Monday, August 13, 2018

avargal unmaigal
அதிகாரப் பசி  யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா?


கலைஞரின் மூத்த பிள்ளை அழகிரிக்கு அதிகாரப் பசி வந்திருக்கிறது அதனால் திமுகவில் பிரச்சனை வந்திருக்கிரது கலைஞர் இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் இப்படியா? இப்படி செய்வதினால் திமுகவில் கலகம் ஏற்பட்டுவிடுமே இதற்கு எல்லாம் அழகரி மட்டும்தான் காரணம் என்பது போல செய்திகள் பரப்ப படுகின்றன.

 அழகரிக்கு அதிகாரப் பசி என்றால் ஸ்டாலினுக்கு இருப்பது என்ன பசி என்று யாராவது விளக்கம் சொல்லுவார்களா? அவருக்கு அதிகாரப் பசி அதிகம் இல்லையென்றால் அதை பகிர்ந்து கொடுத்து அனைவரையும் அணைத்து செல்வதுதானே முறை

அதிகாரப்பதவிகளுக்கு வர எல்லோருமே ஆசைதான் படுகிறார்கள் படுவார்கள் அதற்கு திமுக வட்ட , மாவட்ட செயலாளர்கள் ,கவுன்சிலர்கள், இணையத்தில் கம்பு சுத்தும் உடன்பிறப்புக்கள் இப்படி பலருக்கும் தாமும் ஏதாவது ஒரு அதிகாரப்பதவிகளுக்குதான் வர ஆசைப்படுகிறார்கள். அப்படி இருக்க கலைஞரின் பிள்ளையும் கட்சி சார்பாக மத்திய அமைச்சராக இருந்தவரும் தென் மண்டலங்களை நிர்வாகித்து வெற்றியை தேடிக் கொடுத்தவருக்கும் அதிகாரப் பதவியில் வர ஆசைப்படுதில் தப்பு என்ன இருக்க முடியும்.

அழகிரி ஒன்றும் தனக்கு தலைவர் பதவிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லையே கட்சியில் பொறுப்பான பதவியைத்தானே கேட்கிறார். அதுவும் கலைஞரின் மறைவுக்கு பின் கூட்டப்படும் செயல் மட்டும் பொதுக்குழு கூட்டப்படும் சமயத்தில்தானே கேட்கிறார். இப்ப அவர் கேட்கவில்லையென்றால் அவர் எப்போதுதான் கேட்பது.

அழகிரிதான் பிரச்சனைக்கு காரணம் என்று கை நீட்டுபவர்கள் ஸ்டாலின் அழகிரிக்கு பொறுப்பை பகி
ர்ந்து அளிக்காதது பற்றி பேச மறுக்கிறார்கள் அவர் பகிர்ந்து அளித்து அரவனைத்து சென்றால் முதல்வர் சீட்டில் உட்காரலாமே...அப்படி அரவணைத்து செல்லாவிட்டால் அவர் திமுகவின் தலைவாரக மட்டுமே தன் காலத்தை கடக்கலாமே தவிர முதல்வராக கடப்பது அப்படி ஒன்றும் எளிதல்ல


அழகிரியை கலைஞர் ஒதுக்கி வைத்தார் என்று சப்பை கட்டுகிறார்கள் சிலர், அப்படியானால் வைகோவும் கலைஞரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தானே அவரை மட்டும் ஸ்டாலின் அணைக்க முற்படுவது ஏன்.?

கலைஞர் கொடுத்தா ஸ்டாலின் இப்போது அந்த பதவியில் இருக்கிறார். ஸ்டாலின் அவர் அதிகாரப்பசியினாலேதானே அந்த பதவிக்கு வந்து சேர்ந்து இருக்கிறார்.

