எல்லோரும் மாவாட்ட கற்றுக் கொள்ளனும் ஜெயமோகன் அட்வைஸ்
நேற்று தான் வாங்கிய தோசை மாவு புளித்துவிட்டது என்று சண்டை போட்ட ஜெயமோகன் நாளை தான் வாங்கும் இட்லி மாவு அதிகம் புளிக்கவில்லை என்று சண்டை போட தாயராகி கொண்டிருப்பதாக உளவுத்துறையின் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் மாவு விற்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மாவு விறபனையாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்
எழுத்தாளர் ஜெயமோகனின் மனைவி சோம்பேறித்தனமாக இல்லாமல் வீட்டில் மாவு அரைத்து இருந்தால் இப்படி ஜெயமோகன் கண்டவர்களிடம் அடி வாங்கி ஊடகம் மூலம் நியாயம் கேட்டு போராடும் நிலைக்கு வந்து இருக்க நேர்ந்து இருக்காது... சொந்த மனைவியை திட்ட தைரியம் இல்லாத ஜெயமோகன் அவரின் தோசை ஆசைக்கு உதவிய கடைக்காரனின் மனைவியை திட்டுவது எந்த வகையில் நியாயம் #இன்றைய தமிழகத்தின் தலையான பிரச்சனையில் நம்ம கருத்தையும் பதிந்து வைப்போம்
மாவு புளித்துவிட்டது என்று அதை திருப்பி கொடுத்து சண்டை போட்டு நியாயம் கேட்ட ஜெயமோகன் அது போல தான் கட்டிய மணைவி சோம்பேறித்தனமாக மாவு அரைக்காமல் இருக்கிறார் என்று சொல்லி அவரின் மாமனாரிடம் சோம்பேறி பெண்ணை தன் தலையில் ஏமாற்றி கட்டிவைத்துவிட்டார் என்று நியாயம் கேட்டு போராடி இருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் அதை ஜெயமோகன் செய்வாரா?
அடேய் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் சொல்லும் கருத்துக்காக கொலை செய்யும்படும் இந்தியாவில் ஒரு எழுத்தாளர் புளித்த மாவிற்க்காக தாக்கப்பட்டாராம் நியாயம் வேண்டுமாம்
மாவுக் கடைக்காரனிடம் அடிவாங்கியதை விட இந்த இணையதளத்தில் அது சம்பந்தமாக கேலி கிண்டல்களை அதிகமாக வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறார் அந்த பிரபல எழுத்தாளர்
நாமோ மாதிரி ஜெமோ மட்டும் ரொட்டி சாப்பீட்டு இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது
எழுத்தாளன் தன் கருத்தை பேனாவின் மூலம் சொல்லுகிறான் குடிகாரனோ தன் கைகளின் மூலம் காட்டுகிறான்
ஒரு வங்கி காசாளர் பெண்ணை, கீரை விற்க கூட லாயக்கில்லாத என்று தரக்குறைவாக எழுதியவர், அந்த கடை பெண்ணிடம் அவதூறாக பேசியிருக்க வாய்ப்பு இருக்கலாம் அல்லவா?
ஜெயமோகனின் மீதான தாக்குதல் கருத்துப் பிரச்சினையினால் நிகழ்ந்தது அல்ல.எந்த ஒரு தனி மனிதனுக்கும் நமக்கும் உங்களுக்கும் நிகழக் கூடியது. அது கண்டிக்க கூடியதுதான் ஆனால் அடிப்பட்ட மனிதனை பார்த்து இந்த சமுகம் கவலைக் கொள்ளாமல் கிண்டல் கேலி செய்து வருகிறது என்றால் அடிப்பட்டவன் தன் எழுத்துக்களின் மூலம் விதைத்த விதைதான் இப்படி பலனைக் கொடுக்கிறது. டாட்
வங்கி பெண் பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு?
அன்புடன்
மதுரைத்தமிழன்
good .... தங்களின் ஆதங்கம் நியாயமானது !!!
ReplyDelete