Friday, August 3, 2018


@avargal unmaigal
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.  Neengal aththanai perum uththamarthanaa sollungal.

சமுக இணைய தளங்களை பயன்படுத்தி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு இப்போது மிக பெரிய சவாலாக இருப்பது இந்த சமுக இணைய தளங்களே துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல ஷோசியல் மீடியாவை கையில் எடுத்து வெற்றி பெற்றவருக்கு அதன் மூலம்தான் அழிவு என்பது தெளிவாக தெரிந்துவிட்டது

மோடி உண்மையிலே சாதனைகள் செய்து இருந்தால் நிச்சயம் அதன் பலனை பெறும் மக்கள் அவருக்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் ஆனால் மோடியின் சாதனை என்பது இணைய தளங்களில் மட்டும் போட்டோ ஷாப்காக மட்டும் இருக்கிறது..

சமுக இணைய தளங்கள் மூலம் மோடி விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார் ஆனால் இப்போது எதிர்கட்சிகள் மட்டுமல்ல பொதுமக்களும் களம் இறங்கி புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்... மோடியின் ஐடி விங் சொல்லும் ,பரப்பும் செய்திகளை இவர்கள் தோல் உரித்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்... அதை இப்படியே விட்டால் தமக்கு நல்லது இல்லை என்பதை உணர்ந்து மோடி தன் விளையாட்டின் போக்கை மாற்றி விளையாட ஆரம்பித்து இருக்கிறார்.

அதன் காரணமாகவே தமிழ் செய்தி மீடியாவை சேர்ந்த பெரும் புள்ளிகளை அழைத்து பேசி இருக்கிறார்... இதில் சன்,கலைஞர் மற்றும் தந்தி டிவி மட்டும் கலந்து கொள்ளவில்லை தந்தி டிவி கலந்து கொண்டாலும் கொள்ளவிட்டாலும் ஒன்றுமில்லை காரணம் இது அவர்களின் முழு ஆதரவி டிவி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
@avargal unmaigal

சரி இவர்களை கூப்பிட்டு பேசினால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று கேள்வி எழுகிறது அல்லவா?

ஒன்று  சமுக இணைய தளங்களால் தொடமுடியாத பெரும்பாலான மக்களை இவர்கள் மூலம் தொட முயற்சிக்கிறார்.இவர்களை கொண்டு அவர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சி எடுக்கப்ப போகிறார் எப்படி இணைய தளங்கள் மூலம் போலியான அதே சமயத்தில் பிரமாண்டமான பிம்பத்தை ஏற்படுத்த முடிந்ததோ அதே முயற்சியை இந்த மீடியாக்கள் மூலம் கிராமப் புற மக்களிடம் பிரமாண்டமான பிம்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சிக்க போகிறார். இதற்கு மீடியாவை சேர்ந்த பெரும் புள்ளிகளின் உதவிகள் மோடிக்கு தேவை... இந்த மீடியா பெரும்புள்ளிகள் உத்தமர்கள் அல்ல பணத்திற்காக சோரம் போகிறவர்கள்தான் இப்படி சோரம் போகுபவர் தங்கள் உண்மையான மூஞ்சியை வெளிக்காட்டாமல் நீயூஸ் 18 குணசேகரன்  புதிய தலைமுறை கார்திகேயேன் என்பவர்களின் முகமூடிகளைக் அணிந்து கொண்டு வலம் வருகிறார்கள்.

இவர்கள் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு எந்த அளவும் குறைந்தவர்கள் அல்ல அவர்களை போன்றவர்களே அதனால்தான் பிரியாணிக் கடை பிரியாணிக்காக குத்து சண்டை போடுவதில் இருந்து உலகத்தில் எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு விவாவதம் நடத்துபவர்கள் மோடியுடான சந்திப்பு பற்றி ஒரு  அறிவுப்பு கூட போடாமல் கள்ள மெளனம் காக்கிறார்கள் என்பதில் இருந்தே இவர்கள் எப்படி நேர்பட பேசுகிறார்கள் என்பது புரியும்.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  யாரும் இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து வெளியே சொல்லவில்லை. சொல்லும் நேர்மை கொண்டோரும் சொல்லத் தவறியது நிர்பந்தங்களை உணர்த்துகிறது.(ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் ஆபீஸ் ரூம் டிரீட்மெண்ட் குடுத்திருப்பாங்களோ என்று நம் மனம் நினைப்பதை ஏனோ தவிர்க்க முடியவில்லை)

இனிமேல் இவர்களுக்கு செய்திகள் எப்படி  போடவேண்டும் எந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எந்த செய்திளை அது எவ்வள்வுதான் மக்களுக்கு முக்கியமாக இருந்தாலும் அதை அமுக்கிவிட வேண்டும் என்று பாஜக தலைமையிடம் இருந்து வரும் திட்டத்தின்படிதான் இருக்கும்..வரும் தேர்தலில் எப்படியெல்லாம் மோடியிசம் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுத்து இருப்பார் .இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை கூட சந்திக்காதவர் ஓனர்களை மட்டும் சந்திப்பதன் நோக்கம் வேறென்னவாக இருக்கும்?இதுவாகத்தானே இருக்க முடியும்.

