Tuesday, August 28, 2018

@avargal unmaigal
உடன்பிறப்பே சக்தியை மறந்தது ஏனோ?

ஸ்டாலின் தலைவர் ஆனதற்கு வாழ்த்து சொல்லும் உடன்பிறப்புகளே ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு முக்கிய காரணமான திருமதி.துர்க்கா ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏனோ? #சக்தி இல்லையே சிவன் இல்லை


மதவாதிகட்சியான பாஜகவுடன் எந்தவிதமான உற்வும் திமுக கட்சி வைத்து கொள்ளாது அதே நேரத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உறவு வைத்து கொண்டால் அதை நான் எதிர்க்கமாட்டேன்  #எதிர்காலத்தில் ஸ்டாலின் இப்படியும் பேசலாம்

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா” - மு.க.ஸ்டாலின்.

நீங்க வீட்டுக்கு போது உங்களை காவி அடித்து வரவேற்க்க உங்கள் குடும்பத்தார் காத்திருப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் தலைவா

ஸ்டாலின் அவர்களே உங்களை விமர்சிப்பவர்களையாவது நம்புங்கள் ஆனால் நீங்கள் தலைவரானதும் வாழ்த்து சொல்லுறாங்களே அவங்களை மட்டும் எப்பவும் நம்ப வேண்டாம்


தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் பேசிய போது அரங்கத்தில் கையொலி அதிகம் இல்லை அது ஏன்

ஸ்டாலின் அவர்கள் ஒரு கனவு கண்டாராம் ஆனால் அந்த கனவை எழுதி வைத்த பேப்பரில் இருந்து படிக்கிறார்...தான் கண்ட கனைவை கூட எழுதி வைத்துதான் படிக்க வேண்டுமா என்ன?

மோடி எப்போதுமே புதிய இந்தியா பிறந்தது என்பார் ஸ்டாலின் சற்று மாற்றி நான் புதிதாக பிறந்து இருக்கிறேன் என்கிறார்

பேராசிரியர் அன்பழகனை  கட்சி பொதுக் குழு கூட்ட மேடையில் பார்க்கும் போது எனக்கு இறந்த கன்னுக்குட்டியின் தோலிற்குள் வைக்கோல் வைத்து மாட்டிடம் பாலை கறப்பது போலத்தான் தோன்றுகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. காலம் பதில் சொல்லும் தமிழரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.