகா ஒகோ என்று எழுதுவும் இல்லைஎன்றால் எதிராக பேசி கழுவு ஊற்றுவதும்தான் நடக்கிறது


பெண் உடல் வேண்டுமென்பவர்கள் ஆரம்பத்துலயே சொல்லிடனும் என்று ஒருத்தர் அட்வைஸ் பண்ணுகிறார்.. அவர் சொல்படியே ஒரு  பெண்ணிடம் சொன்னால் அவள் என்ன செய்வாள் இவன் என்னிடம் தவறாக பேசி தவறாக நடக்க முற்படுகிறான் என்று சொல்லி போலீஸில் கம்பெளையென்ட் கொடுப்பாள், மிக வசதியான் குடும்பத்து பெண் என்றால் கேட்டவனை ஆள்விட்டு அடிக்க செய்வார் இல்லைன்னா மீ டு என்று சொல்லி வழக்கு போடுவார்கள், அதுவே அந்த பெண் பேஸ்புக் பிரபலமாக இருந்துவிட்டால் இந்த ஆளின் கேவலமான செயலைப் பாருங்கள் என்று பொதுவெளியில் வெளியிட்டு அவமானப்படுத்துவார்கள் அதற்கு உடனே ஆல்பர்ப்பஸ் அங்கிள்கள் தாங்கள் மிக யோக்கியமானவர்களாக காட்டி கொள்ள அந்த பிரபலத்திற்கு ஆதர்வு கொடுத்து அந்த ஆளைக் கழுவி ஊற்றுவார்கள் இதுதானே நடக்கிறது.. சரி Friends with some benefits...without love என்பதுப்போல இருக்க வேண்டுமானாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் தாஜா செய்து அதன் பின் தான்Friends with some benefits...without love என்ற நிலைக்கு வரமுடியும்

 ஐந்து வயசு குழந்தையையும்  அறுபது வயசு கிழவியையும் வயசு வித்தியாசம் பார்க்காமல் பலாத்காரம் நடக்கும் இந்திய நாட்டில் பெண் உடல் வேண்டுமென்பவர்கள் ஆரம்பத்துலயே சொல்லிடனும் என்று ஒருத்தர் அட்வைஸ் பண்ணுகிறார். இது என்னவோ எழுதுவதற்கு அழகாக இருக்கலாம் ஆனால் நடை முறையில்  சாத்தியம் இல்லை...

ஆணுக்கு பிடிச்சா பெண்ணை அவர்களின் உடலை தேடிப்போறாங்க பெண்ணுக்கு பிடிச்சா ஆணின் உடலை தேடிப்போறாங்க.  இதுதான் நடைமுறையில் நடக்கிற விஷயம். இந்த மேட்டர் பெண்னிற்கு பிடிக்கவில்லை என்றால் நடையை கட்டிவிடனும்.. அது போல பெண்னிடம் கேட்பவர்கள் அதிகாரம் மிக்கவர்கள் என்றால் ஒத்துப் போகணும் அல்லது அதற்கான பின் விளைவுகளை சின்மாயி மாதிரி அனுபவிக்கனும். அல்லது  இந்த டீலிங்க் பிடித்துவிட்டால் Friends with some benefits...without love என்று எஞ்சாய் பண்ணணும் ஆக இது எல்லாம்  சம்மந்தப்பட்ட ரெண்டு பேருக்கு மட்டுமே நடக்கிற டீலிங்.


மோடி மாதிரி சில ஆண்களை தவிர பெரும் வாரியான ஆண்களுக்கு பெண்ணின் உடல்தான் முதல் தேவையாக இருக்கிறது அதுவும் இளமை பருவத்த்தில் ஆனால் வயது ஆக ஆகத்தான் மற்றவைகள் தேவைப்படுகின்றன. ஆனால் பெண்ணிற்கு உடல் தேவை இருந்தாலும் அதைவிட மனசுதான் முக்கியமாக இருக்கிறது. ஆக மொத்தம்  இது ஏமாற்றுவதும் ஏமாறுவதும் காலம் காலமாக நடந்து வரும் விளையாட்டுதான் அதுதான் உண்மை அது அப்படி எளிதில் மோடி சொல்லும் புதிய இந்தியா பிறப்பது போல உடனடியாக எல்லாம் மாறுவது இல்லை

மேட்டர் இவ்வளவுதான் அவரவர்கள் மீண்டும் இன்பாக்ஸிற்குள் போய் உங்கள் வேலையை கவனிக்கவும்


அன்புடன்
மதுரைத்தமிழன்


கார்த்திக் எழுதிய பதிவு இதுதான்:

ஒரு பெண்ணின் உடல் வேண்டுமானால் அவளிடம் நேரடியாகக் கேட்கவேண்டும். ஆரம்பத்திலேயே கேட்கவேண்டும். அதுதான் நோக்கம் என்பதை தெரிவித்திட வேண்டும். அவள் அங்கேயே மேற்கொண்டு தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவுசெய்துவிடுவாள். அதல்லாது தக்கசமயம் வரும்வரைக்கும் காத்திருந்து கேட்கும் போது அவளிடம் பழகுவதற்கான நோக்கம் இங்கு உடல்வேண்டலாகவே ஆகிறது,

காலப்போக்கில் தானே அவள் மீது அபிப்ராயம் வரும் அதன் விளைவான அழைப்பு தானே அது. அதிலென்ன தவறு என்றால் ஆமாம் தவறுதான். காலப்போக்கிலான அபிப்ராயம் காதலாக இருக்குமே அன்றி உடல்சார் தேவைக்கு காலமும் தேவையில்லை அபிப்பிராயமும் தேவையில்லை. நான் இங்கு பேசுவது எதிர்காலமற்ற fling relation பற்றி மட்டுமே! அது பெண்களில் சிலருக்கு தேவைப்படும் சிலருக்கு தேவைப்படாது. எந்த பெண்ணிடம் என்றாலும் ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்படும் போது அதை ஏற்கவோ நிராகரிக்கவோ ஒதுங்கிச் செல்லவோ அவள் முடிவெடுப்பாள். ஆனால் தக்க சமயத்திற்கு காத்திருந்து வெளிப்படுத்தும் போது அவள் உடலை நிச்சயமாக அடைய முடியாது. அது தோல்வியில் தான் முடியும். ஏன் தெரியுமா? நீ அவளின் உடலை அல்ல அவளின் மனதை அவமானப்படுத்தி விடுகிறாய். அவளின் இத்தனைய நாளின் பேச்சு சிரிப்பு அறிவு எல்லாவற்றையும் அவமானப்படுத்தி விடுகிறாய். அவமானப்பட்ட பெண்ணின் புறக்கணிப்பு உக்கிரமனாது.
எல்லாம் இந்த உடலால் தானே என்றெண்ணி உடலைக் கிழித்துக்கொண்டு வெளியேற எண்ணும் அவளுக்குள் இருக்கும் தேவதை
உடலென்னும் திரைக்கு பின்னால் இருக்கும் தேவதை, தன்னை நீ கண்டுகொள்ளவில்லை என்று அழும்.

தேவதைகளைக் கண்டுகொள்ளுங்கள்.
அற்புதமானவர்கள்!

1 comments:

  1. முற்போக்காக சிந்திக்கிறார்கள் என்ற பெயரில் எதையாவது சொல்லி வைக்கிறார்கள். இப்படியும் விளம்பரம் கிடைக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.