Wednesday, August 15, 2018

@avargal unmaigal
அமெரிக்காவின் வழி காட்டுதல் படி பிரதமர் மோடி சுதந்திர தின விழா கொண்டாடினார்

என்னடா அமெரிக்காவின் வழி காட்டுதல்படி சுதந்திர விழாவா என்று கேட்கலாம்....ஆமாம் அமெரிக்க சொல்வதற்கெல்லாம் தலையாட்டி செய்தால் வேற எப்படி சொல்வதாம்..

அப்படி என்ன அமெரிக்க சொன்னதை இந்தியா கேட்கிறது என்பவர்களுக்கு...

ஈரானிடம் இருந்து கச்சா எண்னையை வாங்கி கொள்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் உத்தரவு இட்டதும்...


நீங்கள் யார் எங்களுக்கு உத்தரவு இட......நீங்கள் என்ன ஐ,நா சபை அதிபரா உலக நாடுகளின் நலன் கருதி வெளியிட....எங்கள் நாட்டை கட்டுபடுத்த நீங்கள் யார்......என்று தைரியமாக கேட்பதைவிட்டுவிட்டு
avargal unmaigal

நீங்கள் போனில் கூப்பிட்டு சொன்னால் போதாதா..இப்படி பொதுவில் சொன்னால்தான் நாங்கள் கேட்போமா என்ன என்பது மாதிரி மோடி அடிபணிந்து இருக்கிறார்.

மோடி எதிர்த்து இருந்தால்  உலக நாடுகள் என்ன நம்மீது பொருளாதார தடையா விதிக்கும் ?இல்லையே என்ன அமெரிக்க வேண்டுமானால் பொருளாதார தடை விதித்து இருக்கும்.. அதை சமாளிக்க முடியாதா என்ன?

avargal unmaigal

1998 அணுகுண்டு சோதனை நடத்தினால் நிச்சயம் அமெரிக்கா மட்டுமல்ல அதனோடு சேர்ந்த உலக நாடுகள் பல பொருளாதார தடை விதிக்கும் என்று தெரிந்தும் மிக தைரியமாக திரு. வாஜ்பாய் செய்து காண்பிக்க வில்லையா? அதன் பின் நம்மீது சுமத்தபட்ட பொருளாதார தடைகளையும் எதிர் கொண்டு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லையா என்ன?

வாஜ்பாய்க்கு நெஞ்சு அளவி 56 இஞ்சு அல்ல ஆனால் 56  இஞ்சு இருக்கும் மோடி அஞ்சுவது ஏன்?

72 வது சுதந்திர தினவிழாவில்  வீரரான வாஜ்பாய் உடல் நலம் பெற்ற வாழ்த்துவதுதான் இந்தியாவிற்கும் அவருக்கும் செய்யும் மேன்மை என நினைக்கிறேன்


வாழ்க வாஜ்பாய் வளர்க இந்தியா


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மறுக்க முடியாத உண்மைகள்

    ReplyDelete
  2. என்ன கொடும சார் இது...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.