Sunday, February 14, 2016






இணையத்தில் கலாய்க்கப்படும் திமுகவின் நிலை மிக பரிதாபமாகத்தான் இருக்கிறது

மக்கள்  நலக் கூட்டணி நம்பிக்கையோடு ஒட்டப் பந்தயத்தில் இறங்கி ஒட ஆரம்பித்துவிட்டது அது போலத்தான் அதிமுகவும். ஆனால் திமுகதான் இன்னும் நொண்டி கொண்டு  துணைக்கு ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறது.  எது எப்படியோ இந்த வாரத்தில் இணையத்தில் கலாய்க்கப்படும் திமுகவின் நிலை மிகமிக பரிதாபமாகத்தான் இருக்கிறது. எனக்கு நேரம் இல்லாததால் எனது சில நையாண்டி கருத்துகளை சொல்லிவிட்டு இணையத்தில் நான் படித்த கருத்துகளை இங்கே பதிகிறேன்.

@ மதுரைத்தமிழன்
யாருமே திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்று இருந்த நிலமையை மாற்றி காங்கிரஸை தன் கூட்டணியில் இணைத்துதான் கலைஞரின் சாணக்கியதனம்


@மதுரைத்தமிழன்//
//தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து பேச மு.க அழகிரிக்கு உரிமை இல்லை . ஊடகங்கள் அழகிரியிடம் திமுக குறித்து கருத்து கேட்பது அவசியமற்றது : தி.மு.க//
அழகரியின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் கலைஞர் நாளை தேர்தலில் ஜெயித்து வந்தால் மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்க மாட்டாரா?

@மதுரைத்தமிழன்
கட்சிகாரர்கள் அழகிரியின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்ல திமுககட்சி தலைமை கூடி மிக
பதட்டத்துடன் அறிக்கைவிடுகிறது. ஆமாம் அழகிரியைத்தான் போன தேர்தலில் கழட்டிவிட்டுவிட்டார்களே அதோடமட்டுமில்லாமல் அவர் எனது மகனே இல்லை என்று சொல்லிய பின் இந்த அறிக்கை அவசியமா என்ன? ஏன் இந்த பயம் & பதட்டம்

--------------------------------------------

வால்டர்  
கடைசியா பொண்ணு கெடைக்கலைனு  பொணத்துக்கே தாலி கட்டிட்டாய்ங்க போல.... #திமுக _ காங்கிரஷ் கூட்டணி

லாரிக்காரன்
உள்ளூர நடுங்குனாலும் வெளிய கெத்தா இருக்குறவன் தான் அரசியல்வாதி #கலைஞர் ஏன் இவ்ளோ பயந்துபோயி காங்கிரஸ் பின்னாடி ஒளிஞ்சார்ன்னு தெர்ல

Ramar...உசிலம்பட்டி
எந்த கூட்டணி அமைத்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது  மு.க.அழகிரி #திமுக செயிக்க முடியாதுனு சொல்லுங்க சரி அதிமுக வீழ்த்த முடியாதுனா எப்படி

தெனாலி
திருடனும் திருடனும் கூட்டணி வெச்சதுக்கு எதுக்கு சந்தோஷப்படணும்...இதுக்கு நீங்க வெக்கபடணும் சென்றாயன் #திமுக காங்கிரஸ்

Joe Selva
இலங்கை தமிழர்கள்விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் இழைத்தது #கருணாநிதி
காங்கிரஸ் உடன் கூட்டணி தொடரும் #திமுக
#திமுக_காங்கிரஸ்_திருட்டுக்கூட்டணி


நாட்டுப்புறத்தான்
ஒருவேள MP தேர்தலில் காங்கிரஸை கூட்டணி சேர்ப்பது பலன்தரலாம்,
MLA தேர்தலில் டோடல் வேஸ்ட்!
தலீவருக்கு சாணக்கியத்தனம் கம்மியாயிட்டு வருது போல!