இதனால் மக்களின் மனதை எளிதில் மாற்ற முடியும்... அதுமட்டுமல்ல சமுக இணையதளங்களின் போக்கையே மாற்ற முடியும் அது எப்படி என்றால் சமுக இணைய தளங்களில் ஆக்டிவாக செயல்படும் பொது மக்களாக இருக்கட்டும் எதிர்கட்சிகளாக இருக்கட்டும் எப்போதும் பொது பிரச்சனைகளை எடுத்து அலசுவதை விட அன்றைய தினங்களில் டிவி சேனல்களில் அல்லது செய்தி நாளிதழ்களில் வரும் செய்தியைத்தான் அதிகம் பேசி பேசி வைராலக்குகிறார்கள் அதை நன்கு எடை போட்டுள்ள மோடி அரசு அதை இப்போது கையில் எடுத்து களம் இறங்குகிறது

நல்ல புரிஞ்சுக்கோங்க மோடி தலைவர் என்பதை விட மிக சிறந்த வியாபாரி  அவர் மட்டுமல்ல அவரின் இனத்தவர்களும் வியாபாரிதான் அவர்களுக்கு மார்க்கெட்டை எப்படி அணுக வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதன்படி அவர்கள் நிச்சயம் அறுவடை செய்வார்கள்

இனி இவர்கள் என்ன செய்வார்கள்  பாஜகவிற்கு சாதகமான விஷய்ங்களை பெரிதாக்குவார்கள் அதுமட்டுல்ல மோடியை அல்லது பாஜகவை பாதிக்கும் விஷயங்களை விவாதத்திற்கு போது எதிர்கட்சியில்  நீண்ட நாட்களாக இருப்பவர்களை விலைக்கு வாங்கி அவர்களை பேசவிட்டு பாஜக ஆட்கள் வலுவான வாதங்களை  வைக்கும் போது இவர்கள் பலவீனமான வாதங்களை வைத்து அவர்களின் கட்சியை பலவினபடுத்த பயன்படுத்தபடுவார்கள் இதன் ஆரம்ப உதாரமாக பிரியாணிகடையில் குத்து சண்டை போட்ட திமுக பிரமுகர்... இதை சமுக வலைத்தளங்களில் பக்தாள்ஸ் வைராலாக்கும் போதே மிடியாக்களும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்களிடம் ஸ்டாலின் எடுத்து வரும் நல்ல பெயரை டேமேஜ் ஆக்கி இவர்கள் எப்போதுமே இப்படித்தான் என்பது போல ஒரு இமேஜை ஏற்படுத்தி வருகிறார்கள் அதே போல எடப்பாடி போன்றவர்களுக்கு ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்தி மக்களின் பார்வையை அவர் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள்...

ஒட்டு மொத்த தமிழக மீடியாக்களின் நெறியாளர்கள் மோடியுடன் நடந்த சந்திப்பு செய்தி எந்த தொலைக்காட்சியிலும் ஸ்க்ரோலிங் செய்தியாக கூட வரவில்லை என்பதில் இருந்தே தெரிகிறது சென்று வந்த ஊடகங்களின் நம்பகத்தன்மை. இனி நடுநிலை ஊடகங்கள்ன்னு எந்த ஊடகத்தையும் தமிழகத்தில் சொல்லவேமுடியாது.


மோடியின் போர்யுக்தி தெரிந்து விட்டது. மோடியும் அவர் ஆட்களும்  நம் ஆயுதத்தையும் தீர்மாணித்து விட்டார். இவர்களை வீழ்த்த வேண்டியது நம் அனைவரின் கைகளில் உள்ளது.

கவியரசர் கண்ணதாசன் அரசியல் அவலம் பற்றி அன்று எழுதிய பாடல் இன்றைய நிலையை பிரதிபலிக்கிறது


 நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்...

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
ஹேஹே...

உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே –
பின்னே
நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே –

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்...

அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன்

கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான்

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்...

சட்டத்தின் பின்னால் நின்று
சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று
அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில்
இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்
பல நாள் திருடன்
ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில்
பார்க்கின்றேன்

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்...

அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments:

  1. பதிவின் சாரத்தை பாடலும் அப்படியே சொல்கிறது...

