கட்ந்த ஐம்பதாண்டுகளாக தன் உயிர் மூச்சை விடும் வரை கலைஞர் தலைவர் பதவியில் இருந்தார்.. கடந்த ஒர் ஆண்டுகளாக செயல் மற்றும் பேச்சு திறன் இழந்தும் அந்த பதவியில் இருந்தார்.. அவருக்கு அடுத்தபடியாக அவரோடு துணை நின்று கட்சியில் எந்த வித சோதனை வந்த போதும் துணை நின்று கட்சிக்கு உழைத்தவர் அன்பழகன்.
ஸ்டாலினால் பெரியப்பா என்று அழைக்கபடும் அன்பழகனால் ஒடி ஆடி உழைக்க முடியாவிட்டாலும் இன்னும் அவரால் நடக்க முடிகிறது பேச முடிகிறது .நிச்சயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் தலைவராக இருந்து ஆற்றிய செயல்பாடுகளை விட இவரால் மிக நன்றாக செயல்பட முடியும்..
பெரியப்பா அன்பழகனை தலைவராக்கி நிச்சயம் ஸ்டாலின் செயல்தலைவராக இருந்து சாணக்கியதனமாக செயல்பட்டு இருந்தால் அழகரி போன்றவர்களை சத்தமில்லாமல் அடக்கி வைத்து இருக்கலாம் அதுமட்டுமல்லாமல் பொது மக்களிடமும் ஒரு நல்ல பெயரை மிக எளிதாக தட்டி சென்று இருக்கலாம்
அன்பழகன் கட்சியில் மிக சிறப்பாக ஸ்டாலின் செயல்படுகிறார் அவருக்கு மிக சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னதாக உங்கள் வாயால் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் அப்படி உங்களை புகழ்ந்தவரை கட்சி தலைவாரக்கி அழகு பார்த்து இருந்தால் அவர் என்ன உங்களுக்கு எதிராகவா செயல்பட்டு இருப்பார்
உங்கள் தகப்பனாரோ கடந்த பல ஆண்டுகளாகவே, நீங்கள் பலமுறை வற்புறுத்தி கேட்டுக்கொண்டும், தான் இருக்கும் வரை, உங்களுக்கு தன்னுடைய தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க சம்மதிக்கவில்லை....ஆனால் பெரியப்பா அன்பழகனோ நீங்கள் அந்த பதவிக்கு தகுதியானவர் என்று பல முறை சொல்லி பாராட்டி இருக்கிறார்
திறமைவாய்ந்த பலர் இருக்க திட்டமிட்டு ஒவ்வொரு பதவியாக தலைவர் மகன் என்பதற்காகவே கொடுக்கப்பட்டு தலைவர் இறந்ததும் அந்த பதவியை அடைந்தவர்தான் நீங்கள் என்பதை தவிர உங்களிடம் மற்ற தலைவர்கள் போல வேறு என்ன திறமைகள் இருக்கிறது.
உங்களைவிட கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் எங்கோ இருக்க கலைஞரின் ஸ்பெஷல் கிட்டான உங்களுக்கு கலைஞரால் சட்டமன்ற உறுப்பினர்,மேயர்,துணை முதல்வர்,எதிர்கட்சி தலைவர்,இளைஞர் அணி செயலாளர்,பொருளாளர்,என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டவர்தான் நீங்கள்
உங்களிடம் உள்ள ஒரே திறமை கலைஞரால் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில், நீங்களாகவே மற்றவர்களை மிரட்டி ஒதுக்கி உருவாக்கிக்கொண்டது தான் செயல்தலைவர் பதவி.
இப்போது உங்களது சர்வாதிகாரத்தால் கிடைத்த பதவிதான் தலைவர் பதவியே தவிர ஜனநாயக முறைப்படி கிடைத்தது அல்ல என்பது படிக்காத பாமரணுக்கும் தெரியும்
என்ன பக்தால்ஸ் தேசிய அளவில் முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை கேலி செய்யும் நீங்கள் மாநில அளவில் முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறீர்கள் அவ்வளவுதான் வித்தியாசம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு: படித்ததில் பிடித்தது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சட்டம் போட்ட கலைஞர்...
தன் குடும்பத்தாரை
மேயர் ஆக்கினார்..
MLA ஆக்கினார்..
MP ஆக்கினார்..
மாநில அமைச்சர் ஆக்கினார்
மத்திய அமைச்சர் ஆக்கினார்..
ஆனால்,
ஒருத்தரைகூட அர்ச்சகர் ஆக்கவில்லையே ஏன்...?
கடைசி கேள்வி ஸூப்பர். ஆனால் இதற்கு பதில் கடல்லகூட கிடைக்காதாமே...
ReplyDeleteநண்பரே நான் என் உயிர் தமிழா என்று ஒரு புதிய வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன் அதற்கு வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்
ReplyDeleteவலைத்தளத்திற்கான முகவரி https://enuyirthamizha.blogspot.com/
நன்றி..
"குத்தூசி