காலம் மாறினாலும் தமிழக தலைவர்கள் மட்டும் மாற போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை
சென்னையில் தண்ணீர் பஞ்சம் மக்கள் தண்ணிருக்காக படும் அவதி நம்மை வேதனைக்குள்ளாக்கிறது... இந்த சமயத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதிலாக ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம் எப்படி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கலாம் என்று பேசி தீர்க்க வேண்டிய காலம் இது... போர்க்கால நடவடிக்கை போன்று செயல்பட வேண்டிய த்ருணம்.. ஆனால் அதற்கு பதிலாக எதிர்கட்சி தலைவர் தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்..போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா என்ன? சரி இவர்கள்தான் இப்படி என்றால் ஆளும் கட்சியும் ஏட்டிக்கு போட்டியாக யாகம் நடத்துவோம் தண்ணீர் கிடைத்துவிடும் என்று அவர்களும் அவர்கள் பங்கிற்கு ஏதோ செய்கிறார்கள்...
ஆளும் கட்சியை காரணம் கேட்டால் எட்டாண்டுக்கு முன்பு ஆட்சி செய்தவர்களால்தான் இப்படி பிரச்சனை என்கிறார்கள் அது சரிதான் ஆனால் எட்டாண்டுக்கு முன்னால் நடந்த ஆட்சியினால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க கடந்த எட்டாண்டுகளாக என்ன தீட்டங்கள் தீட்டி செயல்படுத்தினீர்கள் என்று கேட்டால் அதற்கு பொறுப்பான பதில் இல்லை....
கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் கட்சியை ஆளும் கட்சியாக தொடர்ந்து வைத்து கொள்ள அவர்கள் போராடிக் கொண்டிருப்பதால் அவர்களால் மக்களின் பிரச்சனைகளை கவனிக்க முடியவில்லை.... எதிர்கட்சியும் எப்படியாவது தாங்கள் மீண்டும் ஆளும் கட்சியாக வந்து விட வேண்டும் என்று போராடுவதால் அவர்களுக்கும் மக்கள் பிரச்சனைகளை கவனிக்க நேரமில்லை
ஆளும் கட்சிக்குதான் தங்களை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும் போது அந்த இடத்திற்கு வர நினைக்கும் ஸ்டாலின் கடந்த எட்டாண்டுகளில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க சட்டசபையில் ஒரு தீர்மானமாவது கொண்டு வந்து இருந்தால் அல்லது அந்த தீர்மானத்திற்காக வெளி நடப்பாவது செய்து இருந்தால் இப்போது அதை சொல்லியாவது போராடலாம்
ஆனால் அதைவீட்டுவிட்டு சும்மா பேருக்காவது போராட்டம் நடத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை ஸ்டாலின் இப்படியென்றால் துரைமுருகன் அதற்கு மேல் ஒரு படி சென்று ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் போராடுவோம் என்று சொல்லுகிறார்.
வயதில் மூத்த அரசியல் வாதியாக இருந்தால் என்ன சொல்லி இருக்க வேண்டும் ஜோலார் பேட்டை மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் சென்னைக்கு கொண்டு செல்வதில் தப்புஇல்லை ஆனால் அப்படி கொண்டு செல்லும் தண்ணிர்கள் பணக்கார குடும்பங்களுக்கும் செல்வாக்கு மிக்க ஆட்களின் வீடுகளுக்கு மட்டூம் அனுப்பினால் போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கலாம் அது மட்டும்மில்லாமல் அப்படி எடுத்து செல்லும் தண்ணீர் ஏழைமக்களுக்கு காசு செலவில்லாமல் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று கூறியிருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் அரசியல் மட்டும் செய்வதால் எந்தவித பலனும் இல்லை....
இவர்கள் இப்படி என்றால் மக்களும் பொறுப்பற்று இருக்கிறார்கள். எல்லோரும் பணம் புகழ் என்று அலைகிறார்களே தவிர எதிர்காலத்தை பற்றி யோசிப்பது கூட இல்லை , நமது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நாம் எதை விட்டு செல்ல போகிறோம்? பணத்தையா அல்லது தண்ணீரையா?அராசங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல தண்ணிர் சேமிக்க என்ன என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் யோசித்து பொதுமக்கள் எல்லாம் ஒன்று கூடி அதை நிறைவேற்ற முயற்சித்தால் இன்று மட்டுமல்ல வருங்கால சந்ததினர்களும் தண்ணீருக்காக சாகமால் உயிர்வாழலாம்
இதை நாட்டு மக்கள் மட்டுமல்ல அவர்களோடு அரசும் ஒட்டுமொத்தமாக பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பது ஒன்றும் கஷ்டமானதோ அல்லது அதிக செலவாகக் கூடியதோ அல்ல. நமது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு இதனை நாம் செய்தாக வேண்டும் .
I'm scared for my daughter': Life in India's first city that's almost out of water
அன்புடன்
மதுரைத்தமிழன்

இன்றைய சூழலில் குழந்தைகள் பெறுவதை மக்களே நிறுத்தி வைத்தால் அடுத்த சந்ததிகளுக்கு பிரச்சனையே இருக்காது.
ReplyDeleteஇது படிப்பதற்கு லூசுத்தனமாக இருக்கலாம் ஆழ்ந்து யோசித்தால் இதுதான் சரி.
காரணம் மக்களுக்கு விழிப்புணர்வு என்பதே கிடையாது நான் சொல்வது தமிழக மாக்களுக்கு மட்டுமே...
தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்துக்கு புதிதில்லையே கடல் நீறை சுத்திகரிப்பது நதிகளை இணைப்பது இருக்கு குளங்களில் தூர்வாறுதல் போன்ற நீண்ட0நாள் திட்டங்களை உடனே செயல் படுத்தத் துவங்கலாம் என்னொ ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் நடிகளை இணைக்கலாம் என்ற ஒரு சினிமா பிரபலத்தின் வேண்டுகோளே நினவுக்கு வருகிறது
ReplyDeleteதனி மனிதக் கடமை...பொறுப்பான அரசு விழிப்புணர்வு பெற்ற சமூகம் என மூன்று முனையில் அணுகவேண்டும் ...
ReplyDeleteதண்ணீர் தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் பல இடங்களில் பல வருடங்களாக இருக்கத்தான் செய்கிறது. தலைநகரில் என்னும் போது பூதகரமாக காட்டப்படுகிறது. படிக்கும் காலத்தில் எங்க அக்காள்கள் எல்லாம் நல்ல தண்ணிக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து போய் தலையில் சுமந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் சைக்கிளில் மூன்று குடங்கள் கட்டி மூணு கிலோ மீட்டருக்கு மேல் போய் செங்கல் காலவாய் கிணறுகளில் தண்ணீர் தேடி அலைந்திருக்கிறோம்.
ReplyDeleteஅதிக மழை பெறும் மாநிலம் என்ற போதிலும் நம்மால் அந்த நீரைச் சேமிக்க வக்கில்லை.
இதில் அரசு மட்டுமின்றி நாமும் குற்றவாளிகளே...
அரசில் உள்ளவர்கள் யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் எத்தனையோ ஏரிகளை தூர் வாரியிருக்கலாம் (தண்ணீருக்குச் செலவழிக்கும் குழுவில் பாதியை இதற்கு மடைதிருப்பி). அடுத்த மாதம் மழை வரும்போது, இனி தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்திருக்கலாம். ஏரிகளின் கரைகளில் முழுமையாக யாரும் என்க்ரோச் செய்யாதவண்ணம் அடைக்கலாம். எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அரசுகள் அதனைச் செய்வதேயில்லை.
ReplyDelete