    ReplyDelete
    Replies
    1. மோடியின் குணாதிசியத்தை இதைவிட வேறு அழகாக யாரும் விளக்க முடியாது

      Delete
  2. கருநாகம் என்று சொல்லும் போது திருமாவளவன் சொன்ன கண்ணாடி விரியன் நினைவுவருவதை தவிர்க்க முடியவில்லை

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடித்த பாடல்தான் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது இந்த காலப்பாடல்கள் எல்லாம் சுத்த குப்பைகள்

      Delete
  4. கருநாகம் - நியூஸ் 18, புதிய தலைமுறை , தந்தி

    கண்ணாடி விரியன் - சண், கலைஞர்

    அவ்வளவுதான்

    .
    பாஜக வை சேர்ந்த ஒருத்தன் பிரியாணி திருடியதை வைரல் ஆக்கும் போது திமுக வை சேர்ந்த முக்கிய பிரமுகர் அடிச்சு தாக்கிதை வைரல் ஆக்க கூடாதா ?

    திமுக புனித பசுவா?

    ReplyDelete
    Replies
    1. திமுகவை சேர்ந்தவர் என்பதைவிட திமுகவில் ஊடுறுவிய பாஜக பக்தாள்ஸ் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்

      Delete
  5. அந்த ஆள் பாஜகவில் இருந்திருக்கான்
    சரி
    பாஜகவில் இருந்த ஒருத்தனுக்கே ( பகிரங்கமாக இருந்திருக்கான் ) பதவி கொடுத்த திமுக செயலு எவ்வளவு கே---- யாக இருந்திருக்கும்
    .
    அதெல்லாம் இருக்கட்டும்
    இப்போது கவர்னராக இருக்கும் அந்த பன்றி வால் நீண்டகாலம் காங்கிரஸ் முக்கிய தலைவர் , அதுமட்டுமல்ல இடது சாரி கட் சி உறுப்பினரும் கூட
    ஆனால்
    அந்த நபர் செய்யும் கூத்துகளுக்கு பாஜகவை தான் கழுவி ஊற்றுகின்றோம்
    ஆனால்
    திமுக உறுப்பினர் என்றால் எதுக்கு பழைய ரெக்கோட ஐ கிளறி எடுத்து திமுக வை காப்பாத்தணும்
    .
    திமுக புனித பசுவா ?
    விமர்சனத்துக்கு அப்பாற்படட உத்தமர்களா ?
    இதுவரை தவறே செய்யாத யோக்கியர்களா ?

    ReplyDelete
    Replies

    1. இவர் திமுகவின் உறுப்பினராகத்தான் உள்ளார் ஒரு சாப்பாட்டுக்காக அடித்து கொண்டார் அது தெரிந்தும் நீக்கப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவரையும் ஸ்டாலின் சென்று பார்த்து ஆறுதல் படுத்தி இருக்கிறார்... ஆனால் அவர் மோசம்...அதே நேரத்தில் மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு கவரனர் பதவி கொடுத்து அலங்கரித்ததோடு அவர் பொம்பளை பொறுக்கி என்று ஊருக்கே தெரிந்தும் இன்னும் அவர் பதவியில் இருக்கிறார் என்றால் அவர் சார்ந்துள்ள கட்சி தலைவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு முட்டு கொடுப்பவர்களும் மிகப் பெரிய கேனையாகத்தான் இருக்க வேண்டும்

      Delete
    2. நான் என்றுமே திமுகவை புனிதமான கட்சி என்றோ அல்லது கட்சியினர் புனிதமானவர்களோ கூறியத்தில்லை எல்லா கட்சிகளையுமே விமர்சித்து வருகிறேன்...ஆனால் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களை சற்று அதிகமாகவே விமர்சிக்கிறேன் என்பதுதான் உண்மை

      Delete
  6. கண்ணதாசனும் தீர்க்கதரிசிதான்.

    ReplyDelete
  7. பாடல் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. இது எல்லோருக்கும் பிடித்த பாட்டுதான்

      Delete
  8. இவர் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தாகத் தெரியவில்லை மன் கி பாத்என்னும் ஒரு வழிபேச்சிலேயே கவனம் செலுத்துகிறார் அயல்நாடுகளிலிருக்கும் இந்திய டயாஸ்பொராவிடம்நல்லபெயர் வாங்கினால் போதும் என்று நினைக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. இவர் பிரதமாரக வருவத்ற்கு முன்பே கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்து எழுதி வந்தேன்.. ஆனால் நல்ல மெஜாரிட்டியுடன் வந்ததும் மனதின் ஒரு சின்ன மூலையில் இவர் கொஞ்சமாவது நாட்டுக்கு நல்லது செய்துவிடுவார் என்றுதான் நினைத்தேன்... ஆனால் இவர் முந்தைய ஆட்சியாள்ர்களையும் முந்திவிட்டார்.. என்ன சொல்வது...?

      Delete
  9. தலைப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.