Wednesday, February 13, 2013




 

காதலை களங்கப்படுத்தும் இந்த கால இளைய சமுதாயம்


உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுமே அன்புக்காகவும் பாசத்திற்க்காகவும் ஏங்குகின்றன. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

இந்த அன்புக்குதான் எத்தனை பெயர்கள் காதல், பாசம், நேசம், பற்று, மரியாதை, பக்தி,  என்று அடிக்கி கொண்டே போகலாம். பெற்றோர் குழந்தையிடம் காட்டும் அன்பு பாசமாகவும், தோழர்களிடம் காட்டுவது நேச நட்பாகவும், மகான்களிடமும், ஆசிரியர்களிடமும் கொள்வது மரியாதையாகவும், இறைவனிடம் கொண்டது பக்தியாகவும், காதல் காதலியிடம் கொண்ட அன்பே காதலாகவும் பேசப்படுகிறது.

ஆனால் இந்தகாலத்தில் இப்படிபட்ட காதலை திரைப்படங்களும், மீடியாக்களும் கொச்சைப்படுத்துகின்றன. வணிக ஸ்தாபனங்கள் இதனை பொருளீட்டும் கருவியாக இந்த போலிக் காதலை வளர்க்கின்றன. இக்கால இளைஞர்களும் இதனை ஒரு பொழுதுபோக்காகவும், உடல் இச்சையின் வடிகாலாகவும் கருதி காதலை களங்கப்படுத்தி வருகின்றனர். இதனை இந்த கால நாகரிக சமுதாயம்  இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் காதலர்களை அல்ல காதலையே குறை கூறி வருகின்றனர்

இரண்டு அன்பு உள்ளங்களின் அந்தரங்கமாக இருக்க வேண்டியது இந்த காதல்.ஆனால் இதன் பேரால் வீதிகளிலும், விடுதிகளிலும் குடித்துவிட்டு கூத்தாடுவதை யாரும் ஏற்க முடியாது. இன்றைய திரைப்படங்களும், தொலைக்காட்சி முதலிய ஊடகங்களும் இந்த எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி இந்த ஆபாசத்தை வளர்க்கின்றன.

இப்போது காதல் என்று ஊடகங்களில் சித்தரிக்கப்படுபவை எல்லாம் ஒரு மனநோயாளியின் வக்கிரப் பார்வைகள்தானே? லவ் யூ சொல்லச் சொல்லி ஒரு பெண்ணை வழிமறித்து இம்சிப்பதும், உடன்படாத பெண்ணின் முகத்தில் திராவகம் ஊற்றி அவளைச் சிதைப்பதும் காமக் கொடூரனின் கயமைச் செயல் இல்லையா? இதுதான் காதலா?  குடித்துவிட்டு ஆடுகிற ஆட்டங்கள் காதலை வளர்க்குமா? எல்லா நல்ல நோக்கங்களும் இந்த அறிவியல் யுகத்தில் கொச்சைப்படுத்தப்படுவது கொடுமையிலும் கொடுமையே.

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி மற்றும் மீடியாக்களிலும் காதலைக் கைதட்டி வரவேற்கிற நம் சமுதாயம், அதுவே தங்கள் வீடுகளில் வந்துவிட்டால்  அய்யோ குய்யோ என்று கூப்பாடு போடுகின்றனர். இந்த இரட்டை நிலை எப்படி வந்தது? காதல் என்ற பெயரால் நடக்கும் கூத்துகளும் ஆபாச ஆட்டங்களும்தான் உண்மையான காதலர்களையும் கேலிக்குரியதாக்கி ஓரம் கட்டுகிறது.