சரி அப்படி இல்லையென்றால் ஏன் ஸ்டாலின் ஒரு தேர்தல் அதிகாரியின் முன்னிலையில் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தை கூட்டி அதில் தலைவர் பதவிக்கு போட்டி வைத்து அதன் பின் பொதுகுழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கும்படி செய்யக் கூடாது. திமுக ஜனநாயக் கட்சி என்றால் அப்படித்தானே செய்யவேண்டும் அப்படி இல்லை  குடும்ப கட்சி என்றால் குடும்பத்தினருக்கும் பகிரிந்து அளிப்பதுதானே சரி

அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவின் அடுத்த தலைமை யார் என்ற குழப்பங்களும்  போட்டிகளும் ஏற்பட்டபோது  கலைஞர் திமுகவிற்கு தலைமை ஏற்காமல் இருந்திருந்தால் கூட திமுக சில தடுமாற்றங்களுக்கு பிறகு தன்னை மீண்டும் கட்டமைத்திருக்கும். காரணம் ஏனென்றால் அன்றைய திமுகவில் இரண்டாம் மூன்றாம் நான்கம் வரிசை தலைவர்கள் நிறைய இருந்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் திமுகவின் நிலை அப்படி இல்லை மக்களின் செல்வாக்கு பெற்ற இரண்டாம் மூன்றாம் நான்காம் கட்ட தலைவர்கள் ஒரு சிலரே அவர்களை கைவிட்டு எண்ண பத்து விரகள் கூட தேவையில்லை ஐந்து விரல்கள் போதும். தற்போது திமுகவில் ஒரு பிளவு ஏற்படுமாயின் மீண்டும் திமுகவை கட்டமைக்கவோ பெரும் சிரமமாகலாம். ஒருவேளை கட்டமைக்க முடியாமல் கூட போகலாம். இப்படியான ஒரு நிலை உருவாக வேண்டுமென்றுதான் பாஜக தலைமை  எதிர்பார்த்து காய்களை நகர்த்த தொடங்கி இருக்கின்றனர்


இப்படி பட்ட சூழ்நிலையில்  உண்மையில் ஸ்டாலின் கலைஞர் கட்டி வளர்த்த கட்சியை அழிக்காமல் இருக்க  என்ன செய்ய வேண்டும்


கலைஞரின் மறைவால் கொஞ்சம் தோய்ந்து போயிருந்த திமுகவிற்கு அனுதாபத்தால் சிறிது புத்துயிர் ஏற்பட்டு இருக்கிறது. இதை அந்த கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் அந்த கட்சியின் வளர்ச்சி இருக்கிறது.. நல்லா கவனியுங்கள் தமிழக மக்களின் வளர்ச்சி அல்ல அந்த கட்சியின் வளர்ச்சி இருக்கிறது என்றுதான் நான் சொல்லி இருக்கிறேன்.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகி அடுத்த கட்ட தலைவராக வந்தாலும் இதற்கு முன் உள்ள தலைவர்கள் போல அவரும் செயல்படுவாரா என்பது இன்னும் கேள்விகுறியாகவே இருக்கிறது.

சரி ஸ்டாலின் முன்பு இருந்த மிக சிறந்த தலைவர்கள் போல பிரகாசிக்க என்ன செய்யவேண்டும் என்று பார்த்தோமானால் முதலில் அன்பழகனுக்கு ரிட்டையர்மெண்ட் கொடுத்துவிட வேண்டும். அடுத்து தன் பிள்ளை உதயநீதியை கட்சியில் முன்னேடுத்து செல்லாமல் ராசா மற்றும் கனிமொழிக்கு கட்சியின் இரண்டாம் கட்ட பதவிகளை நம்பி கொடுத்து அரவணைத்து கட்சியை நடத்தி செல்ல வேண்டும். முடிந்தால் வைகோ திருமாள்வளவன் வேல்முருகன் அனைவரையும் உள் இழுத்து கொள்ளவேண்டும் அல்லது உற்ற நட்புக்களாக்கி கொள்ளவேண்டும்.
ஸ்டாலின் திமுகவின் தலைவாரக மட்டும் இருக்க வேண்டுமானால் ஒன்று செய்ய வேண்டாம் ஆனால் முதலவ்ராக வர வேண்டுமென்றால் அரவணைத்துதான் செல்ல வேண்டும்.. வாக்குக்களை  தனது வரட்டு கெளரவத்திற்காக சிதறடித்துவிடக் கூடாது


