Wednesday, February 13, 2013





பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த வலைத்தளம்  பல்சுவை செய்திகளை தாங்கி வருகிறது அதனால் இங்கு சில சமயங்களில் அரசியல் சார்ந்த பதிவுகளும் வருகிறது .இங்கு நடுநிலைமையோடு பதிவுகள் வரும் அதனால் அதை ஒதுக்கிவிடாமல் படியுங்கள் கவிதை கதைகளை மட்டுமே படிப்பதுதான் பெண்களின் வழக்கம் என்று சமுக பிரச்சனைகளை அறியாமல் இருந்து வீடாதீர்கள் எனபதுதான் எனது வேண்டு கோள்.  தைரியமாக உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதியுங்கள் .நன்றி

இவ்வளவு வெளியே தெரிந்தும் இந்த அரசுக்கு நடவடிக்கை எடுக்க தைரியம் உண்டா?

<<<<<<<<<< 

Subject:    

FWD: அமைச்சர் வீட்டு கல்யாண வசூல்கள் மற்றும் மொய் கணக்கு
Date:  xxxxxxxxx, xx Feb 2013 xx:xx
From: "xxxxxxxxxx"
To:   xxxxxxxxxxx@gmail.com, cmcell@tn.gov.in, dvac@tn.gov.in

அன்புள்ள xxxxxxxxxx,

நலம். நலமறிய ஆவல். நான் உங்கள் தீவிர வாசகன். எங்கள் ஆபீசில் உங்களுக்கு நிறைய வாசகர்கள் உண்டு. உங்கள் இணையதளத்தை பார்க்காத நாள் இருக்காது. நான் சேலத்தை சேர்ந்த மிகப்பெரிய தனியார் சொகுசு பஸ் கம்பெனியில் வேலை செய்கிறேன். தற்காலிகமாக ஈரோட்டில் வேலை நிமிர்த்தமாக உள்ளேன். இதற்கு மேல் என் முழு விவரம் வேண்டாம். எளிதாக என்னை அடையாளம் கண்டு பிடித்து வேலையை விட்டு அனுப்பி விடுவார்கள்.

என்னுடைய சக ஊழியர் ஒருவரின் வேலையே, அரசாங்க உயர் அதிகாரிகளை கவனித்து கொள்வது, அரசியல்வாதிகளின் தேவைகளை கவனித்து கொள்வதுதான். அவர் என்னிடம் நிறைய கதை சொல்வார். எப்படி நம் அரசியல்வாதிகள் கறக்கிறார்கள் என விலாவரியாக சொல்வார். சமீபத்தில் நடக்கும் அமைச்சர் வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளில் நடந்த வசூலை கேட்டால் நம்ப மாட்டீர்கள். அமைச்சர் கே.வி. நாமலிங்கம் வீட்டு திருமணம் நடக்கிறது. அதற்கு 200 பஸ்கள் ரெடியாகி கொண்டுள்ளன. இதில் நிறைய சொகுசு பஸ்கள். இந்த கல்யாண செலவை ஏற்று கொள்வது பொதுப்பணி துறை காண்டரக்டர்கள் மற்றும் எங்கள் பஸ் முதலாளிகள் போன்றவர்கள்தான். இந்த கல்யாணத்துக்கு ஆகும் கிட்டத்தட்ட 5 கோடி செலவும் மந்திரி பாக்கெட்டில் இருந்து வரவில்லை. இது தவிர கணிசமான மொய் எழுத வேண்டும். இந்த கல்யாணம் சென்னையில் பிப்ரவரி 15 ம் தேதி நடக்கவுள்ளது. இதே போல், சமீபத்தில் மந்திரி எடப்பாடி பலனி ஸோமி அண்ணன் மகளுக்கு நடந்த கல்யாணத்தில் கணிசமான செலவு ஹைவேய்ஸ் காண்டரக்டர்கள் செலவு செய்தது. இது சில கோடியை தாண்டும். கொஞ்ச நாள் முன் திருப்பூரில் அமைச்சர் ஆஆஆ நொந்தன் மகள் பூப்பு நன்னீராட்டு விழாவுக்கு கிடைத்த மொய் பணத்தில் அமைச்சர் ஒரு பஸ் வாங்கி விட்டுள்ளார். இதைப்பார்த்து திருப்பூர் மேயர் Visa லாட்சி வீட்டு நிகழ்ச்சியிலும் இதே வசூல் கதைதான். கொஞ்ச நாள் முன் அமைச்சர் கோல்டுமணி வீட்டு திருமணத்துக்கும் சரியான வசூல். சில கோடிகளை தாண்டும். இது தவிர போக்குவரத்து அமைச்சர் நொந்தில் வாலாஜிக்கு பஸ் கட்டணம் ஏற்ற சில கோடி போய் சேர்ந்தது. என் சக ஊழியர் சொன்ன கணிப்பை பார்த்தால் அமைச்சர்கள் வீட்டு கல்யாண, மற்ற நிகழ்ச்சிக்கு செலவுக்கு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டில் 25 கோடி வசூல் ஆகி இருக்கும். இது வெறும் கல்யாணம் காத்து குத்து போன்ற நிகழ்சிகளுக்கு ஆன வசூல். பொதுப்பணி துறை காண்ட்ராக்டர்கள், ஹைவேய்ஸ் காண்டரக்டர்கள், பஸ் முதலாளிகள் கிட்ட இவ்வளவு வசூல் நடந்துள்ளது.

