Thursday, June 13, 2019

@avargalunmaigal
உங்க பேஸ்ட்ல கரித்தூள் இருக்கா என்கிற காலம் போய் உங்க ஜட்டியில கரித்தூள் இருக்கா என்று கேட்கிற காலம் வந்துருச்சு
Charcoal-based Underwear Pads Are Now Here To Save You From The Embarrassing Stinky Farts


மனிதனாக பிறந்த எவரும் இயற்கை குடல் வாயுவை (குசு) கழிப்பது இயற்கையானது... ஆனால் யாரும் இல்லாத இடத்தில் விடுவது நல்லது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால்  நாலு பேர் கூடும் இடமான கார் பஸ் ரயில் விமானம் தியோட்டர் ஆபிஸ் ஹோட்டல் இப்படி பட்ட இடங்களில் இடும் போதுதான் பலரின் முகசுளிப்புக்கு காரணம் ஆகிவிடுகிறோம் அதனால்தான் என்னவோ அப்படி இயற்கை குடல் வாயுவை பிரிக்கும் போது அடுத்தவரின் மேல் பழி சுமத்தி அதில் இருந்து தப்பிக்க இயலுவது நடக்கிறது.... நம்ம ஊரில் உள்ள பெரிசுகள் அடுத்தவர்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் கர் பூர் என்று சத்தமாக நாலு பேர் முன்னிலையே இட்டு செல்லுவார்கள்.


பொதுவாக பொதுமக்களில் குடல் வாயுவை வெளியிடும் மக்களை யாரும் விரும்புவதில்லை. ஆனால் சில நேரங்களில், அது கட்டுப்படுத்த முடியாதது

அப்படி இடும் போது அதில் இருந்து வரும் நாற்றத்தை கட்டுபடுத்த ஒரு நிறுவனம்  சரியான தீர்வை கண்டுபிடித்து அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் படி கொண்டு வந்திருக்கிறது வெற்றியும் கண்டு இருக்கிறது

 Flat-D இன்னோவேசன் என்ற கம்பெனி (Flat-D Innovations  Flatulence Deodorize )பிளாட்யூலன்ஸ் டீயோடோர்ஸர் என்று அழைக்கப்படும் புதிய தயாரிப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது, இது கரித்தூள்கள் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது .இது குடல் வாயு நாற்றங்களை பில்டர் பண்ணிவிடுகிறது இதனால் நாற்றம் தவிர்க்க படுகிறது


மருத்துவத் துறையில் நீண்ட காலமாக கரியமில வாயுக்களை உறிஞ்ச இந்த முறை பயன்படுத்தப்படுகிறது  கரியமில வாயு மற்றும் வாயுக்களை அவற்றின் தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து வடிகட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.இந்த தொழில் நுட்பத்தை சிறிய துணிக்குள் வைத்து அதை உள்ளாடைகளில் வைத்து கெட்ட நாற்றத்தை பில்டர் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு பயனுக்கு வந்து இருக்கிறது

பிரிட்டிஷ் கெமிக்கல் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு நரம்பு வாயு மற்றும் பிற நச்சு நீராவிகளுக்கு எதிராக மிகவும் திறமையான வடிப்பான் என்று கூறப்படுகிறது. பிளாட்-டி, farts என்ற stinky நாற்றங்கள் ஏற்படும் வெட்கத்தை அகற்றும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.


The pad made up of several layers of activated charcoal has the ability to filter out the unpleasant smell caused by flatulence. "When you fart or expel gas into the flatulence filter pad, the charcoal inside absorbs the gas, including all the bad smells associating with flatulence," says the website. Since the charcoal traps the odor, you can freely walk around without people judging you for passing gas in public.

References:
https://www.flat-d.com/asdfawer.html
https://www.healthline.com/health/why-do-i-keep-farting

Why we pass gas + how to control excess flatulence with your diet

 



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: இந்த தயாரிப்பு மோடியை தவிர எல்லோருக்கும் பயன்படும் ...காரணம் மோடி இயற்கை வாயுவை வெளியிடவே மாட்டார் அப்படி அவர் வெளியிட்டாலும் அது நறுமணம் வீசும் என்று அவரிண் பக்தால்ஸ் ஆதாரத்துடன் நிறுபத்திருக்கிறார்கள்

5 comments:

  1. மோடி வாயு விடமாட்டாரா ?
    இது எனக்கு புதிய தகவல் நண்பரே...

    ReplyDelete
  2. பின்னால் வரும் கிண்டலால் (பதிவில் பின்னால் வரும்) முன்னாலுள்ள செய்தி உண்மையா என்று தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பின்னால் வருவது கிண்டலோ என்னவோ? பின்னால் வருவது வாயுவும் அல்ல; பக்தாள்ஸ்க்கு அது "வாயு பகவான்!"

      Delete
    2. வணக்கம் நம்பள்கி. நலமா....?

      Delete
  3. இப்படி எல்லாம் கூடா கண்டுபிடிப்பா அட! என்று சொல்ல வைத்தது.

    துளசிதரன், கீதா

    கீதா: கூடவே எனக்கு பிதாமகன் காமெடியும் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.