Thursday, August 16, 2018

எவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்!




*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம்
இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்
.

*C - Compromise*

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக
தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்
தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.


*G - Genuineness*

எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு
மனப்பான்மையை விடுங்கள்.


*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.
பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.


*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக
ஆசைப்படாதீர்கள்.


*P - Patience*

சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப்
பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.


*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில்
தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின்
கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.


*W - Wound*

எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே
மற்றவர்களை நாம் நடத்துவோம்.


*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை;
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை
.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம்
ஆகும்.....


நெட்டில் படித்ததில் பிடித்தது.....

அன்புடன்
மதுரைத்தமிழன்:

டிஸ்கி :கடந்த சில மாதங்களாக நேரம் அதிகம் கிடைக்காததால் முன்பு போல் அதிகம் பதிவிட முடியவில்லை... பகிரவும் எழுதவும் எவ்வளவோ  நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன... கூடிய சீக்கிரம் பழையபடி வர முயற்சிக்கிறேன். நன்றி
16 Aug 2018

7 comments:

  1. இப்படி படம் போட்டால் எழுத்தை யார் வாசிப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. படம் போட்டது அவர் ஆசைக்கு

      Delete
  2. அருமை.

    "எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்.
    இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்...."

    என்றார் கவிஞர்.

    ReplyDelete
  3. 26 வார்த்தகள் தானா இன்னும் பல சேர்க்கமுடியுமே கொடுத்திருக்கும் படம் அழகு

    ReplyDelete
  4. திடீர்ன்னு எதுக்கு இப்ப ட்யூஷன் எடுக்குறீங்க?!

    ReplyDelete
  5. தொகுத்துத் தரப்பட்டுள்ள விதம் அருமை. அது சரி, பதிவிற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  6. வாய்ப்பே இல்ல ராசா...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.