Tuesday, August 21, 2018

Adult Warning: Picture is Kamakhya Devi. NSFW
பெண்கள் + மாதவிடாய் + ரத்தம் என்பதை ஏதோ தீண்டதகாத விஷயமாக எச்.ராஜா கருதுகிறார்

மனுஷ்யபுத்திரன் / எச்.ராஜா விவாதத்தில் இதுவரை எதுவுமே எழுதவில்லை. எச். ராஜா ஒன்றினை எதிர்க்கிறார் என்றால், அது உண்மையிலேயே நல்லதாகவும், நிறைவானதாகவும் தான் இருக்கும் என்பது வரலாறு. அதனால், மனுஷிற்கு தார்மீக ஆதரவு என்றும் உண்டு.

ஆனால், பிரச்சனை மனுஷின் கவிதையில் கிடையாது. எச்.ராஜாவின் கோவமென்பது இரண்டு. ஒன்று, மரபுகளை மனுஷ் மீறி விட்டார் என்பது. இன்னொன்று, பெண்களின் மாதவிலக்கில் வெளியேறும் ரத்தமாய் உருவகித்தது.

பெண்களை சபரிமலைக்குள் வர அனுமதித்ததால் தான் பெருவெள்ளம் சூழ்ந்தது என்கிற முட்டாள்தனத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தது தான் அந்த கவிதை. சரி ஒரு வாதத்திற்கு மரபுகளை மீறக் கூடாது என்று வைத்துக் கொள்வோம்.

‘முத்தலாக்’ விவகாரத்தில் ஹிந்துத்துவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று உற்று கவனியுங்கள். பிரதமர் மோடி, இஸ்லாமிய பெண்களுக்கு விடுதலை வாங்கி தரும் சட்டம் என்று பேசுகிறார். ஹிந்துத்துவர்கள், இஸ்லாம், பெண்களை அடிமைப்படுத்தி இருக்கிறது, அந்த மதரீதியான தளையிலிருந்து ‘முத்தலாக்’ சட்டம் அவர்களை வெளியேற்றி, சுதந்திரமாக நடமாட விட்டு இருக்கிறது etc etc. மரபுகளை மீறுதல் தவறு என்றால், ஹிந்துத்துவர்கள் ஏன் இன்னொரு மத மரபாக கருதப் படும் ஒன்றினை சட்டம் போட்டு தடுக்க வேண்டும்? அதை சமூகநீதி என்று கொண்டாட வேண்டும்?

விஷயம் சிம்பிள். ஏனென்றால் அந்த பக்கத்தில் இருப்பது இஸ்லாம். ஆனால், இது ஹிந்து கோவில். அங்கே மீறலாம். இங்கே மீறப் பட கூடாது. அந்த தீர்ப்பினை வழங்கிய நீதிபதி உடல்ரீதியான சிக்கல்களால், நாளை இறந்தாலும் கூட உடனே இவர்கள் ஐயப்பன் பழிவாங்கி விட்டார் என்று, ஐயப்பனை கூட மூன்றாம் தர மசாலா ஹீரோ கணக்காய் இறக்கி விடுவார்கள். ஐயப்பனுக்கு கோவம் வந்து பழி வாங்க மழையை வரவழைத்தார் என்று தாங்கள் நம்பும் கடவுளரின் தரத்தினை தாழ்த்தியது கூட அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அதை சுட்டிக் காட்டும் லிபரல் ஆட்கள் மீது தான் பிரச்சனை. ஆக மரபினை மீறல் என்பதெல்லாம் சும்மா அல்வா. மரபு, மண்ணாங்கட்டி, புண்ணாக்கு, புடலங்காய் என்றும் எதுவுமே இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தது. மரபினை காரணம் காட்டி, மனுஷினைப் போட்டு தாக்கி விட்டார்கள். End of story.

அடுத்தது, பெண்கள் + மாதவிடாய் + ரத்தம் என்பதை ஏதோ தீண்டதகாத விஷயமாக எச்.ராஜா கருதுகிறார். சக்தி பீடங்கள் என்று இந்தியா முழுக்க 51 இடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான இடம் - காமக்யா தேவி. அசாமில் கவுஹாத்தி தாண்டி உள்ளே போனால் மலைக்கு பக்கத்தில் வீற்றிருக்கும் அம்மன்/தேவி பீடமது.

அந்த இடத்தின் சிறப்பே மாதவிடாய் காலமும், ரத்தமும் தான். அது தான் அங்கே இறைவழிபாடு. அந்த கோவிலின் விசேஷமே வருடத்தில் மூன்று நாட்கள் தேவிக்கு மாதவிடாய் வரும். அந்த மூன்று நாட்கள் கழித்து நான்காவது நாள் திருவிழா கணக்காய் கொண்டாடப் படும். மூன்று நாளும் கோவில் கதவு சாத்தப்படும். அந்த நான்கு நாளில் பிரம்மபுத்ரா சிவப்பாய் மாறும் என்பது ஐதீகம். மாதவிடாய் ரத்தமும் கூட இந்து தத்துவ மரபில் வழிபாடும், ஆன்மிக தரிசனமும் தான். இதுவும் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது.

Problem is, எச். ராஜா மாதிரியான ஆட்களுக்கு சட்டமும் தெரியாது. இலக்கியமும் தெரியாது. இந்து தர்மமும் தெரியாது. பெண்களை மதிக்கவும் தெரியாது.

எல்லா ஊர்களிலும் இருக்கக் கூடிய தெருக்களில் ஒரு தெருநாய் இருக்கும். தான் எதற்கு வாழ்கிறோம் என்று அதற்கு தெரியாது. ஆனாலும், அதற்கு தோன்றும் போதெல்லாம் யாரையாவது பார்த்து குரைத்துக் கொண்டே இருக்கும். கல் எடுத்து அடித்தவுடன் ஒடி விடும். திரும்பவும் மறுநாள் வந்து குரைக்கும். அதன் சுபாவம் அது தான்.

தெருநாய்களை காக்க புளு கிராஸ் இருக்கிறது. பாவம் அட்மின்கள்!!

#StandwithManushyaputhiran

PS: ’முத்தலாக்’கினை நான் ஆதரிக்கவில்லை. மரபு என்கிற பெயரில் ஒன்று சேரும் கூட்டம் தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றினை ஒரங்கட்டும். இதில் காவி, பச்சை அடிப்படைவாதிகளில் ஒரு மாற்றமும் கிடையாது

இந்த பதிவை எழுதி பேஸ்புக்கில் பதிவிட்டவர் நரேயின் ராஜகோபாலன்

மிக தெளிவான கருத்துக்களாக என் மனதிற்கு பட்டதால் இதை இங்கே மறுபதிவு செய்கிறேன்

இது போன்ற கருத்துக்கள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது  வாழ்த்துக்கள் நரேயின் ராஜகோபாலன்



அன்புடன்
மதுரைத்தமிழன்


21 Aug 2018

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.