ஒரு மணி நேரத்தில் நம் மனம் எத்தனை எண்ணங்களை நினைக்கிறது?
எண்ணங்கள் வித்தியாசமானவைகள் அவைகள் அளவிட முடியாத அளவிற்குதான் இருக்கிறது ஆனாலும் ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திலும் உங்கள் மனம் எத்தனை எண்ணங்களை நினைக்கிறது தெரியுமா?
ஒரு நாளைக்கு 60,000 - 80,000 எண்ணங்களை நம் மனம் சிந்திக்கிறது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அதாவது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 2500 - 3,300 எண்ணங்கள். அது நம்பமுடியாதது என்றாலும் அதுதான் உண்மை வேறு சில வல்லுநர்களோஅதன் எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றனர், அதாவதுஒரு நாளைக்கு 50,000 எண்ணங்கள் அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2100 எண்ணங்கள். இதுவும் ஏராளமான எண்ணங்கள்.
நாம் சிந்திக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் விற்க முடிந்தால், நாம் எந்த நேரத்திலும் பணக்காரர்களாகத்தான் இருப்போம் அல்லது நாம் சிந்திக்கும் எண்ணங்களை சமுக வலைத்தளங்களில் பதிந்து அதிக லைக்குக்ளை பெற்றால் சமுக இணையதள பிரபலமாகலாம்..,

ஒவ்வொரு நாளும் எண்ணங்கள் நம் மனதில் அலை போல தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கின்றன .அதில் நாம் எந்த வகையான எப்படியான எண்ணங்களை நினைக்கிறோம் என்று கவனம் செலுத்தி பார்த்தோமானால் அவற்றில் பெரும்பாலானவை பயனற்ற முக்கியமில்லாத எண்ணங்கள் நம் மனதில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து செல்வதைக் கண்டு நாம் ஆச்சரியம்தான் அடைவோம். இவை நம் மனதில் நாம் திரும்பத் திரும்பச் சொல்லும் சொற்கள் மனம் செய்யும் கருத்துகள் நாம் கேட்டு அறிந்ததை மீண்டும் கூறுவது கேள்விகள் பதில்கள் மற்றும் நாம் கூட உணர்ந்திருக்கிறாத அறிவார்ந்த எண்ணங்கள்.
இந்த அளவிற்காக நாம் ஒவ்வொரு நாளும் எண்ணங்களை நினைக்கிறோம் என்பதை நாம்மால் நம்ப முடியாதுதான் , ஆனால் தியானத்தில் ,நமக்கு தியான பண்ணும் அனுபவம் இருந்தால், நம் மனதில் ஏராளமான எண்ணங்கள் அலையாக அலையாக வந்து செல்கின்றன என்பது புரியும். நம் மன. இது மிகவும் பிஸியான ரயில்,பஸ் மற்றும் விமான நிலையம் போன்றது, அங்கு ஏராளமான மக்கள் வந்து செல்வது போலத்தான் நம் மனதில் ஏராளமான எண்ணங்களும் வந்து சென்று கொண்டு இருக்கின்றன
நாம் படிக்கும் போதோ அல்லது பிரச்சனைகளை மற்றும் சிக்கல்களை தீர்க்க முயலும் போதோ முடிவே இல்லாமல் எண்ணங்கள் நீரோட்டம் போல தொடர்ந்து வருவதை நாம் அறியலாம் . அதுமட்டுமல்ல நமது தீர்விற்கு பல பொருத்தமற்ற எண்ணங்களும் வந்து கொண்டு இருக்கும் என்பதை நாம் சற்று யோசித்து பார்த்தால் நாம் அறிவோம் ஆம் நம் மனம் ஒரு பட்டாம்பூச்சி போன்றது, அது ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு பறக்கிறது, ஒருபோதும் அசையாமல் நிலையாக ஒரு இடத்தில் இருக்காது
நமது அன்றாட இயல்பான வாழ்க்கையில் இப்படி பல சிந்தனைகள் நம் மனதில் ஆட்டோமெட்டிக்காக ஒடிக் கொண்டிருக்கும் இதை நாம் அதிகமாக உணர்வதில்லை ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போதுதான் நம் கவனத்தை திசைதிருப்பி, நமது கவனத்தை ஈர்க்கும் பல எண்ணங்களை நாம் அறிவீவோம் அப்போதுதான் நமக்கு தெரியும் நம் மனம் எப்படியெல்லாம் தாறுமாறாக இயங்குகிறது என்று
நாம் ஆடை அணியும் போது, சாப்பிடும் போது , நடக்கும் போது, வேலை செய்யும் போது , வாகனம் ஓட்டும் போது, பேசும் போது, குளிக்கும்போது . தனியாக இருக்கும்போது, நிறுவனத்தில் இருக்கும்போது இந்த எண்ணங்கள் நீடிக்கும் இது தொடர்கிறது. நாம் தூங்கும் வரை அது தொடர்கிறது. இது ஒரு நிலையான மன சத்தம் போன்றது.