ஒரு பக்கம் முதலமைச்சர் பஸ் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டு அரசாங்கத்தில் பணம் இல்லை என்கிறார். பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை என்று பாதிக்கபடுவது நம் போன்று நடுத்தர குடும்பங்கள்தான். ஆனால் மறு பக்கம் மந்திரிகள் கோடி கோடியாக வசூல் நடத்துகிறார்கள். சேலம் முதல் கோவை வரை உள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி முடங்கி தனியார் பஸ்ஸில் வரும் கூட்டம் 30-40% சதவீதம் குறைந்துள்ளது. நடுத்தர மக்கள் கையில் காசில்லை என்றால் தனியார் பஸ்சுக்கு வர மாட்டார்கள். மக்கள் காசு இல்லை என்றால் எங்களுக்குத்தான் முதல் அறிகுறி தெரியும். எங்கள் முதலாளி அடிக்கடி சொல்வார். மக்கள் எவ்வளவு கஷ்டபட்டாலும் அமைச்சர்கள் நடத்தும் வசூல் குறையவில்லை. திமுக ஆட்சியில் கூட இவ்வளவு வசூல் நடக்கவில்லை. திமுக சார்பில் பெரிய அமைச்சர்கள் வந்தால் சகல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தயா  மாறன் பதவியில் இருக்கும் வரை சேலம், ஈரோடு, கோவை வந்தால் நாங்கள்தான் பி.எம்.டபுள்யு கார் ஏற்பாடு செய்வோம். அவர் மாமனார் ஊட்டியில் இருப்பதால் அடிக்கடி ஊட்டி வருவார். இந்த ஆட்சி மீது இருக்கற வெறுப்பில் பொதுப்பணித்துறை காண்டரக்டர்கள், ஹைவேய்ஸ் காண்டரக்டர்கள், பஸ் முதலாளிகள் வரும் தேர்தலில் திமுகவுக்கு நிறைய நிதி கொடுத்து அதிமுகவை தோற்கடிக்க தயாராகி விட்டனர்.

முதலமைச்சர் அம்மா காதுக்கு இதெல்லாம் எவ்வளவு போய் சேருகிறது என்று தெரியவில்லை. டி.ஜி.பி ராமானுஜத்துக்கு சொந்த ஊர் சேலம்தான். ஆனால் என் நண்பர் சொன்ன வகையில் மனுஷன் ஒரு சலுகையும் வாங்க மாட்டாராம். அவ்வளவு கை சுத்தம் என்று கேள்விபட்டுள்ளேன். அப்புறம் ஏன் போலீஸ் லஞ்ச ஒழிப்பு துறை இதெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையா?

பத்திரிக்கைகள்தான் உண்மைகளை கொண்டு வர வேண்டும். இதை தீவிர விசாரித்து ஒரு கட்டுரை எழுதுங்களேன். நிறைய உண்மை வெளி வரும்.

உண்மையுள்ள,
XXXXXXX வாசகன்

=====================================

எனது தளத்தை பார்வையிடும் வாசகர் எனக்கு அனுப்பிய மெயிலை  அவரின் வேண்டுகோள்படி உங்களின் பார்வைக்காக வைக்கிறேன்.அவர் சி.எம் செல்லுக்கும் இந்த மெயிலை அனுப்பி உள்ளார். அதை பார்த்தாவது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா
?

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு தமிழர் நாட்டின் நலன் கருதி சி. எம் செல்லுக்கு அனுப்பிய பின்னும் நடவடிக்கை எடுக்கபடாதால் எனது தளத்தில் வந்தாவது தலைவர்களை அடையாதா என்ற எண்ணத்தில் அமெரிக்காவில் வசிக்கும் எனக்கு அனுப்பியதால் அதை இங்கு வெளியிடுகிறேன்.

இதுமாதிரி பல மெயில்கள் அரசியல் சார்ந்த மெயில்கள் எனக்கு வருகின்றன. அதையும் ஓன்றன் பின் ஒன்றாக வெளியிடுகிறேன்.
அடுத்த கடிதம் நாட்டுபற்று மிக்க பா.. உறுப்பினர்கள் சார்பாக எனக்கு அனுப்பபட்ட மெயில்.


இந்த மெயில்களில் வரும் செய்திகளுக்கு அவர்கள்....உண்மைகள் வலைத்தளம் பொறுப்பாகாது.