மேலைநாட்டினிலும் நல்ல காதல் உண்டு, கள்ளக் காதலும் உண்டு  ப்ரெண்ட்ஸ் & பெனிபிட் என்ற சொல்லப்படும் நட்பும் உண்டு.
இந்த  ப்ரெண்ட்ஸ் & பெனிபிட்டைதான் இந்தியர்கள் காதல் என்று சொல்லி நல்ல காதலை கொச்சைப்படுத்தி ,களங்கப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு காரணம் இந்த இந்திய இளைய சமுதாயம் புத்தகத்தை மட்டும் மக்கர் பண்ணி (புரிந்து அல்ல) படித்து வருவதும் மேலை நாட்டைப் பற்றி அறைகுறையாக தெரிந்து கொண்டு அதை அறை குறையாக காப்பி அடித்து வாழ்வதும் சமுக அறிவு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் ஆகும்( இதை கடந்த வாரம் நீயா நானா பார்த்தவர்கள் அனைவரும் இந்த கால இளைய சமுகத்தினர் வடிகட்டிய முட்டாள்கள் என்பதை மறுக்க மாட்டார்கள். இதில் சில இளைஞர்கள் இளைஞிகள் விதிவிலக்கு )

இதற்கு நாம் இளைஞர்களை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது மேலை நாட்டு மோகத்தில் மயங்கிய பெற்றோர்கள் தரும் ஆதரவையும் நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது மிக அவசியம்

இந்த கால இளைய சமுதாயத்திற்கு விடுவிக்கும் வேண்டுகோள் ப்ரெண்ட்ஸ் & பெனிபிட்டை என்பதை காதல் என்று களங்கப்படுத்தாதீர்கள் என்பதுதான்



உண்மையான காதலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையான காதல் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்அதன் பின் நான் சொல்ல வரும் உண்மையான காதல் எது என்று தெரியவரும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : விரைவில் என் மனைவி என்னிடம் மயங்கிய விதம் பற்றிய  எனது உண்மை காதல் கதை இங்கு பதிவாக வெளியிடப்படும் ( அது யாருப்பா மனைவியை ஏமாத்தின விதம் என்று சவுண்ட விடுறது...உஷ்ஷ் ...) Bombay படத்தின் கதைபோலத்தான் எங்கள் கதை

9 comments:

  1. தங்கள் கருத்து முற்றிலும்உண்மை .
    சீக்கிரம் சீக்கிரம். உங்க காதல் கதையை(உண்மையை) அறிய காத்திருக்கிறோம் (இன்னொருத்தர் கதையை தெரிஞ்சுக்கனும்னா என்னா ஆர்வம்.)

    ReplyDelete
  2. தெளிவாக எடுத்து விளக்கியுள்ளீர் மாப்ளே....

    ReplyDelete
  3. ஆத்தி .......நல்ல விளக்கம்

    ReplyDelete
  4. friends with benefit - good word thanks

    ReplyDelete
  5. கல்யாணத்திற்கு முன் இளம் வயது காதல் காதலே அல்ல அதன் பெயர் பருவக்கோளாறு அதைகாதல் என்று நினைத்து ஏமாந்தவர்கள் தன் உண்மை வாழ்க்கை தொலைத்து விட்டு போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் காதல் என்பது சுத்தப்பொய் அது ஒரு timepass

    ReplyDelete
  6. பதிவில் நிறைய உண்மை விஷயங்களை சொன்னீங்க ஆனா கடைசியா ஒன்று சொல்லிருக்கீங்க பாருங்க அது தான் சூப்பர் நானும் மற்றும் ஒருBombay-2 கதை கேட்க ஆவலோடு உள்ளேன் எப்போ சொல்ல போறீங்க

    ReplyDelete
  7. கருத்துகள் அனைத்தும் உண்மை..மேலை நாட்டின் தவறான புரிதலும்,காதல் எது காமம் எது என்று இனங்கொல்ல முடியாத நிலையும் தான் காரணம் .சொல்லப்போனால் மேலை நாட்டின் கலாச்சாரத்தை விமர்சிக்கும் அளவிற்கு கூட தகுதி இல்லாத ஒரு வாழ்க்கையை தான் இன்றைய இளைய சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.