சில நேரங்களில் குறிப்பாக நாம் கவலையுற்று இருக்கும் போது எண்ணற்ற இந்த முடிவற்ற ஓட்டம் சோர்வை தருகிறது, இந்த எண்ணங்களிலிருந்து கவனத்தை திசை திருப்பும் பொருட்டு மக்கள் குடிக்கிறார்கள் போதை மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், அல்லது பொழுதுபோக்குகளில் அல்லது பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் இது சரியான தீர்வு அல்ல.
நமது எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தால், நாம் எவ்வளவு ஆற்றலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கலாம் என்று யோசித்து பாருங்கள். தொடர் எண்ணங்கள் நம்மை தொந்தரவு செய்யாவிட்டால், நாம் எவ்வளவு சிறந்த கவனம் செலுத்த முடியும் என்று யோசியுங்கள். அது போல நம் வாழ்க்கையில் இந்த தொடர் எண்ணங்களை மட்டும் நிறுத்த ஒரு வழி தெரிந்திருந்தால், நம் உள்ளம் எவ்வளவு அமைதியுடனும், மகிழ்ச்சியுடன் இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்களேன்.
ஒரு சின்ன கேள்வி நாம் இலக்கை அடைந்த பிறகு நம் காரின் இயந்திரத்தை இயக்குகிறோமா இல்லைதானே? நாம் நிச்சயமாக இயந்திரத்தை அணைத்துவிடுகிறோம்தானே அது போல நம் மனதை ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?
உடனே நாம் சொல்வோம் அப்படியெல்லாம் செய்ய முடியாது காரணம் எண்ணங்கள் ஆட்டோமெடிக்காக நம் மனதில் வருவது அதை நிறுத்துவது எனப்து இயலாது என்று ஆனால் நாம் சற்று முயற்சித்தால்முற்றிலும் நிறுத்தலாம் அல்லது குறைந்தது குறைக்கலாம்.
ஒரு நாளைக்கு நம் மனம் நினைக்கும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க தியானம்தான் சிறந்த வழி ஆனால் அதற்கு சற்று முயற்சி தேவை .தியானம் நமது எண்ணங்களின் ஓட்டத்தை குறைக்கிறது என்பதை தவறாமல் தியானிக்கும் மக்கள் நிச்சய்ம ஒப்புக்கொள்வார்கள். எண்ணங்களை கட்டுபடுத்துவதன் மூலம் நம் மனம் அமைதி அடையும்
நாம் இந்த எண்ணங்களின் ஒட்டத்தை குறையும் போது நம் மனது திசைதிருப்பப்படாமல், நாம் என்ன செய்கிறோம் என்பதில் நம் மனதை மையப்படுத்த முடியும், மேலும் நம் மனம் படிப்பதில், சிக்கல்களைத் தீர்ப்பதில், திட்டங்களைத் தயாரிப்பதில், நம் வேலையைச் செய்வதில் சிறப்பாக செயல்பட முடியும்.
நாம் 80,000 எண்ணங்களிலிருந்து 30,000, 20,000 அல்லது அதற்கும் குறைவான நிலைக்குச் செல்வதன் மூலம் நிறைய சிரமத்தையும், கவலையையும், நேரத்தையும், வீணான ஆற்றலையும் மிச்சப்படுத்த முடியும். உள் மன அமைதியின் இனிமையான சுவையையும் நாம் அனுபவிக்கத் தொடங்கலாம்
வாழ்க்கையில் வெற்றிகள் பலவற்றையும் குவிக்கலாம்
இதற்கு உதாரணமாக மோடியை நாம் குறிப்பிட்டு சொல்லலாம் அவர் தியானம் பண்ணுவதை பலர் கேலி செய்யலாம் ஆனால் அவர் தியானம் தொடர்ந்து செய்வதால் எண்ணங்களை குறைக்கிறார் இது உண்மைதான் அவர் எண்ணங்களை குறைப்பதன் மூலம் நாட்டு மக்களை பற்றி நினைப்பதில்லை நாட்டை பற்றி நினைப்பதில்லை அதற்காக எண்ணங்களை அதிக அளவு ஒடவிட்டு மனதை குழப்பி கொள்ளாமல் தன்னை பற்றியும் தன்னை சுற்றியுள்ளவர்களை மட்டும் சிந்தித்து செயல்படுகிறார் அதில் வெற்றியும் கண்டு கொண்டு இருக்கிறார்.
அவரே போலவே நீங்களும் உங்களது எண்ணங்களை குறைத்து மனதை ஒருநிலைபடுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற இந்த பதிவின் மூலம் சொல்லி செல்லுகிறேன்
முடிந்தால் இந்த பதிவை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நேரம் கிடைத்தால் இங்கு பதிவு செய்யலாம்
என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

அருமையான இடுகை.
