Monday, June 10, 2019

சிறைக் கைதிகளை விட இன்றைய மாணவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்களா?


சிறைக் கைதிகளைவிட  குழந்தைகள் அவுட் சைடில் மிக குறைவான நேரம் செலவிடுகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு புரிகிறது


  மிருகக்காட்சிசாலைக்கு செல்லும் பலர் அங்கு விலங்குகளை கூண்டில் வைத்திருப்பதை பார்த்து பலரும் மனம் வருந்தும்  நிலையில், சிறுவர்கள் சிறைச்சாலை போன்ற சூழல்களில் அமைந்த பள்ளிக்கூடத்தில் அதிகம் நேரம் செலவிடுவதை பற்றி  யாரும் அதிகம் வருத்தப்படுவதாக தெரியவில்லை .


இந்த நவீன சமுதாயத்தில் மன மற்றும் உடல்நல நோய்களுக்கு பெரும்பான்மையான காரணம் இயற்கை சூழலில் இருந்து குழந்தைகளை அகற்றி,  அவர்களை ஒரு அறையில்  நாற்காலியில் உட்கார வைத்து கொண்ட கற்றல் நடைமுறையே  பின்பற்றுவதே


அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கூடம் முடிந்தது ஸ்பெஷல் வகுப்புக்கள் என்று சொல்லி இன்னொரு இடத்தில் அவர்களை அடைத்து வைக்கிறோம்..
மேலும் அவர்களை படி படி என்று மட்டும் பள்ளிகளிலும் வீடுகளிலும் டார்ச்சர் செய்கிறோம் அதுவும் புரிந்து படிக்க செய்ய வைப்பதை விட அப்படியே மனப்பாடம் செய்து கக்க வைக்கிறோம் அவர்களை பதட்டபடுத்தியே வளர்க்கிறோம்.


இப்படி எல்லாம் நாம் செய்வதால் அவர்களின் மன நலம் மட்டுமல்ல உடல் நலமும் கெட்டு 20 ,30 வயதுகளிலே சுகர் பேஷண்டாக ஆகி மிக இளமையாக இருக்கும் போதே பலரும் மரணிக்க நேர்வதை இப்போது எல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது..பல தற்கொலை சாவுயையும் கேட்கிறோம்

இது எல்லோருக்கும்  நன்றாக தெரிகிறது இன்றைய கல்வி முறையிலும் குழந்தைகளை வளர்ப்பதிலும் தவறுகள் நடந்துவிட்டது என்று ஆனால் அதை மாற்ற மட்டும் யாரும் முயற்சிக்கவில்லை..... இதில் ஏன் எல்லோரும் மெளனம் காக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு புரியவில்லை....

ஒரு வேளை உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்


குழந்தைகளா அல்லது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளா இதில் யார் வெளியில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடியுமா?

உங்களால் முடியவில்லை என்றால் இந்த காணொளியை பாருங்கள்
Free the Kids - Dirt is Good
Who spends more time outside, a child… or a maximum-security prisoner? Watch this film to find out. 






அன்புடன்
மதுரைத்தமிழன்
10 Jun 2019

4 comments:

  1. உண்மைதான் கொஞ்சம் மக்கள் ஆலோசிக்க வேண்டிய விசயம்.

    ReplyDelete
  2. கற்றல்/கற்பித்தல் பற்றி பொதுக் கருத்து இருக்கிறதா

    ReplyDelete
  3. மதுரை, அருமையான பதிவு. இதற்கு முதலில் பெற்றோர் தான் சிந்திக்க வேண்டும். 2 வயசு ஆறதுக்குள்ளேயே எங்கேயாச்சும் பள்ளிக்கூடம் இருக்கானு பார்த்து தள்ளுறாங்களே.

    நேற்றுத்தான் இதை ஒட்டி ஒரு நிகழ்வு... என் கசின் மனைவியுடன் பேசிய போது அவள் தனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்ரிருக்கிறாள். குழந்திய 7 வகுப்பு படிக்கும் பையன் ஒரே பையன் பெற்றோர் இருவருமே கல்லூரி ஆசிரியர்கள். மகன் மொபைலுடன் இருக்கிறான். அந்த வயதிற்கும் மீறிய வெயிட் ஒபீஸ்...வீட்டில் பாட்டி இருக்கிறார். அந்தக் குழந்தையிடம் கஸின் கேட்டிருக்கிறாள் ஏன் மொபைல் நோண்டிக்கிட்டுருக்க வெளிய போய் விளையாடலாமேனு.

    எனக்கு போர். யாரும் விளையாட வர மாட்ட்டேன்றாங்க...என்று அவன் அம்மா அப்போதுதான் கல்லூரியிலிருந்து வரவும் (மாலை 5.30) அவர், இவன் எப்பவும் மொபைல்லதன இருக்கான் அவனுக்கு கேம்ஸ் விளியயாடறதுதான் பிடிக்கும்னு பாருங்க எப்படி ஒபீஸா இருக்கான்னு...சொல்ல என் கஸினுக்கு அதிர்ச்சி. என்னது இது படித்த அதுவும் ஆசிரியராக இருப்பவரே தன் மகனை அவன் முன்னிலையிலேயே இப்படிச் சொல்கிறாரே என்று சொல்லி அவனை வெளியில் அனுப்பி விளையாட வைங்க இல்லை வெளியில் டென்னிஸ் ப்ராக்க்டிஸ்கு அனுப்புங்க, நீங்க அவனோடு நிறைய டியம் ஸ்பென்ட் பன்னுங்க என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். இப்படித்தன பல பெற்றோர். இல்லைனா ஸ்பெஷன் க்ளாஸ் க்கு அனுப்பிடுவாங்க. இதுதான் நிலைமை பெற்றோர்தான் திருந்த வேண்டும்

    கீதா

    ReplyDelete
  4. நாங்கள் இருவருமே ஆசிரியர்கள். ஆனால் குழந்தைகளை நன்றாக விளையாடவும் விடுவோம். அவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூட போகும் போக்கில் சொல்லுவதுதான் உட்கார்த்தி வைத்து எல்லாம் சொன்னதில்லை. குறிப்பாக ஃப்ரென்ட்லியாக இருப்பது. பதிவு அருமை மதுரைத் தமிழன்

    துளசிதரன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.