ஆழ்வார்க்கடியான்
கூடா நட்புன்னு சொன்னீங்களே, அப்போ அத்தனையும் பொய்யா கோப்பால், பொய்யா #திமுக காங்கிரஸ் கூட்டணி

KR Vijayan  
ஆண்டு வரும் ஊழல் கட்சியை அகற்றணுமாம்
காங்கிரஸ்- திமுக கூட்டணியாம்
காமெடியா இல்ல.
Velumani Thuyavan
திமுக - காங்கிரஸ் கூட்டு!
அப்பாடா! திராவிடப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்துவிட்டார்கள்!
அய்யா வீரமணி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்! எப்படியோ பாஜகவுடன் சேராததால் நிம்மதியும் அடைந்திருப்பார்!
இளநி

கோபாலபுரம்ன்றதால சால்வையோட முடிஞ்சிருச்சி குலாம்நபி ஆசாத் கார்டனுக்கு கூட்டணி பேசபோய்ருந்தா  நெத்தில மம்மி Bandஅ மாட்டி அனுப்பிவிட்ருப்பாங்க
 
ராதா
திமுக கூட்டணிக்கு தேமுதிகவை காங்கிரஸ் அழைத்து வரும். கூட்டணிக்கு வர கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தடை எதுவும் இல்லை

Mu Varatharasan
ஆனது ஆகிபோச்சு எடுத்து அடக்கம் பன்ற வேலய பாருங்கையா நேரமாகுதில்ல
திமுக காங்கிரஸ் கூட்டணி

ஆழ்வார்க்கடியான்
கருணாநிதியும், குஷ்புவும் இப்போ ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பாங்கல்ல.. பாவம் ஸ்டாலின் #திமுக காங்கிரஸ் கூட்டணி

நத்தம் விஸ்வநாதன் .
 கட்சி நடத்த தகுதி இல்லாத விஜயகாந்துடன் கூட்டணிக்காக கெஞ்சுகிறது #திமுக -

லா ரி க் கா ர ன்
திமுக வின் வீழ்ச்சி கலைஞரால் எழுதப்படவேண்டும் என விதி !!! #ஸ்டாலின் பாவம் !!

ஞானக்குத்து
பெரியவங்க ஏற்றுக்கொண்டதால் நடக்கும் ஏற்பாட்டுத் திருமணத்தில் தம்பதிகளுக்கு இருக்கும் அத்தனை சிக்கலும் #ஸ்டாலின்/#இளங்கோவன் இருவருக்குமுண்டு

gomathy "தி.மு.க _ காங்கிரஸ் கூட்டணி. #ஸ்டாலின்
நீங்க இனி வயசுக்கு வந்தா என்ன?? வரலைனா என்ன???  :-\

ThaaruMaaru Arul

தேர்தலில் கலைஞர் முன்னிறுத்தப்படுவார் #ஸ்டாலின்
முன் நிறுத்தலாம் முடியாது அப்டி ஒரு ஓரமா உட்கார வைக்கதான் முடியும்😜

PuliArason
ஒரு பதில் கதையை #ஸ்டாலின் சொல்லியிருந்தால் அவர் தலைவர்
இஸ்கூல் பையன் மாதிரி அப்பா அப்பா நீங்க கொஞ்சம் அவங்கள ட்ரோல் பண்ணுங்களேன் ப்ளீஸ்"னு
  
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இன்னும் பல கருத்துகள் மிக மட்டரமான நிலையில் பலரும் எழுதி இருக்கிறார்கள் அதை அநாகரிகம் கருதி இங்கு வெளியிடவில்லை. முடிந்த வரையில் வடிகட்டிதான்  இங்கு பதிந்து இருக்கிறேன்

3 comments:

  1. ஏகப்பட்ட கருத்துகள்! "நல்லவேளை, மம்மி கிட்ட போயிருந்தா நெத்தியில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி இருப்பாங்க" என்னும் கருத்து சிரிக்க வைத்தது! செய்தாலும் செய்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. மம்மியை ஆதரிப்பவர்களுக்கு நெற்றியில் ஸ்டிக்கரும் எதிர்ப்பவர்களுக்கு நெற்றியில் காசு வைத்துவிடும் நிலமைதான் தமிழகத்தில் இருக்கிறது

      Delete
  2. எலெக்ஷன் நேரம்.... அடுப்புல இலுப்புச்சட்டியை வச்சுட்டீங்க. இனிமே கிடைக்கறவரையெல்லாம் வறுக்க வேண்டியதுதானே....

    உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம். இந்தத் தடவை எலெக்ஷன்ல கைல மைக்குப் பதிலாக, அதிமுக சின்னம்தான் மையில பதிச்சு வைச்சுவிடப்போறாங்க.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.