தகவல்கள் தவறு என்று சம்பந்தபட்டவர்கள் ஆதாரப்பூர்வமாகவும் அவர்களே நேரடியாக அவர்களது ஆபிஸியல் இமெயில் மூலம் அனுப்பினால் பதிவு நீக்கப்படும்.

உங்கள் படைப்புகள் எனது  தளத்தில் வெளியிட விரும்பினால் எனக்கு இமெயில் அனுப்பவும். அது நல்லதாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும்.  வலைதளம் தொடங்காமல் எனது தளத்திற்கு வரும் வாசகர்கள் கூட அனுப்பலாம். நன்றி

14 comments:

  1. வணக்கம் சகோ,
    நல்ல பணி!!.

    நம்மை ஆள்பவர்கள் விமர்சனங்களை விரும்புவது இல்லை. ஆள்பவர்கள் செய்யும் செயல்கள் அதன் மூலம் ஓட்டு கிடைக்குமா என்பது தவிர்த்து எந்த காரணமும் இருக்காது!!.


    நாம் என்னவோ நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம் என நினைத்தால், முதலாளிகள் காசு கொடுத்து ஜெயிக்க வைக்க முயற்சி!!!!!!

    வாழ்க ஜனநாயகம்!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. சார்வாகன் உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி

      Delete
  2. என்ன நடக்குது இங்க

    ReplyDelete
    Replies
    1. அதிகாரப் பூர்வ கொள்ளை நடக்குது அவ்வளவுதாங்க

      Delete
  3. TIMESNOW TV Channel தமிழில் ஒரு செய்தி தொலைக்காட்சி துவக்கி அதில் Arnab Goswami anchorராக வந்தால் உங்களிடம் வருகின்ற ஈமெயில் எல்லாவற்றையும் அவருக்கு Forward செய்து சம்பந்தபட்டவர்களிடம் கேட்க்க சொல்வோமா

    ReplyDelete
    Replies
    1. இப்போதுதான் இது மாதிரி சில மெயில்கள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவேளை இந்த பதிவை படித்து விட்டு மேலும் அதிகம் வரும் போது நீங்கள் சொன்னபடி செய்யலாம்தான்.

      Delete
  4. its like watching a b-grade political movie.. but sadly thats the state we are in - a b-grade people..

    ReplyDelete
    Replies
    1. நல்லவர்கள் அமைதியாக இருப்பதால்தான் இப்படி பி-கிரேடு ஆட்சியும் பி-கிரேடு மக்களும் கோலோட்சிக் கொண்டிருக்கின்றனர்

      Delete
  5. என்னங்க இது அக்கிரமமா இருக்கு! இப்படியெல்லாம் கூடவா கொள்ளை அடிப்பாங்க மக்களுக்கு 'சேவை' செய்யும் அமைச்சர்கள்?

    ரொம்ப அசிங்கமா இருக்கே:(

    ReplyDelete
    Replies
    1. இப்படிதான் நமது அரசியல் தலைகள் மக்களுக்கு சேவை செய்கிறார்களம்மா

      Delete
  6. இவ்வளவு நடக்குமா ? என்ன நடவடிக்கை எடுப்பாங்க ?

    ReplyDelete
  7. இந்த நிகழ்வுகள் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது . இதில் அதிகமாக பாதிக்க படுபவர்கள் சிறிய ( Mini bus இல்லை ) பஸ் முதலாளிகள் தான்

    ReplyDelete
  8. என்னஇது ரொம்ப சின்ன புள்ளதனமா சர்வ் சாதாரணமான கொள்ளைகே போய் கம்ளைன்டா ........இதுக்கு மேல எவ்வளவோ இருக்கு . இது களை எடுக்கும் விஷயமல்ல எ தனையோ பல நூறு வருடத்து ஆலமரங்கள் பல ஆயிரம் விழுதுகளோடு வேர் பரப்பி இங்கு ஆக்ரமித்துள்ளது இதை சாதரணமாக வெட்டி வீழ்த்த முடியுமா ?

    ReplyDelete
  9. இந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ..ஆனால் இந்த அரசு சாராயக்கடையில் சம்பாரிப்பதை பார்த்தாலே, இவற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை.இவர்கள் ஆட்சியில் எல்லாரும் பிணந்தின்னி பேய்களாகத் தான் இருப்பார்களோ என்று தோன்றுகிறது..நான் கூட பல நேரங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும் படி முதலமைச்சருக்கு மெயில் கடிதம் எழுதுவது பற்றி யோசித்திருக்கிறேன்..ஆனால் இவர்கள் எந்த மெயில் லையோ கடிதத்தையோ பார்க்க மாட்டார்கள் என்பதை மட்டும் ஆழ் மனது தெளிவாய் சொன்னது.அதுவும் உண்மை தான் போல் இருக்கிறது .ஓட்டு போட்டவனின் உயிரை எடுக்கும் உன்னத ஆட்சி ...வாழட்டும் தமிழக அரசு,நிறையட்டும் உன் கல்லாப் பெட்டி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.