இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது
ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் நான் ஒருபோதும் புகழ் மற்றும் அதிர்ஷ்டத்தை விரும்புவதில்லை நான் விரும்புவதெல்லாம் உடல்நலம், குடும்பம் மற்றும் மகிழ்ச்சி மட்டுமே
ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் நான் ஒருபோதும் புகழ் மற்றும் அதிர்ஷ்டத்தை விரும்புவதில்லை நான் விரும்புவதெல்லாம் உடல்நலம், குடும்பம் மற்றும் மகிழ்ச்சி மட்டுமே
365 பக்க புத்தகத்தின் முதல் வெற்று பக்கம் இன்று. அதில் நல்லது ஒன்றை எழுதி ஆரம்பித்து வைப்போம்
புதிய ஆண்டு ஒன்றும் நம்மை எங்கேயும் அழைத்து செல்லாது.....ஆனால் புதிய ஆண்டில் நாம் எங்கே செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் எங்கே தொடங்க வேண்டும் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்து இந்த புதிய ஆண்டை நம்முடன் அழைத்து செல்லவேண்டும்
இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது
இதயத்தில் ஏற்பட்ட பழைய காயங்களை துடைதெறிவோம்
நமது தவறுகளிலிருந்து புதிய பாடத்தை கற்றுக் கொள்ளுவோம்
நம் வாழ்வில் இன்னும்மொரு வருடம் கழிந்து
ஒரு புதிய விடியலாக மற்றும்மொரு ஆண்டு விடிகிறது
பழைய ஆண்டை அதன் போக்கில்விட்டுவிட்டு
புதிய ஆண்டை வரவேற்போம்
மேலும் கடந்த கால கெட்ட விஷயங்களை புதைத்துவிட்டு
புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம்
செல்வத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல
அமைதி மற்றும் அன்புக்காக பிரார்த்தனை செய்வதே
நமது புத்தாண்டு விருப்பங்களாக இருக்கட்டும்
அதோடு நிறுத்திவிடாமல்
ஆரோக்கியத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ,
நம்மை சுற்றி உள்ள சக மனிதருக்காகவும்
நாம் விரும்பும் அனைவருக்கும்
மற்றும் வாழ்க்கையில் வழியை தவறியவர்கள்
சரியான பாதையில் மீண்டு வர அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்
இந்த புத்தாண்டில்
பழையதை விட்டுவிட்டு புதியதைத் தழுவுவோம்
கடவுளின் அன்பு நம்முடன் என்றும் இருக்கட்டும்.
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நமது எண்ணமும் செயல்களும்தானே தவிர புதிய ஆண்டுகள் அல்ல... ஆனால் புதிய ஆண்டின் தொடக்கத்திலாவது நாம் வாழப் போகும் ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து தொடங்குவோம்.
இங்கே வருகைதரும் அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மீதான் 1ஸ்ட்டூஊஊஊ.
ReplyDeleteஎன்ன ட்றுத்துக்கு மட்டும் இவ்ளோ லேட்டாகப் பிறந்திருக்குது புது வருஷம்:)..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ட்றுத் உங்களுக்கும் மாமி மற்றும் மகள்.. அனைவருக்கும்.
நீயூ இயர் ஈவ் கொண்டாத்திற்காக சமைத்து நீயூ இயரை என் வீட்டில் நண்பர்களோட வரவேற்று சரக்கோடு கொண்டாடி மகிழ்ந்து கேக்வெட்டி இரவு 2 மணிக்கு தூங்க சென்று காலையில் சர்ச்சுக்கு போய் வந்துவிட்டு மோடியை நல்லா நாள் அதுவும் திட்டாமல் யோசிக்கையில் இந்த பதிவு என் மனதில் உதித்தது அதுதான் நான் லேட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
Deleteவாழ்த்திற்கு நன்றி
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteமுதல் நாளிலிருக்கும் ஆர்வம், சுவாரஸ்யம் வருடம் முழுவதும் இருந்தாலே போதும்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.