Tuesday, January 21, 2020

1971 ல் நடந்த சம்பவத்திற்கான ஆதாரத்தை  1995-ல் தொடங்கிய அவுட்லுக் பத்திரிகையில்  இருந்து எடுத்து காட்டி ஊமை குசும்பர் ரஜினிகாந்த்

பெரியார் ராமர் விஷயம் பற்றி வீட்டு கேட்டுக்கு வெளியே பிரஸ்மீட்டில்  பேட்டி கொடுத்த ரஜினி.. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் நான் பேசியது உண்மை அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். ஊமை குசும்பன் அதோட பேச்சை நிறுத்தி இருந்தால் நல்லா இருக்கும். ஆனால் அதோட நிறுத்தாமல் இந்த ராமர் பெரியார் சம்பவம்  மறுக்க கூடிய சம்பவம் அல்ல  மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று சொல்லி முடித்து இருக்கிறார்..

இதைத்தான் ஊமை குசும்பு என்பது அரை நூற்றாண்டுக்கும் முன்பு  அதாவது எப்பவோ நடந்த விஷயத்தை எல்லோரும் மறந்து இருந்த வேலையில் அதை மீண்டும் தோண்டி எடுத்து தமிழர்களிடையே சண்டைய உருவாக்கி இருவர்களுக்குள்ளும் வெறுப்பை அள்ளி விதைத்து விட்டு அதில் குளிர்காயந்து கொண்டு இப்போ இது மறக்கப்பட வேண்டிய விஷயம் என்று பேசுகிறீர்களே . இது எல்லாம் உங்களுக்கு நல்லாவா இருக்கு...



ரஜினிகாந்த் 1971 ல் நடந்த சம்பவத்திற்கான ஆதாரத்தை  1995-ல் தொடங்கிய அவுட்லுக்  https://en.wikipedia.org/wiki/Outlook_(Indian_magazine) பத்திரிகையில்  இருந்து எடுத்து காட்டி இருக்கிறார் இதைத்தான் சங்கிகளின் ஆதாரம் என்பது.



ரஜினிகாந்த நீங்கள் சினிமாவில்தான் நல்லா நடிக்கிறீர்கள் என்று நினைத்து மகிழ்ந்து இருந்தோம் ஆனால் இப்போது வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவீட்டீர்களே
https://www.youtube.com/watch?v=WxQDrd7Nso4&feature=emb_logo

ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிந்தது உண்மைதான்!" - RAJINIKANTH PRESS...






https://www.youtube.com/watch?time_continue=1&v=nlQkw19KVXU&feature=emb_logo



ராமர் சம்பவம் பற்றி அன்றே பதில் சொன்ன பெரியார்!
https://www.youtube.com/watch?time_continue=4&v=msdnr8HSf-M&feature=emb_logo







சோ-வை 5 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன்" -  1971 ஆம் ஆண்டு நிகழ்வு குறித்து எஸ்.துரைசாமி பேட்டி

https://www.youtube.com/watch?v=FDI4MUtlVLs&pbjreload=10



திணமனி துக்ளக்கில் வந்த இது மாதிரியான பொய்யான செய்திகளுக்காக இவர்கள் மேல் வழக்க பதியப்பட்டது.. அதற்காக இந்த நிறுவனங்கள் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டது



@avargal unmaigal


பெரியார் பிள்ளையார் சிலையை தூக்கி பொதுவுல  ஒடைச்சார அவர் மேல் கேஸ் பதியப்பட்டது. அதே போல  ராமர் படத்த செருப்பால  அவர் அடிச்சிருந்தா அட ஆமாம்  நான்தாண்டா அடிச்சேன்னு தைரியமா சொல்லிருப்பாரு  அவரை பொருத்த வரை புள்ளையாருக்கும் ராமருக்கும்  சிறிதும் வித்தியாசம இல்லை


நாத்திகம் பேசிய பெரியாரோ  ராமரை அவமதிக்கவில்லை.. ஆனால் ஆத்திகம் பேசிய சோ ராமசாமி  மக்கள் பெரியாருக்கு எதிராக திரும்ப வேண்டும் என விரும்பி அவர் நம்பும் கடவுளையே இழிவு படுத்தும் விதமாக பொய் குற்றச்சாட்டை வைத்தார்.

ஆனால் ராமர் படத்தை செருப்பால் அடிக்காத விசயத்தை தான் அடித்ததாக சோ ராமசாமி கதை கட்டி செய்தியாக வெளியிட்ட போது செய்யாத காரியத்திற்கு பொறுப்பேற்க முடியாது என்று மறுத்ததுமட்டுமல்ல பொய்யாக படம் வரைந்த சோ ராமசாமியை மன்னிப்பும் கேட்க வைத்தவர் பெரியார்.

அன்று பெரியார் நடத்திய கூட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட லட்சுமணன் நேற்றைய பேட்டியில் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்... அந்த கூட்டத்தில் கொண்டு செல்லப்பட்ட ராமர் படங்கள் கடைகளில் விற்க்கபடும் ராமர் படங்கள்தான்  என்று.... அப்படி இருக்க அந்த ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டது நிர்வாணப்படங்கள் என்று குற்றம் சொலவது யார் என்று பாருங்கள் அப்போது உண்மை தெளிவாகும்

******"மோடிக்கு ஒரு நேரு மோடியின் பக்தனான ரஜினிக்கு ஒரு பெரியார் அவ்வளவுதானய்ய விஷயம்"****** இந்த இருவரும் இன்றைய மக்களுக்கு என்ன தேவை என்ன பிரச்சனை என்று பேச மாட்டார்கள் இவர்கள் இருவரும் பேசுவது இவர்கள் சிறுவர்களாக இருந்த போது உள்ள பிரச்சனைகளைததான் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லையா அல்லது துக்ளக்கை படித்தால் வளர்ந்த அறிவா என்று புரியவில்லை ஆக மொத்தம் அன்று மோடியை நம்பி வாக்களித்தவர்கள் போல நாளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாக்களிப்பவர்களுக்கும் அதே நிலமைதான் பாவம் தமிழக மக்கள் உங்கள் நிலமையை நினைத்து வருத்தப்படுவதை தவிர வேற வழியில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. பிடியுங்கள் ஒரு பூங்கொத்து இங்கேயே இருந்தும் அறியாடசெய்திகள் உங்களுக்கு எப்படித்தான்கிடைக்குதோ

    ReplyDelete
    Replies
    1. நேற்று நான் ஆபிஸுக்கு லீவு போட்டு இருந்தேன் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் இணையத்தில் உலாவிய போது கண்ணில் பட்டதை இங்கு பதிவாக தந்து இருக்கிறேன் அவ்வளவுதான்

      Delete
  2. மதுர! பெரியாருக்கு பிள்ளையாரும் சரி, ராமரும் சரி, மயிருக்கு சமானம். இதுதான் உண்மை. அவர் எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் கவலைப் பட்டதில்லை. ஏனென்றால் ராமரும் சீதையும் கடவுள் என்பதை அவர் ஒருபோதும் நம்பியதில்லை. நீங்க அவரு ராமரை மதித்ததா சும்மா கதை விடுவது நீங்க பெரியாரை அவமானப்படுத்துவதுபோல் ஆகும்.

    ஆமா ரஜினினு வந்தா மட்டும் நீங்க ஏன் ஆத்திக வேடத்தி தூக்கி எரிந்துவிட்டு நாத்திக தலைவரை ஆதரிக்கிறீங்க?

    பெரியாரோட நாங்க போறோம். நீங்க ரஜினியோட போங்க. அதுதான் ஒரு அர்த்தமா இருக்கும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.