ReplyDeleteதியானத்தின்போது நம் மனதை ஒன்றைப்பற்றியே சிந்திக்கவைப்பதால், அது அலைபாய்வது குறைகிறது. உதாரணமாக நம் மூச்சு ஃப்ளோவையே கவனிக்கச் சொல்வதால் நம் எண்ணச்சிதறல்கள் மிகவும் குறையும். அப்படி இருந்தாலும் மனம் கட்டுக்குள் அடங்காமல் வேறு இடத்தை நோக்கிப் பயணிக்கும். அதை உடனே கவனித்து மீண்டும் ஒரு புள்ளிக்குக் கொண்டுவரவேண்டும். தொடர்ந்த பயிற்சி இதற்கு உதவும்
தியானம் செய்வது மிக நல்லது..... நான் சென்னையில் இருந்த போது அண்ணா நகரில் இருந்த உலக பிரம்மகுமாரிகள் சங்கதிற்கு சென்று தியாண பயிற்சியை மேற்கொண்டேன் ஆனால அதனை முழுமையாக முடிக்கவில்லை காரணம் அவர்கள் ஆன்மா ஆத்மா எதிரில் வருபவர்களை கண்டு புன்னைகைக்க கூடாது எதிரி வருவது ஒரு ஆத்மா என்று எல்லாம் சொல்லிஸ் சென்றதால் அதில் எனக்கு உடன்பாடு இல்லையாததால் அங்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.
Deleteஅங்குள்ள தியானக்கூடம் மிக அருமையாக இருக்கும் ஐ மிஸ்தட் அது போல ஒரு தியானக்கூடம் அமைக்க வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று
அருமையான பகிர்வு அண்ணா..
ReplyDeleteமனம் ஒரு பட்டம் பூச்சியைப்போல பறந்து கொண்டே இருக்கிறது...
ஆஹா அருமை....
உங்களிடமிருந்தும் நெல்லை தமிழனிடம் இருந்தும் அருமை என்ற வார்த்தையை கேட்டது வஷிஷ்டர் வாயில் இருந்து கேட்டது போல இருக்கிறது....
Deleteஉங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மனம்மார்ந்த நன்றிகள்
எண்ணத்தின் ஓட்டத்தை என்னமாய் விவரித்திருக்கிறீர்கள். மனத்தை ஒருமுகப்படுத்தி எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க தியானம் உதவும். உண்மைதான். ஆனால் அதற்கான முயற்சியும் ஈடுபாடும் இல்லாவிடில் சாத்தியமில்லை. அப்புறம்.. என்னடா மதுரைத்தமிழனிடமிருந்து அரசியல் கலக்காத ஒரு பதிவா என்று ஆச்சர்யப்பட்டேன். இறுதியில் ஆச்சர்யத்தைப் போக்கிவிட்டீர்கள். :)))
ReplyDeleteகீதா மேடம் உங்களின் வருகையால் என்மனம் பட்டாம் பூச்சி போல சிறகடித்து பறக்கிறது.. இந்த ஞாயிற்று கிழமை உங்கள் வரவால் இனிமையாகி இருக்கிறது அளவிட முடியாத சந்தோசம். இந்த பதிவு நான் சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் படித்த கட்டுரையை உள்வாங்கி கொண்டு அதை ஞாபக்த்தில் வைத்து என் கருத்தையும் சேர்த்து என் பாணியில் எழுதிய பதிவு.. அவ்வளவுதான்.. அரசியல் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் கடைசியில் சாப்பாட்டிற்கு எப்படி உப்பு அவசியமோ அது போல என் வலைத்தள பதிவிற்கும் அரசியல் நக்கல்கள் அவசியமாகிவிடுகிறது
Deleteஉங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மனம்மார்ந்த நன்றிகள்
அருமையான பதிவு மதுரை தமிழன். எண்ணங்களைக் குறைத்துக் கொண்டால் மிகவும் நல்லதே அதற்கு மனதை கொஞ்சம் நேரம் சும்மா இருக்க வைத்துக் கொள்ள வேண்டுமே. கடினமான பயிற்சி தேவை.
ReplyDeleteதுளசிதரன்
மதுரை சூப்பர் போங்க! என்னாச்சு! தியானம் செய்தீங்களோ!! அதான் நயன் எல்லாம் எண்ணங்களில் வராம பூரிக்கட்டை அடி வாங்காம நல்ல பிள்ளையா ஒரு நல்ல பதிவு.
ReplyDeleteநல்ல கருத்துகள் சகோ. உண்மைதான் மனதை அடக்கத் தெரிந்தால் எதையும் சாதிக்கலாம். ஃபோக்கஸ்ட் மைன்ட். அது இல்லாததால் தான் பலராலும் புத்திசாலித்தனம் இருந்தாலும் தங்கள் செயல்களில் நிறைவு பெற இயலவில்லை. மன ஓட்டம் சிதறுவதால். தியானம் சிறந்த வழிதான். தியானத்திற்கு நல்ல மூச்சுப் பயிற்சியும் தேவை. எண்ணங்கள் சிதறும் போது அதைக் கூர்ந்து கவனித்து கட் செய்து ஒருமிக்கப் பழகிவிட்டால் மனம் அமைதியுறும். ஆழ் கடலைப் போல.
கீதா