மிக மிக முக்கியமாக கவனிக்க  வேண்டியது கட்சியின் கொள்கைகள்...திராவிடக் கொள்கைகள்  திராவிடக் கொள்கைகள்  என்று இத்து போன பல கொள்கைகளை இன்னும் பேசிக் கொண்டிருக்காமல் அதை  சற்று மாற்றி காலத்திற்க்கு ஏற்ப புதிய கொள்கைகளை தைரியமாக அறிவித்து முன்னேடுத்து செல்ல வேண்டும்

மாணவர்கள் கல்வி மற்றும் வேளைவாய்ப்பு பிரச்சனைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் கல்வி நிலையங்களில் நடக்கும் நன் கொடைகொள்ளைகளுக்கு எதிராக போராட வேண்டும்


மேலும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை கட்சிப் பணியில் ஈடுபட வைத்து அதற்கேற்ற பாசறைகள் ஏற்படுத்தி தொடர்ந்து செயல்பட வேண்டும் புதியவர்களுக்கு பொறுப்பை கொடுத்து களப்பணியில் தீவிரமாக பணி செய்ய வைக்க வேண்டும்


மதப் பிரச்சனைகளுக்கு பதிலாக மக்கள் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் இப்படியெல்லாம் செய்தால் என்றும் பேசப்படும் தலைவாரக வரலாம்...


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :இன்னும் சில நாட்களில் திமுகவின் செயல் கூட்டமும் அதன் பின் பொதுக்குழு கூட்டமும் நடை பெறவிருக்கிறது அது வரை திமுக தொண்டர்கள் வாயை மூடிக் கொண்டு அமைதி காப்பதுதான் திமுகவிற்கு நல்லது இப்போது நடப்பது அண்ணன் தம்பிகளுக்கிடையே போட்டி அதில் தொண்டர்கள் நுழைந்து பிரச்சனைகளை பெரிதாக்கி கொள்ள வேண்டாம் ஒரு வேளை இருவரும் சேர நினைத்தாலும் உங்களது அரைகுறை பேச்சுக்களால் குழப்பம் அடைந்து சேராமல் திமுக பலவினப்பட்டு போகலாம்.. ஒரு பார்வையாளனாக இருந்து அவ்வளவுதான் சொல்ல முடியும்

8 comments:

  1. சகோ அவங்களுக்கு பசிக்குதோ இல்லையோ நமக்கு வயிறு ரொம்ப பசிக்கும்...

    ReplyDelete
  2. இது எதிர்பார்த்ததுதானே?

    ஸ்டாலின் புத்திசாலியாக இருந்தால், அழகிரிக்கு மதுரையில் ஒரு நல்ல திமுக மாவட்டத் தலைவர் பதவி கொடுத்து சமாளிப்பதுதான் ராஜதந்திரம்.

    இப்போல்லாம் எனக்குள்ள புத்தி சாதூர்யம்கூட பெரிய பெரிய தலைகளுக்கு இல்லை.

    Keep your friends close but your enemies closer!

    I think azhagiri can strengthen MK-less DMK! I am serious here!

    ReplyDelete
  3. தாமரைக்கனியை வச்சு எம் ஜி ஆர் ஓட்டலையா என்ன?!

    லைஞர் வேணா வீட்டோ கோலியோனே வா இருந்து இருக்கலாம்.

    ஸ்டாலின் மைக்கேல் கோலியேனுயும் இல்லை, அழகிரி சன்னி கோலியேனேயும் இல்லை! எவன் எவனையோ நம்புறதுக்கு சொந்த அண்ணனை நம்பலாம் ஸ்டாலின்.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்லி இருக்கும் நிறைய விஷயங்களில் நியாயம் இருக்கிறது.

    ReplyDelete
  5. இது எதிர் பார்த்ததுதானே... இதில் அவசியமின்றி பாமரன் தலை வீழக்கூடாது...

    ReplyDelete
  6. இதுவரை திருடியது போதாதா

    ReplyDelete
  7. அதிகாரபசி வாய்ப்புக்கு ஏங்கி இருக்கிறது

    ReplyDelete
  8. தி மு கா போனா பிஜேபியா? வாய்ப்பு இல்லவே இல்லை,

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.